பாகிஸ்தானும் பயங்கரவாதமும்… ஆதாரத்துடன் ஐ.நா.,வை நாடும் இந்தியா!

பயங்கரவாதிகளுடன் பாகிஸ்தானுக்கு இருக்கும் நேரடி தொடர்பு குறித்த புதிய ஆதாரங்களுடன் ஐ.நா., பாதுகாப்பு கவுன்சிலை சந்தித்து இந்தியா புகார் அளிக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

இந்தியா, பாகிஸ்தான் இடையிலான போர் நேற்று வெளியிடப்பட்ட அறிவிப்பின்படி முடிவுக்கு வந்தது. இந்தியாவின் அதிரடி தாக்குதலை தாக்குப் பிடிக்காத பாகிஸ்தான், அந்நாட்டு டி.ஜி.எம்.ஓ

., மூலம் வேண்டிக் கொண்டதன் பேரில், இந்தியா போர் நிறுத்தத்திற்கு ஒப்புக் கொண்டது.

இருப்பினும், இந்திய நிலைகள் மீது பாகிஸ்தான் நேற்றிரவு தொடர்ந்து தாக்குதல் நடத்தியுள்ளது. இது இந்தியாவை மீண்டும் கோபத்திற்கு ஆளாக்கியுள்ளது.

இது குறித்து பேசிய இந்திய வெளியுறவுத்துறை செயலர் விக்ரம் மிஸ்ரி, பாகிஸ்தானின் இந்தப் போர் நிறுத்த மீறலை இந்தியா அதி தீவிரமாக எடுத்துக் கொண்டுள்ளது. பாகிஸ்தானின் ஒவ்வொரு தாக்குதலுக்கும் இந்திய ராணுவம் தக்க பதிலடி கொடுத்து வருகிறது. நமது படைகள் எல்லையில் தீவிரமாக கண்காணித்து வருகிறது, எனக் கூறினார்.

இந்தநிலையில், ஐ.நா., பாதுகாப்பு கவுன்சிலை (தீர்மானம் 1267) இந்தியா சந்தித்து, பஹல்காம் பயங்கரவாத தாக்குதல் சம்பவம் தொடர்பாக புகார் அளிக்க இருக்கிறது. இந்த வாரத்தில் நடக்கும் இந்த சந்திப்பின் போது, பயங்கரவாதிகளுக்கு பாகிஸ்தானுக்கு இருக்கும் நேரடி தொடர்பு பற்றிய புது ஆதாரங்களையும் இந்தியா சமர்ப்பிக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

ஐ.நா., பாதுகாப்பு கவுன்சில் தீர்மானம் 1267


ஐ.நா., பாதுகாப்பு கவுன்சில் தீர்மானம் 1267 என்பது பயங்கரவாத தடுப்பு நடவடிக்கைகளுக்காக எடுக்கப்பட்ட ஒரு தீர்மானம். இந்தத் தீர்மானம் பயங்கரவாதப் பணப்பரிமாற்றம், ஆயுதங்கள் பெறுவதை தடுக்க குழுவை அமைத்து செயல்படும். பயங்கரவாதிகள் மற்றும் அவர்களுடன் தொடர்புடையவர்கள் மீது பொருளாதாரத் தடைகள் விதித்து, நிதி மற்றும் ஆயுத உதவிகளை தடுப்பதில் இந்தக் குழு முக்கிய பங்காற்றும்.

Comments are closed.

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

பெண்களுக்கு எதிரான குற்றம்; மறை ...

பெண்களுக்கு எதிரான குற்றம்; மறைக்க தமிழக அரசு முயற்சி தி.மு.க., ஆட்சியில் பெண்களுக்கு எதிரான பாலியல் வன்கொடுமைகள் அதிகரித்துள்ளன. ...

தமிழகத்தில் தொழில் துவங்க தி.மு ...

தமிழகத்தில் தொழில் துவங்க தி.மு.க.,வினருக்கு கப்பம்: அண்ணாமலை குற்றச்சாட்டு தி.மு.க.,வினருக்கு கப்பம் கட்டினால்தான், தமிழகத்தில் தொழில் நடத்த முடியும் ...

வளர்ச்சி அடைந்த பாரதமே, ஒவ்வொரு ...

வளர்ச்சி அடைந்த பாரதமே, ஒவ்வொரு இந்தியரின் இலக்கு ''வளர்ச்சி அடைந்த பாரதமே, ஒவ்வொரு இந்தியரின் இலக்கு'' என ...

டில்லியில் நிடி ஆயோக் கூட்டம்; � ...

டில்லியில் நிடி ஆயோக் கூட்டம்; மாநில முதல்வர்கள் பங்கேற்பு டில்லியில் இன்று (மே 24) பிரதமர் மோடி தலைமையில் ...

பயங்கரவாத எதிர்ப்பு நடவடிக்கை; ...

பயங்கரவாத எதிர்ப்பு நடவடிக்கை; இந்தியாவுக்கு ரஷ்யா ஆதரவு பஹல்காம் பயங்கரவாத தாக்குதலுக்கு பதிலடி தரும் வகையில், பாகிஸ்தானுக்கு ...

பாகிஸ்தான் ராணுவத்தை அம்பலப்ப� ...

பாகிஸ்தான்  ராணுவத்தை அம்பலப்படுத்திய ஆப்பரேஷன் சிந்துார் ஆப்பரேஷன் சிந்துாருக்கு பின் தான், இந்தியாவில் நடைபெறும் அனைத்து ...

மருத்துவ செய்திகள்

நீரிழிவு நோய் குறைந்த அளவு கலோரி தரும் உணவை சாப்பிட்டுவந்தால் குணமாகிவிடும்

உலகம் எங்கும் நீரிழிவு நோய் மக்களை பெரிய அளவில் வாட்டி வதக்கி வருகிறது ...

மஞ்சளின் மருத்துவக் குணம்

பசித் தூண்டியாகவும், நோய் தணித்தல், குடல் வாயு அகற்றியாகவும், தாது அழுகல் நீக்கியாகவும், ...

நீரிழிவுநோய் உள்ளவர்களுக்கான உணவுமுறை

நீரிழிவுநோய்க் கட்டுப்பாட்டில் உணவுமுறை ஒரு முக்கியப்பங்கு வகிக்கிறது. அதனால் நீரிழிவுநோய் உள்ளவர்கள் சரியான, ...