”உலகின் எந்த மூலையில் இருந்தாலும் பயங்கரவாதிகளை வேட்டையாடுவோம்” – பிரதமர் மோடி

”உலகின் எந்த மூலையில் இருந்தாலும் பயங்கரவாதிகளை வேட்டையாடுவோம்” என பீஹாரில் நடந்த நிகழ்ச்சியில் பிரதமர் மோடி உறுதி அளித்தார்.

பீஹாரில் நடந்த பொதுக்கூட்டத்தில் பிரதமர் மோடி பேசியதாவது: கார்கில் முதல் குமரி வரை வாழும் மக்கள் துக்கப்படுகிறோம். பஹல்காம் தாக்குதலால் நாடே கொந்தளிக்கிறது. பயங்கரவாதிகளை கட்டாயம் தண்டிப்போம். நாட்டில் பயங்கரவாதத்தை மொத்தமாக வேரறுப்போம். இந்த துயரமான நேரத்தில் எங்களுடன் துணை நிற்கும் பல்வேறு நாடுகளின் தலைவர்களுக்கு நன்றி.

உரிய தண்டனை
காஷ்மீர் தாக்குதல் தொடர்பாக பயங்கரவாதிகளுக்கு கனவிலும் நினைத்திராத அளவுக்கு தண்டனை கொடுக்கப்படும். பயங்கரவாத தாக்குதலால் நாடு முழுவதும் மக்கள் சோகத்துடனும், வலியுடனும் உள்ளார்கள். பாதிக்கப்பட்ட குடும்பங்களுடன் நாங்கள் துணை நிற்கிறோம். பயங்கரவாதிகள் ஒவ்வொருவரையும், அவர்களுக்கு உதவியவர்களையும் இந்தியா கண்டறியும்; அவர்களது செயலுக்கு உரிய தண்டனை வழங்கியே தீரும்.

வேட்டையாடுவோம்

பயங்கரவாத தாக்குதலால் இந்தியா துவண்டு போகாது. அவர்கள் கனவிலும் நினைத்திராத தண்டனை கொடுக்கப்படும். காஷ்மீரில் தாக்குதல் நடத்திய பயங்கரவாதிகள் உலகின் எந்த மூலையில் இருந்தாலும் கண்டுபிடித்து வேட்டையாடுவோம். இன்று பீஹார் மண்ணில் இருந்து இந்த உலகத்துக்கு சொல்கிறேன். பயங்கரவாதிகள் மண்ணோடு மண்ணாகும் நேரம் வந்துவிட்டது. பயங்கரவாதிகள் இருந்த இடம் தெரியாமல் ஆக்கிவிடுவோம். இவ்வாறு பிரதமர் மோடி பேசினார்.

Comments are closed.

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

பிரதமர் மோடிக்கு முழு ஆதரவு – � ...

பிரதமர் மோடிக்கு முழு ஆதரவு – அமெரிக்கா பஹல்காம் தாக்குதலுக்குப் பிறகு இந்தியா-பாகிஸ்தான் பதட்டங்கள் அதிகரித்து வரும் ...

ஆன்மிகமும், தொழில்நுட்பமும் இண� ...

ஆன்மிகமும், தொழில்நுட்பமும் இணைந்து செயல்பட முடியும்: ஜேபி நட்டா சமூகத்தின் முன்னேற்றத்திற்காக, ஆன்மிகமும் தொழில்நுட்பமும் எவ்வாறு இணைந்து செயலாற்ற ...

பயங்கரவாதம் மனிதகுலத்திற்கே ப� ...

பயங்கரவாதம் மனிதகுலத்திற்கே பெரிய அச்சுறுத்தல்; பிரதமர் மோடி பயங்கரவாதம் மனிதகுலத்திற்கு மிகப்பெரிய அச்சுறுத்தல் ஆகும். இதற்கு எதிராக ...

பாகிஸ்தானில் இருந்து பொருட்கள� ...

பாகிஸ்தானில் இருந்து பொருட்கள் இறக்குமதி செய்ய மத்திய அரசு தடை பாகிஸ்தானில் இருந்து பொருட்களை இறக்குமதி செய்ய மத்திய அரசு ...

ஆந்திராவில் 58,000 கோடி திட்டங்களு� ...

ஆந்திராவில் 58,000 கோடி திட்டங்களுக்கான அடிக்கல் ஆந்திராவில் முதல்வர் சந்திரபாபு நாயுடு தலைமையில் தெலுங்கு தேசம், ...

நாட்டின் பொருளாதார ஸ்திரத்தன்� ...

நாட்டின் பொருளாதார ஸ்திரத்தன்மை அதிகரிக்கும் விழிஞ்ஞம் துறைமுகத்தை திறந்த பிரதமர் பேச்சு கேரளாவின் திருவனந்தபுரத்தில், விழிஞ்ஞம் சர்வதேச துறைமுகத்தை திறந்து வைத்த ...

மருத்துவ செய்திகள்

சுவையான தகவல்கள்

ஆரோக்கியமாக வாழ வேண்டும் என்கிற ஆசை எல்லோருக்கும் உள்ள நியாயமான ஆசை. ஆனால் ...

கோவிட் 19 பற்றிய சந்தேகங்கள்

*கரோனா இரண்டாம் அலையில் நாம் அடித்துசெல்லப்பட்டு கொண்டு இருக்கும் நிலையில் கோவிட் 19 ...

“தீதும் நன்றும் பிறர் தர வாரா”

ஒரு கிலோ மிளகாய் ரூ.120 ஆனால் மிளகாய்ப்பொடி ரூ.80...? தோராயமாக மூன்றரைக் கிலோ ...