ஆயிரம் வருடங்களுக்கு முன்பே அணுவைப் பற்றி அறிந்திருந்த நம் முன்னோர்கள்

 ஆயிரம் வருடங்களுக்கு முன்பே அணுவைப் பற்றி அறிந்திருந்த  நம் முன்னோர்கள்அணு குறித்து அறிவியல் ஆர்வம் காட்டியது சில நூறு வருடங்களாகத்தான் எண்ட்றாலும் நம் முன்னோர்கள் ஆயிரம் வருடங்களுக்கு முன்பே அணுவைப் பற்றி அறிந்திருந்தனர். முதலில் நம் முன்னோர்கள் சொன்னதையும் பிறகு இன்றைய விஞ்ஞானம் சொல்வதையும் பார்ப்போம்.

ஜீவனின் வடிவத்தைச் சொல்ல வந்த திருமூலர் ஒரு மாட்டின் முடியை எடுத்து ஆயிரம் கோடி இழைகளாகப் பகுப்பது பற்றிப் பேசுகிறார். ஒரு மட்டின் முடியை எடுத்து அதை நூறு கூறாகச் கொல்கிறார். பின்னர் அதிலிருந்த்து ஒரு முடியெடுத்து ஆயிரம் கூறாகச் சொல்கிறார். அவ்வாறு ஆயிரம் கூறு போட்டதில் ஒரு முடியை எடுத்து அதை நூறாயிரம் கூறு போடச் சொல்கிறார். இது தான் ஜீவனின் வடிவம் என்கிறார்.
(எ.கா :- 100 * 1000 * 1,00,000 = 10,00,00,00,000)

ஒரு மாட்டின் முடியை ஆயிரம் கோடி இழைகளாகப் பகுப்பது பற்றி திருமூலர் விவரிப்பதைப் பார்த்தால் நம் மின்னோர் அணுவைப் பிளப்பதை மனக்கண்ணில் கண்டார்கள் என்றே தோன்றுகிறது. பாடல் இதோ:-
"மேவிய சீவன் வடிவது சொல்லிடில்
கோவின் பயிரொன்று நூறுடன் கூறிட்டு
மேவிய கூறது ஆயிரமானால்
ஆவியின் கூறு நூறாயிரத்தொன்றாகுமே"
திருமூலர் இன்னொறு பாடலில் அணுவில் இறைவனும், இறைவனில் அணுவும் இறண்டறக் கலந்து இருப்பதைப் பெறும்பாலோர் உணர்வதில்லை. இணையில்லாத ஈசன் அப்படி பிரபஞ்சம் முழுவதும் எங்கும் நிறைந்திக்கிறான்-என்று சொல்கிறார்.

"அணுவும் அவனும் அவனுள் அணுவும்
கணுஅற நின்ற கலந்து உணரார்
இணையிலி ஈசன் அவனெங்கும் ஆகித்
தணிவற நின்றான் சராசரம் தானே"

சுமார் நூறு ஆண்டுகளுக்கு முன் அணுவை ரூதர் போர்டு பிளந்து பார்த்த போது உள்ளே எலக்ட்ரான், நியூற்றான், புரோட்டான் துகள்களும் பிரம்மண்டமான வெட்ட வெளியும் இருப்பதக் க்ண்டார். அணுவின் உள்ளே துகள்கள் சில சமயங்களில் துகள்களாகவும், சில சமயங்களில் அலைகளாகவும் பெறிய அளவில் சக்தி வெளிப்பாடுகள் இருப்பதை கண்டார். அதன் பின் அணு ஆராய்ச்சிகள் மிகுந்த ஆர்வத்துடன் உலக நாடுகளில் நடைபெறத் தொடங்கின.

1972-ம் ஆண்டு ப்ரிஜாப் காப்ரா என்கிற பிரபல அமெரிக்க அணு விஞ்ஞானி "the dance of Shiva : The Hindu view of matter in the light of Morden Physics" ( சிவனின் நடனம் : நவீன பவுதீகத்தின் பாரிவையில் வஸ்துக்களை பற்றிய இந்துக்களின் நோக்கு) என்கிற விஞ்ஞான சம்பந்தப் பட்ட பத்திரிக்கையில் சிவனின் நடனதுக்கும், உப அணுக்களின் நடனத்துக்கும் உல்ல இணக்கத்தப்பற்றி முதலில் விவரமாக எழுதினார்.

1975-ம் ஆண்டு இந்தக்கட்டுறையை விரிவுபடுத்தி "THE TAO OF PHYSICS" என்ற தலைப்பில் ஒரு புத்தகமாகவும் அவை எழுதி அது உலகிலேயே அதிகம் விற்ற புத்தகங்களில் ஒன்றாகப் பிரபலமாகியது.

அதில் அவர் குறிப்பிட்டது:- "எப்படி இந்திய சித்தர்கள் , படைப்பைப் பிறிக்க முடியாத , எப்போதுமே செயல்பட்டுக்கொண்டிருக்கும் ஒரு நடப்பகப் பார்த்தார்களோ , அப்படியே தான் நவீன பவுத்திய விஞ்ஞானம் பிரபஞ்சத்தைக் காண்கிறது"

பிறப்பும், இறப்பும் நிற்பதே இல்லை. அதுபோல், பிரபஞ்சம் எங்கிற தத்துவத்தின் அடிப்படையில் அணுக்களின் நடனம், அணுக்களின் பிறப்பினாலும் இறப்பினாலும் நிற்காமல் தொடர்கிறது. கோடானுகோடி அணுக்கள் வினாடிக்கு வினாடி உருவாகி, மறைவதுதான் பிரபஞ்சத்தின் நடனம் (Cosmic Dance) . அதுவே தான் "நடராஜரின் நடனம்" எங்கிரார் காப்ரா.

" நடராஜரின் பிரபஞ்ச நடனமும், அணுக்களின் நடனமும் ஒன்றே" என்று கூறும் அளவுக்கு, விஞ்ஞானமும் இந்திய ஆன்மீகமும் நெறுங்கி விட்டிருக்கிறது. அதனால் தான் கடவுள் அணுவைக் கண்டுபிடிக்கும் ஆய்வுக்கூடத்தில் தில்லை நடராஜர் நடனமாடிக் கொண்டிருக்கிறார். இப்போது செர்ன் (CERN) என்று அழைக்கப்படுகிற அணு ஆரய்ச்சிக்கான ஐரோப்பிய மைதானத்தில் ஆறடி உயர நடராஜர் சிலை வைக்கப்பட்டுள்ளது.

அந்த நடராஜர் சிலை அருகே ஒரு பலகையில் சிவன் நடனத்திற்கும், அணுக்களின் நடனத்துக்கும் இடையே உள்ள ஒற்றுமை பற்றி காப்ரா எழுதிய மேற்கண்ட வரிகளும் எழுதப்பட்டுள்ளன. அணுப்பிளவிற்கு பிறகு விஞ்ஞானிகள் அணுவை மேலும் மேலும் ஆழ்ந்து ஆராயத்தொடங்கினர். இந்தன் பலனாக துகள் இயற்பியல் என்ற தனித்துறை உருவாகியது.

அடிப்படையான துகள்கள் யாவை? என்று தொடர்ந்து ஆராய முற்பட்டது மொத்தம் 16 துகள்கள் அடிப்படையான துகள்கள் என்று கண்டறியப்படுள்ளது. சிறு கல், மண்,மேசை, கார், விமானம், பூமி, சந்திரன், சூரியன், நட்சத்திரங்கள், அண்டங்கள் இப்படியாக அனைத்துக்கும் அவற்றின் இயத்திற்கும் இந்த 16 துகள்கள் தான் அடிப்படை என்று கண்ட போதும் விஞ்ஞானிகளுக்கு ஒரு சந்தேகம் இருநுகொண்டே இருந்தது.

இந்த 16 ஹுகள்கள் மட்டும் பிரபஞ்சத்தத் தீர்மானித்து விட முடியாது என்று அவர்கள் நம்பினர். 16 துகள்களாலேயே எல்லாம் முழுமையடைந்து விட முடியாது என்பதும் இதுவரைக் கண்டறிந்த்தில் ஏதோ ஒன்று விட்டுப்போகிறது என்றும் அவர்கள் எண்ணினர்.
எல்லாவற்றையும் நிர்னயிப்பதும் இயக்குவதுமான இன்னொறு முக்கிய துகள் இருந்துஆல் மட்டுமே எல்லமே சீராகவும் ஒழுங்காகவும் இயங்கமுடியும் என்று நினைத்த விஞ்ஞானிகளில் மிதன்மையானவர் எடின்பரோ பல்கலைக்கலை கழகத்தைச்சேர்ந்த் பீட்டர் ஹெய்ன்ஸ் என்ற விஞ்ஞானி அவர் இதை 1964-ம் ஆண்டிலேயே தெரிவித்திருந்தார்.

அதே சமயத்தில் தான் உண்மை என்று அறிவியல் உலகம் உறுதி செய்தது. கடவுள் துகள் என்கிற "ஹிக்ஸ்போஸன்" எங்கிற உப அணுவை பல்லாண்டு ஆராய்ச்சியின் முடிவில் கண்டுபிடித்து இருக்கினர்.

ஹிக்ஸ் போஸன் எங்கிற நிறைமிகு துகளின் இருப்பும் அதன் இருப்பினால் மட்டுமே இந்த பிரபஞ்சமும், உயினங்களும் கட்டமைக்கப்பட்டுள்ளது என் உறுது செய்யப்பட்டது. ஜட வெஸ்துவுக்கு ஓர் உயிர்ப்பாய், இயக்கமாய், அறிவாய், நிறைவாய் அந்த் நிறைமிகு (அதாவது மாஸ் எனப்படும் நிறை காரணமான ) அமைந்துள்ளதால் ஹிக்ஸ் போஸன் துகளை கடவுள் துகள் என்று அழைக்கிறார்கள்.

(இதில் போஸன் என்ற பாதிப்பெயர் – நம் இந்திய விஞ்ஞானி சத்யேந்திரநாத் போஸ் அவர்களுக்கு உரித்தானது. அந்த உப அணு குறித்து அவரும் முன்பே எழுதியிருந்தார் என்பதால் அவருக்கும் சமபங்கு அளித்து இந்தப் பெயர் வைத்திருக்கின்றனர்.

இப்போதி "அவனின்றி (சிவனின்றி, ஜீவனின்றி) அணுவும் அசையாது" அன்று நம் முன்னோர்கள் சொல்லியிருப்பதையும், அருணகிரி நாதர் தன் திருப்புகழில் பாடிய "பரமகுருவாய், அணுவில் அசைவாய்" என்ற வரிகளையும் நினைத்துப் பாருங்கள்.

அணுவில் இருந்து அண்டம் வரை அணைத்தையும் ஈயக்கும் ஆண்டவன் பற்றி சூட்சுமமாக நம் முன்னோர் அறிந்து இருந்ததன் அறிகுறியே இது என்று கணிக்கத் தோன்றுகிறது அல்லவா???

Leave a Reply

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந் ...

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந்துள்ளேன் கோவையில் கஸ்தூரி நாயக்கன்பாளையம் பகுதியில் பிரச்சாரம் மேற்கொண்ட அண்ணாமலை ...

இது சாதாரண தேர்தல் அல்ல

இது சாதாரண தேர்தல் அல்ல பாஜக மற்றும் கூட்டணி வேட்பாளர்கள் ஒவ்வொருவரும் வெற்றிபெற்று, நாடாளுமன்றத்தில் ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாதத ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாததை 10 ஆண்டுகளில் செய்து முடித்தேன் காங்கிரஸ்கட்சி பிரிவினைவாதத்தை தூண்டியது. ஆனால், நான் பிராந்தியத்தில் அமைதி ...

பால் மற்றும் மின் கட்டண உயர்வே ...

பால் மற்றும்  மின் கட்டண உயர்வே திமுக -வின் சாதனை இந்தியாவின் பாதுகாப்பை பிரதமர் மோடி உறுதி செய்துள்ளார்'' என ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் வ ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் விரும்பும் மோடி பிரதமர் நரேந்திரமோடி மற்றும் மைக்ரோசாப்ட் நிறுவனர் பில்கேட்ஸ் இடையே ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் த ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் தொல்லை கொடுப்பதும் காங்கிரஸின்  கலாச்சாரம் நீதித்துறையின்மீது அழுத்தம் தரப்படுவதாகவும் நீதிமன்றங்கள் அவமதிப்படுவதாகவும் நூற்றுக்கணக்கான வழக்குரைஞர்கள் ...

மருத்துவ செய்திகள்

முட்டைகளின் மருத்துவக் குணம்

கோழிமுட்டை தாது அதிகப்படும். தேகம் தலைக்கும். இரத்தம் உண்டாகும். இதை அதிகநேரம் வேகவைத்தால் கெட்டியாய்விடும்; ...

ஆமணக்கின் மருத்துவக் குணம்

ஆமணக்கு இலையைக் கொண்டு வந்து இதன் மீது சிற்றாமணக்கு நெய் தடவி நெருப்புத் ...

மல்லிகைப் பூவின் மருத்துவக் குணம்

மல்லிகைப் பூத் தேவையானதை எடுத்து அரைத்து தலையில் தேய்த்து வந்தால் கண்ணெரிச்சல் நீங்குவதுடன், ...