துபாய் இளவரசருக்கு டில்லியில் சிவப்பு கம்பள வரவேற்பு

இரண்டு நாள் பயணமாக, இந்தியா வந்துள்ள துபாய் பட்டத்து இளவரசர் ஷேக் ஹம்தான் பின் முகமது அல் மக்தூம்க்கு டில்லியில் சிவப்பு கம்பள வரவேற்பு அளிக்கப்பட்டது.

2 நாட்கள் அரசு முறை பயணமாக துபாய் பட்டத்து இளவரசர் ஷேக் ஹம்தான் இன்று (ஏப்ரல் 8) இந்தியா வருந்தார். டில்லி விமான நிலையத்தில் அவரை மத்திய சுற்றுலா மற்றும் பெட்ரோலியம் துறை இணை அமைச்சர் சுரேஷ் கோபி வரவேற்றார். டில்லி விமான நிலையத்தில் துபாய் இளவரசர் இறங்கியதும் இசை நிகழ்ச்சிகள் நடந்தது.

அவருக்கு டில்லியில் சிவப்பு கம்பள வரவேற்பு அளிக்கப்பட்டது. அவர் பிரதமர் மோடியை சந்திக்கிறார். இந்த சந்திப்பின்போது இருநாட்டு உறவு உள்பட பல்வேறு விவகாரங்கள் குறித்து ஆலோசனை நடத்த உள்ளனர்.

இது குறித்து மத்திய வெளியுறவுத்துறை செய்தித் தொடர்பாளர் ரந்தீர் ஜெய்ஸ்வால் கூறியதாவது: துபாயின் பட்டத்து இளவரசர் வருகை இரு நாட்டு உறவுகளின் மைல்கல்.அவருக்கு விமான நிலையத்தில் சம்பிரதாய ரீதியான மரியாதையுடன் வரவேற்பு அளிக்கப்பட்டது, என்றார்.

துபாய் இளவரசர் ஷேக் ஹம்தான் மத்திய அமைச்சர் ஜெய்சங்கரை சந்தித்து பேசினார். ஐக்கிய அரபு அமீரகம், இந்தியா இடையேயான உறவு, வர்த்தகம், தொழில் உள்பட பல்வேறு துறைகள் குறித்து ஆலோசனை நடைபெற்றது.

Comments are closed.

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

பொய் பிரச்சாரம் செய்யும் பாகிஸ� ...

பொய் பிரச்சாரம் செய்யும் பாகிஸ்தான் – உமர் அப்துல்லா 'பாகிஸ்தான் பொய் பிரசாரம் செய்கிறது. அது உலகிற்கே தெரியும்' ...

பாகிஸ்தான் பொருளாதாரத்தையே நி� ...

பாகிஸ்தான் பொருளாதாரத்தையே நிலைகுலைய செய்துவிட்டார் பிரதமர் மோடி புதுடில்லி: இந்தியா சர்வதேச எல்லையைக் கடந்து தங்களின் எல்லைக்குள் ...

டில்லியில் முப்படை தலைமை தளபதி� ...

டில்லியில் முப்படை தலைமை தளபதிகளுடன் பிரதமர் மோடி அவசர ஆலோசனை டில்லியில் முப்படை தலைமை தளபதிகளுடன் பிரதமர் மோடி ஆலோசனை ...

புத்தரின் போதனைகள் உலக அமைதிக் ...

புத்தரின் போதனைகள்  உலக அமைதிக்கு வழிவகுக்கும் – பிரதமர் மோடி ''புத்தரின் போதனைகள் எப்போதும் உலக சமூகத்தை அமைதியை நோக்கி ...

இந்தியா – பாகிஸ்தான் ராணுவ அத� ...

இந்தியா – பாகிஸ்தான் ராணுவ அதிகாரிகள்  இன்று பேச்சு வார்த்தை இந்தியா- பாகிஸ்தான் ராணுவ அதிகாரிகள் இன்று மாலை பேச்சு ...

பாகிஸ்தானும் பயங்கரவாதமும்… � ...

பாகிஸ்தானும் பயங்கரவாதமும்… ஆதாரத்துடன் ஐ.நா.,வை நாடும் இந்தியா! பயங்கரவாதிகளுடன் பாகிஸ்தானுக்கு இருக்கும் நேரடி தொடர்பு குறித்த புதிய ...

மருத்துவ செய்திகள்

மாம்பூவின் மருத்துவக் குணம்

மாங்காய், மாம்பழம் இவை போன்று மாம்பூவும் மருத்துவத்திற்கு மிகச் சிறந்தது.

மாதுளம் பூவின் மருத்துவக் குணம்

மாதுளம் பூ பல வகை நோய்களுக்கு அருமருந்தாக உபயோகப்படுகிறது. இப்பூவினால் இரத்த மூலம், ...

“தீதும் நன்றும் பிறர் தர வாரா”

ஒரு கிலோ மிளகாய் ரூ.120 ஆனால் மிளகாய்ப்பொடி ரூ.80...? தோராயமாக மூன்றரைக் கிலோ ...