பத்து வருடத்தில் மோடியின் ஆட்சியில் குஜராத் நல்ல முன்னேற்றத்தை கண்டுள்ளது

பத்து வருடத்தில் மோடியின்  ஆட்சியில் குஜராத் நல்ல முன்னேற்றத்தை கண்டுள்ளது குஜராத் சட்டசபை தேர்தலில் வெற்றி பெற்று மூன்றாவது முறையாக முதல்வர் பதவி ஏற்றுள்ள நரேந்திரமோடிக்கு அமெரிக்க பிரதிநிதிகள் சபை குடியரசு கட்சியை சேர்ந்த எம்.பி. ஆரோன் ஸ்ஷோக் பாராட்டு தெரிவித்துள்ளார்.

இல்லிநாய்ஸ் மாகாணத்தின் குடியரசு கட்சியின் எம்பி.யான ஆரோன், அனைத்து தரப்பினரின் ஆதரவுடன் மோடி வெற்றி பெற்றுள்ளார். குஜராத்தை நோக்கி ஏராளமான தொழில் நிறுவனங்கள் செல்கின்றன . குஜராத்தில் எல்லோரும் முன்னேறும்வகையில் பொருளாதாரத்தை முன்னேற்ற பாதையில் கொண்டு செல்கிறார்.

இதற்குமுன்பு 2 முறை அவர் முதல்வராக பதவி ஏற்று சிறந்தமுறையில் ஆட்சிசெய்ததால் 3-வது முறையும் படித்தவர்கள், தொழிலதிபர்கள், மதவாதிகள் உள்ளிட்ட அனைத்து தரப்பினர்களின் ஆதரவோடு மோடி வெற்றி பெற்று பெரும்பான்மை பலத்துடன் ஆட்சியைபிடித்துள்ளார். அமெரிக்காவிலும் இந்தியாவிலும் சாதாரணமாக யாரும் தேர்ந்தெடுக்க படுவதில்லை. அவர்களின் ஆட்சியின்கீழ் நிர்வாகம் நல்ல முறையில் இருக்கிறதா என்பதை மக்கள் உன்னிப்பாக கவனித்துத் தான் ஒருமுடிவுக்கு வருகிறார்கள் . கடந்த பத்து வருடத்தில் நரேந்திர மோடியின் ஆட்சியில் குஜராத் தொழில் வளம் பெருகி பொருளாதாரத்தில் நல்ல முன்னேற்றத்தை கண்டுள்ளது என்றும் ஆரோன் தெரிவித்தார்.

Leave a Reply

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

சாதூரியம், அரவணைப்பு நிதின் நபி ...

சாதூரியம், அரவணைப்பு நிதின் நபின் பா.ஜ.க-விற்கு புதிய தலைவர் நியமிக்கும்திட்டம் நீண்ட நாட்களாக கிடப்பில் ...

கேரளா தேர்தல் களம்: மாறிவரும் ம ...

கேரளா தேர்தல் களம்: மாறிவரும்  முக்கோண அரசியல்! தற்போதைய முக்கோண அரசியல் போட்டி அதிக சுவாரசியத்தை ஏற்படுத்தி ...

மதுரை எய்ம்ஸ் கட்டுமானப் பணிகள் நவ.30 ஆம் தேதிவரை ...

மிரட்டும் எலி காய்ச்சல்

மிரட்டும் எலி காய்ச்சல் கேரளாவில் லெப்டோஸ்பிரோசிஸ் (எலி காய்ச்சல்) தீவிரமாக பரவிவருகிறது. இந்த ...

மார்ச் 31ம் தேதிக்குள் இந்தியா ந ...

மார்ச் 31ம் தேதிக்குள் இந்தியா நக்சலிசத்திலிருந்து விடுபடும் 2026ம் ஆண்டு மார்ச் 31ம் தேதிக்குள் இந்தியா நக்சலிசத்திலிருந்து ...

அன்று அயோத்தி இன்று திருப்பரங் ...

அன்று அயோத்தி இன்று திருப்பரங்குன்றம் திருப்பரங்குன்றம் மலையில் கார்த்திகை அன்று கடந்த பலஆண்டுகளாக ஏற்றப்பட்டு ...

மருத்துவ செய்திகள்

புதினாவின் மருத்துவக் குணம்

இதைப் புதினா என்றும் கூறுவர். மணமுள்ள இது கொடியாகத் தரையில் படரும். சாம்பார், ...

ஆப்பிளின் மருத்துவக் குணம்

ஆப்பிள் தாகத்தை தணிக்கும். எளிதில் செரிமானம் ஆகிவிடும். குடல்களை வலுவாக்கும். வயிற்றுப் பொருமலையும், ...

உடல் பலம் பெற

100 எறுக்கம் பூக்களை எடுத்து அதை நன்றாக உலர்த்தி, லவங்கம், சாதிக்காய், சாதிப்பத்திரி ...