அமித்ஷாவை போல் இருக்க விரும்புகிறேன் – ரேகா குப்தா

:“மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவைப் போல இருக்க விரும்புகிறேன். அவர் துணிச்சலான ஆளுமை. என்னுடைய இரண்டாவது வழிகாட்டி, அமித்ஷா,” என, முதல்வர் ரேகா குப்தா தெரிவித்தார்.

டில்லி தலைமைச் செயலகத்தில் செய்தி நிறுவனத்திற்கு அவர் அளித்த பேட்டி:

பிரதமர் நரேந்திர மோடியை ஒரு துறவியாகக் கருதும் அதே வேளையில், மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவைப் போல இருக்க விரும்புகிறேன். அவர் துணிச்சலான ஆளுமை. என்னுடைய இரண்டாவது வழிகாட்டி, அமித்ஷா. அமித் ஷா நாட்டிற்காக பல பெரிய முடிவுகளை ஒருபோதும் தயங்காமல் எடுத்துள்ளார்.

எங்கள் கட்சியில் தங்கள் சொந்த வழிகளில் நாட்டிற்கு சேவை செய்வதற்காக தங்கள் வாழ்க்கையை அர்ப்பணித்த பலர் உள்ளனர். அவர்களில் நிதின் கட்கரியும் அமித் ஷாவும் ஒருவர்.

ஒவ்வொரு வெற்றிகரமான ஆணுக்கும் பின்னால் ஒரு பெண் இருக்கிறார் என்பது பழமொழி. ஆனால் இதற்கு நேர்மாறாகவும் இருக்கலாம். என் வாழ்க்கையையும் வெற்றியை வடிவமைப்பதில் முக்கிய சக்தியா என் கணவர் திகழ்கிறார்.

முதல்வராக பதவியேற்றதில் இருந்து குடும்பத்தினருடன் செலவிடும் நேரம் குறைந்துவிட்டது. என் மகன், மகளுடன் மூன்று அல்லது நான்கு நாட்களுக்கு ஒரு முறை மட்டுமே என்னால் பேச முடிகிறது.

என் குடும்பத்தினருக்காக என்னால் சமைக்க முடியவில்லை. முன்பு என் கணவருடன் மணிக்கணக்கில் பேசுவேன். ஆனால் இப்போது தொடர்ந்து என்னால் 10 நிமிடங்கள் கூட பேச முடியவில்லை.

என் அரசியல் வாழ்க்கைக்கு முழு ஒத்துழைப்பும் வழங்கியதற்காக என் பெரிய கூட்டுக்குடும்பத்திற்கு கடன்பட்டுள்ளேன்.

ஆண்டு முழுவதும் காற்று மாசுபாட்டை எதிர்த்துப் போராடுவதற்கான ஒரு புதுமையான தீர்வை நாங்கள் செயல்படுத்த உள்ளோம்.

முன்பு தண்ணீர் தெளிப்பான்கள் குளிர்காலத்தில் இரண்டு மாதங்களுக்கு மட்டுமே செயல்படும். பா.ஜ., ஆட்சிக்கு வந்த பிறகு, காற்று மாசுபாடு இரண்டு மாதங்கள் மட்டும் இருக்கும் ஒரு பிரச்னை அல்ல. அது ஆண்டு முழுவதும் இருக்கும் என்பதை நாங்கள் புரிந்துகொண்டோம்.

எனவே தண்ணீர் தெளிப்பான்களை ஆண்டு முழுவதும் செயல்படுத்த முடிவு செய்துள்ளோம். ரிங் ரோடுகளில் உள்ள தெருவிளக்கு கம்பங்களில் தண்ணீர் தெளிப்பான்களை நிறுவ திட்டமிட்டுள்ளோம்.

250 மாநகராட்சி வார்டுகளிலும் தலா நான்கு என, 1,000 தெளிப்பான்களை பொதுப்பணித்துறை ஆண்டு முழுவதும் பயன்படுத்தும்.

எங்கள் கொள்கைகள் மற்றும் முயற்சிகளில் நாங்கள் தெளிவாக இருக்கிறோம். எனவே முடிவுகளும் தெளிவாக இருக்கும்.

இவ்வாறு அவர் கூறினார்.

Comments are closed.

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

தீவிரவாதமும், அமைதிப் பேச்சுவா� ...

தீவிரவாதமும், அமைதிப் பேச்சுவார்த்தையும், ஒருங்கே செல்லவியலாது நாம் அனைவரும் கடந்த சில தினங்களில் நாட்டின் வலிமையையும் ...

பொய் பிரச்சாரம் செய்யும் பாகிஸ� ...

பொய் பிரச்சாரம் செய்யும் பாகிஸ்தான் – உமர் அப்துல்லா 'பாகிஸ்தான் பொய் பிரசாரம் செய்கிறது. அது உலகிற்கே தெரியும்' ...

பாகிஸ்தான் பொருளாதாரத்தையே நி� ...

பாகிஸ்தான் பொருளாதாரத்தையே நிலைகுலைய செய்துவிட்டார் பிரதமர் மோடி புதுடில்லி: இந்தியா சர்வதேச எல்லையைக் கடந்து தங்களின் எல்லைக்குள் ...

டில்லியில் முப்படை தலைமை தளபதி� ...

டில்லியில் முப்படை தலைமை தளபதிகளுடன் பிரதமர் மோடி அவசர ஆலோசனை டில்லியில் முப்படை தலைமை தளபதிகளுடன் பிரதமர் மோடி ஆலோசனை ...

புத்தரின் போதனைகள் உலக அமைதிக் ...

புத்தரின் போதனைகள்  உலக அமைதிக்கு வழிவகுக்கும் – பிரதமர் மோடி ''புத்தரின் போதனைகள் எப்போதும் உலக சமூகத்தை அமைதியை நோக்கி ...

இந்தியா – பாகிஸ்தான் ராணுவ அத� ...

இந்தியா – பாகிஸ்தான் ராணுவ அதிகாரிகள்  இன்று பேச்சு வார்த்தை இந்தியா- பாகிஸ்தான் ராணுவ அதிகாரிகள் இன்று மாலை பேச்சு ...

மருத்துவ செய்திகள்

நீரிழிவுநோய் உடையவர்களுக்குத் தேவைப்படும் உடற்பயிற்சிகள்

நீரிழிவுநோய் கட்டுப்பாட்டில்,உடற்பயிற்சி மிக முக்கிய இடத்தைப் பெறுகிறது. எனவே நீரிழிவுநோய் உடையவர்கள் தொடர்ந்து ...

சிறுகுறிஞ்சாவின் மருத்துவ குணம்

சிறுகுறிஞ்சா இலையை எடுத்துக் கொண்டு, தேவையான அளவு நாவல் கொட்டைகளை வெய்யிலில் காயவைத்து ...

பொடுகு நீங்க

பொடுகு காரணமாக தலையில்_அரிப்பு போன்றவை ஏற்படும். இதுபோன்ற பொடுகு பிரச்னையை திர்க சில ...