ஆழமாக வேரூன்றிய இந்தியா – அமீரக நட்பு : பிரதமர் மோடி பெருமிதம்

‘இந்தியா -ஐக்கிய அரபு எமிரேட்ஸ் இடையிலான நட்பு ஆழமாக வேரூன்றியது’ என பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.

வளைகுடா நாடான ஐக்கிய அரபு அமீரகத்தில் லட்சக்கணக்கான இந்தியர்கள் பணியாற்றி வருகின்றனர். இந்தியாவின் மிக நெருங்கிய நட்பு நாடாக அமீரகம் உள்ளது. அமீரகத்தின் துபாய் பட்டத்து இளவரசரும், ஐக்கிய அரபு எமிரேட்ஸ் பாதுகாப்பு அமைச்சருமான ஷேக் ஹம்தான் பின் முகமது பின் ரஷீத் அல் மக்தூம் இரண்டு நாள் அரசு முறை பயணமாக இந்தியா வந்துள்ளார்.அவர் இன்று டில்லியில் பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்து பேசினார்.

இந்த சந்திப்பைத் தொடர்ந்து, பிரதமர் மோடி சமூக வலைதளத்தில் வெளியிட்டுள்ள பதிவில் கூறி இருப்பதாவது: துபாயின் பட்டத்து இளவரசர் ஷேக் ஹம்தான் பின் முகமது பின் ரஷீத் அல் மக்தூமை சந்தித்ததில் மகிழ்ச்சி. இந்தியா-ஐக்கிய அரபு எமிரேட்ஸ் கூட்டாண்மையை முன்னேற்றுவதில் துபாய் முக்கிய பங்கு வகித்துள்ளது.

இந்தியா-ஐக்கிய அரபு எமிரேட்ஸ் நட்பு ஆழமாக வேரூன்றியது. துபாய் பட்டத்து இளவரசர் வருகை எதிர்காலத்தில் இன்னும் உறவுகளை வலுப்படுத்த வழிவகுக்கும். இவ்வாறு பிரதமர் மோடி கூறியுள்ளார்.

சந்திப்பு குறித்து துபாய் இளவரசர் ஷேக் ஹம்தான் கூறியதாவது: புது டில்லியில் இன்று பிரதமர் நரேந்திர மோடியைச் சந்தித்தது மகிழ்ச்சியாக இருந்தது. எங்களது சந்திப்பு ஐக்கிய அரபு எமிரேட்ஸ்-இந்தியா இடையே உறவுகளின் வலிமையை மீண்டும் உறுதிப்படுத்தின. இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

Comments are closed.

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

குற்றங்கள் அதிகரிப்புக்கு தி.ம� ...

குற்றங்கள் அதிகரிப்புக்கு தி.மு.க., அரசு பொறுப்பு ஏற்கணும்: நயினார் நாகேந்திரன் தமிழகத்தில் குற்றங்கள் 52% அதிகரித்துள்ளன. மாநில அரசு இதற்கு ...

பாகிஸ்தானிடம் அணு ஆயுதம்; சர்வத ...

பாகிஸ்தானிடம் அணு ஆயுதம்; சர்வதேச அமைப்புக்கு ராஜ்நாத் கேள்வி ''பாகிஸ்தானிடம் இருக்கும் அணு ஆயுதங்களை சர்வதேச அணு சக்தி ...

ஜம்மு காஷ்மீர் புறப்பட்டார் ரா� ...

ஜம்மு காஷ்மீர் புறப்பட்டார் ராஜ்நாத் சிங் பயங்கரவாதிகளுக்கு எதிரான ஆபரேஷன் சிந்தூர் தாக்குதலுக்குப் பிறகு பாதுகாப்புத்துறை ...

புதிய ஏவுகணை பார்கவ அஸ்திரம் சோ ...

புதிய ஏவுகணை பார்கவ அஸ்திரம் சோதனை வெற்றி கொத்து கொத்தாக வரும் ட்ரோன் படைகளை தடுத்து அழிக்கும் ...

2026க்குள் மாவோயிஸ்டுகளுக்கு முட� ...

2026க்குள் மாவோயிஸ்டுகளுக்கு முடிவு கட்டுவோம்; அமித்ஷா மாவோயிஸ்டுகள் ஆதிக்கம் உள்ள கரேகுட்டா மலையில் மூவர்ணக் கொடி ...

இந்தியாவின் பாதுகாப்பு தளவாட ஏ� ...

இந்தியாவின் பாதுகாப்பு தளவாட ஏற்றுமதி 34 மடங்கு அதிகரிப்பு கடந்த தசாப்தத்தில் இந்தியாவின் பாதுகாப்பு தளவாட ஏற்றுமதி 34 ...

மருத்துவ செய்திகள்

மிளகாயின் மருத்துவக் குணம்

பசி தூண்டியாகவும், குடல் வாயு அகற்றியாகவும் செயல்படுகிறது.

சின்னம்மை ( நீர்க்கோளவான் )

சின்னம்மைக்கு காரணம் 'வேரிசெல்லா' என்கிற வைரசாகும், இது காற்றின் மூலம் பரவ கூடியது. ...

நீரிழிவு நோய் குறைந்த அளவு கலோரி தரும் உணவை சாப்பிட்டுவந்தால் குணமாகிவிடும்

உலகம் எங்கும் நீரிழிவு நோய் மக்களை பெரிய அளவில் வாட்டி வதக்கி வருகிறது ...