தேசிய வளர்ச்சி குழு கூட்டத்தில் போதுமான அவகாசம் கொடுக்காதது மிகவும் கண்டிக்கத்தக்து

தேசிய வளர்ச்சி குழு கூட்டத்தில் போதுமான அவகாசம் கொடுக்காதது மிகவும் கண்டிக்கத்தக்து  டில்லியில் நடைபெற்ற தேசிய வளர்ச்சி குழு கூட்டத்தில் பங்கேற்ற தமிழக முதல்வர் அவர்களுக்கு தமிழகத்தின் குறைகளை எடுத்துக்கூற போதுமான அவகாசம் கொடுக்காதது மிகவும் கண்டிக்கத்தக்க ஒன்றாகும்.

மத்தியில் ஆளும் காங்கிரஸ் கூட்டணி அரசு தனது கூட்டணியில் அங்கம் வகிக்காத கட்சிகள் ஆளும் மாநிலங்களை மாற்றான்தாய் மனப்பான்மையோடு நடத்துவதும் அம்மாநிலங்களுக்கு தேவையான வளர்ச்சி திட்டங்களை போதுமான அளவு கொடுக்காமல் புறக்கணிப்பதும் வழக்கமான ஒன்றாக நடந்து வருகிறது.

அரசு கேபிள் கார்ப்பரேஷன் தொடர்பான மசோதாவிற்கு அனுமதி கொடுக்காமல் இழுத்தடிப்பதும். காவிரி பிரச்சினை. மின்சாரம். மண்ணெண்ணெய் வழங்குதல் போன்ற பல விஷயங்களில் தமிழகத்தின் நலனுக்கு புறம்பாக நடந்து கொள்வதும் மத்திய காங்கிரஸ் அரசின் வழக்கமான ஒன்றாக மாறியுள்ளது.

இந்நிலையில் தேசிய வளர்ச்சிக்குழு கூட்டத்தில் தமிழகத்தின் கவலைகளை எடுத்துக் கூறக்கூட வாய்ப்பளிக்காமல் தமிழக முதல்வரை அவமதித்திருப்பது தமிழகத்திற்கு ஏற்பட்ட அவமானமாகும். மத்திய அரசின் தவறான இந்த செயலை பாரதிய ஜனதா கட்சி வன்மையாக கண்டிக்கிறது. அழைத்து வைத்து அவமானப்படுத்தும் இச்செயலை இனிமேலும் தொடரக் கூடாது என பிரதமரை கேட்டுக் கொள்கிறேன்.

Leave a Reply

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந் ...

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந்துள்ளேன் கோவையில் கஸ்தூரி நாயக்கன்பாளையம் பகுதியில் பிரச்சாரம் மேற்கொண்ட அண்ணாமலை ...

இது சாதாரண தேர்தல் அல்ல

இது சாதாரண தேர்தல் அல்ல பாஜக மற்றும் கூட்டணி வேட்பாளர்கள் ஒவ்வொருவரும் வெற்றிபெற்று, நாடாளுமன்றத்தில் ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாதத ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாததை 10 ஆண்டுகளில் செய்து முடித்தேன் காங்கிரஸ்கட்சி பிரிவினைவாதத்தை தூண்டியது. ஆனால், நான் பிராந்தியத்தில் அமைதி ...

பால் மற்றும் மின் கட்டண உயர்வே ...

பால் மற்றும்  மின் கட்டண உயர்வே திமுக -வின் சாதனை இந்தியாவின் பாதுகாப்பை பிரதமர் மோடி உறுதி செய்துள்ளார்'' என ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் வ ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் விரும்பும் மோடி பிரதமர் நரேந்திரமோடி மற்றும் மைக்ரோசாப்ட் நிறுவனர் பில்கேட்ஸ் இடையே ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் த ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் தொல்லை கொடுப்பதும் காங்கிரஸின்  கலாச்சாரம் நீதித்துறையின்மீது அழுத்தம் தரப்படுவதாகவும் நீதிமன்றங்கள் அவமதிப்படுவதாகவும் நூற்றுக்கணக்கான வழக்குரைஞர்கள் ...

மருத்துவ செய்திகள்

பேரீச்சையின் மருத்துவக் குணம்

பேரீச்சை ஊட்டச்சத்து நிரம்பியது. 'டானிக்'காக செயல்படும். சிறந்த மலமிலக்கியும் கூட. அதிகாலையில் பாலுடன் ...

‘எலும்பு வங்கி’ என்றால் என்ன?

உடலுறுப்புகளிலேயே இரண்டாவதாக, அதிகமாக கொடை (தனம்) செய்யப்படுவது எலும்புதான் (Bone Donation). ரத்தம்முதலாவது. ...

வயிற்றுப்புண் மற்றும் வாயுக் கோளாறுகள் நீங்க உணவுப் பொருட்கள்

ஜீரணமாகாத காரணத்தால் புளிச்ச ஏப்பம், சாப்பிட்ட உணவு மேல் கிளம்பி விடுதல், வாயில் ...