”2026 சட்டசபை தேர்தலில் தி.மு.க., தமிழகத்தில் இருந்து அவுட் ஆப் கன்ட்ரோலுக்கு செல்ல வேண்டும் என்பதே என் எண்ணமும் செயலுமாக இருக்கும்,” என, திண்டுக்கல்லில் பா.ஜ., மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் தெரிவித்தார்.
திண்டுக்கல்லில் நடந்த பா.ஜ., மதுரை பெருங்கோட்ட தொண்டர் சந்திப்பில் நயினார் நாகேந்திரன் பேசியதாவது: தமிழகத்தில் இரட்டை இலை – தாமரை கூட்டணி உறுதியாகியுள்ளது. இதில் யார் யார் எவ்வளவு பங்கேற்பு என்பது எனக்கும், நமக்கும் தேவையில்லை. பா.ஜ., தொண்டர்கள் சமூக வலைதளங்களில் இதுகுறித்து பகிர்வது தொடர்பான பிரச்னைகள் எதுவும் வரக்கூடாது.
தி.மு.க.,வை ஆட்சியில் இருந்து அகற்றுவது மட்டுமே நோக்கமாக இருக்க வேண்டும். தேசிய ஜனநாயக கூட்டணியில் இருப்பவர்கள் குறித்து மத்திய அமைச்சர் அமித்ஷா, அ.தி.மு.க., பொது செயலாளர் பழனிசாமி முடிவு எடுப்பர்.
பா.ஜ., கூட்டங்களில் இனி வரும் காலங்களில் வாழ்க, வாழ்க என அழைப்பது பிரதமர் மோடிக்கும், அமைச்சர் அமித்ஷாவிற்கும் மட்டுமே இருக்க வேண்டும்.
தமிழகத்தில் தேசிய ஜனநாயக ஆட்சி பழனிசாமி தலைமையில் நடக்கும் போது சட்டசபையில் பா.ஜ.,வை சேர்ந்தவர்கள் அதிகம் இருப்பர். மத்திய அரசிடம் இருந்து தமிழகம் அவுட் ஆப் கன்ட்ரோலுக்கு சென்று விட்டதாக முதல்வர் ஸ்டாலின் தெரிவித்தார். 2026 சட்டசபை தேர்தலில் தி.மு.க., தமிழகத்தில் இருந்து அவுட் ஆப் கன்ட்ரோலுக்கு செல்ல வேண்டும் என்பதே என் எண்ணமும் செயலுமாக இருக்கும்.
அரியானா, மகாராஷ்டிரா, டில்லியில் மத்திய அமைச்சர் அமித்ஷா பா.ஜ., ஆட்சியை கொண்டு வந்தார். தமிழகத்திலும் பா.ஜ., ஆட்சியை கொண்டு வருவார் என்றார்.
தேசிய பொதுக்குழு உறுப்பினர் எச். ராஜா பேசியதாவது: தமிழகத்தில் அ.தி.மு.க.,- பா.ஜ., கூட்டணி 53 சதவீதம் பெறும் என்ற கருத்து கணிப்பு வெளியாகியுள்ளது. இதனால் திருத்தணியில் பேசும் போது முதல்வர் ஸ்டாலின் தடுமாறினார். 2010ல் லோக்சபாவில் நீட் சட்டத்தை அறிமுகப்படுத்தியவர் தி.மு.க., மத்திய முன்னாள் அமைச்சர் காந்தி செல்வன். டாஸ்மாக் ஊழலில் 20 நாட்களாக நீதிமன்றத்தில் வழக்கை தொடர்ந்து இழுத்தடிக்காமல் தைரியமாக வழக்கை சந்திக்கிறோம் என தி.மு.க., அரசு தெரிவித்திருக்க வேண்டும் என்றார்.
பா.ஜ., மாநில பொது செயலாளர் ஸ்ரீனிவாசன் பேசியதாவது: மத்திய அரசுக்கு சவால் விட்டதால் முன்னாள் முதல்வர் கருணாநிதியால் 20 ஆண்டுகள் ஆட்சிக்கு வரமுடியவில்லை. முதல்வர் ஸ்டாலின் விடுத்துள்ள சவாலால் 200 ஆண்டுகள் ஆனாலும் அடுத்து ஆட்சிக்கு வர முடியாது. பா.ஜ., தொண்டர்களுக்கு வரும் 360 நாட்களுக்கு ஒரே லட்சியம் தி.மு.க., ஆட்சியை அகற்றுவதாக இருக்க வேண்டும். மதுரை பெருங்கோட்டத்தில் 25 சட்டசபை தொகுதிகளிலும் நம் கூட்டணி எம்.எல்.ஏ.,க்கள் வெற்றி பெறுவார்கள் என்றார்.
முற்றிய முருங்கைக் காய் விதைகளை தனியாக எடுத்து அதை நன்றாக காய வைத்து ... |
மாங்காய், மாம்பழம் இவை போன்று மாம்பூவும் மருத்துவத்திற்கு மிகச் சிறந்தது. |
இறைச்சி உணவில் தசையை வளர்க்கிற சத்தும், பி வைட்டமின் என்னும் உயிர்ச்சத்தும் நிறைய ... |