"ஆடிப்பட்டம் தேடி விதை"—இது பழமொழி–…சித்திரை முதல் ஆனி வரை வெய்யிலின் ஆர்ப்பாட்டம்..ஆடியில் காற்றுடன்.. மழையும் பெய்யும்.அதனால் ஆடியில் நெல் விதைத்தால்,…..தை மாதத்தில் நல்ல மகசூல்…இதனால் வந்தது..இந்த பழமொழி..
" ஆடிக்காற்றில் அம்மியே பறக்கும் …அதில் நான் எந்த மூலை"—இது மனைவியரின் கோபத்திற்கு முன் பணிந்து போகும் கணவன் மார்களின் புலம்பல்….
ஆடி –ஒரு பண்டிகை மாதம்…ஒவ்வொரு செவ்வாயும் வெள்ளியுமே புனிதமான கிழமைகள்…..ஆடி வெள்ளியில் பாம்பு புற்றுக்கு பூஜை செய்து நாகம்மனுக்கு..பால் ஊற்றினால், பிள்ளைகளுக்கு படிப்பும் ஆயுளும், விருத்தியாகும் என்பது, ஆண்டாண்டுகால உண்மையும் நம்பிக்கையுமாகும்…
ஆடி வெள்ளியில் கோயில்களில் அம்மனுக்கு விசேஷ அலங்காரங்கள், கண்கொள்ளாக் காட்சியாகும்..ஒவ்வொரு வெள்ளிக்கும், ஒவ்வொரு "பழங்களாலான பாவடைகளை"- சாத்துவர்..
ஆடிப்பூரம் அன்று, ஸ்ரீரெங்கம், ஸ்ரீவில்லிப்புத்தூர், மற்றும் ஆண்டாள் உள்ள கோயிலகளின் அனைத்து சந்நிதிகளிலும்..,அன்றுதான் ஆண்டாளின் பிறந்தநாள் என்பதால்– 10—12 நாட்கள் நடக்கும், மிகவும், விசேஷமான கொண்டாட்டங்கள் இருக்கும்…அது விசேஷமான பண்டிகை நாளுமாகும்.
ஆடிப் பதினெட்டு என்பது "பதினெட்டாம் பேறு"—என புது வெள்ளம் பாய்ந்து வரும் காவிரியிலும், தமிழ்நாடு முழுவதும், களிப்புடன் கொண்டாடப்படும் தினமாகும்.
அன்று புது மணப் பெண்கள் தங்கள் புதுத்தாலி பிரித்து, மாற்றுவர்…காவிரியின் கரை பிரதேசங்களிலும், கடற்கரைகளிலும், குடும்பம் குடும்பமாக உறவினர்களுடன், சித்ரான்னங்களுடன், மக்கள் சேர்ந்து உண்டு மகிழும் நாள்.
ஆடி அமாவாசை பூரணமான தஷிணாயன புண்யகாலம் ஆகும்….ஒருவருடத்தில் சித்திரை ஆடி, புரட்டாசி, தை அமாவாசைகள், "நீத்தார் கடன் தீர்க்க" நீர்நிலைகளில், தர்ப்பணம் செய்வது, மிகவும், விசேஷசமான புண்யமாகும்..அன்று ராமேஸ்வரம், காசி, கயாவில் கூட்டம் நெரியும்…
ஆடிக் கிருத்திகை முருகனுக்கு மிகவும் உகந்தநாள்..ஆடி முதல் நாளன்று புதிதாக திருமணமான தம்பதிகளை வீட்டிற்கு அழைத்து, புத்தாடைகளுடன் விருந்தோடு, ஸ்பெஷலாக, சுவையான "ஆடிப்பால்" என்ற தேங்காய்ப் பால் " செய்வர்..
இப்படி சிறப்புவாய்ந்த ஆடிமாதம், புது மணமக்களுக்கு மட்டும் கசக்கும்..காரணம் இந்த மாதத்தில் தம்பதிகளை பிரித்து வைக்கும் பழக்கம் "ஆதிமுதல்"- உண்டு..ஆடியில்"–கரு" உருவானால், சித்திரையில் குழந்தை பிறக்கும்..சித்திரையும் வைகாசியும் வெப்பம் மிகுந்த காலமாகும்..அது தாய்க்கும், சேய்க்கும் துன்பம் விளைவிக்கும், ..
ஆடி..மாதம் அம்மன் கோயில்களின்..விசேஷ கூழுக்கு ருசி தனிதான்..பக்தியுடன் "தீ மிதித்தலும்" நடக்கும்..
ஆடியானாலும் தற்காலங்களில் அவசர திருமணங்கள் ஆடியிலும் நடப்பதுண்டு..
ஆடியில் தான் முஸ்லீம் மதத்தினரின் உயர்ந்த நோன்புப் பண்டிகையான ரமலான் என்னும் ரம்ஜான் வருகிறது..நபிகள் நாயகத்தின் உயர்ந்த நற்போதனைகளை மசூதிகளிலும், பத்திரிக்கைகளிலும், நற்செய்திகளாக மக்களுக்கு கூறப்படுகிறது.
மிக முக்கியமான ஆகஸ்டு சுதந்திர தினம் இவ்வருடம் ஆடி 30 ஆம் நாள் வருகிறது..
ஆக ஆடி மாதம் ஒரு அற்புதமான மாதந்தான்..
நன்றி; ரேவதி
பள்ளிக்குச் செல்லுகின்ற குழந்தைகளுக்கு நல்ல சத்தான ஆரோக்கியமான உணவு கிடைத்தால்தான் அந்தக் குழந்தைகள் ... |
டீ குடிப்பதினால் சில வகை புற்று நோய்களும், இதய நோய்களும் ஏற்படுவதற்க்கான வாய்ப்புகள் ... |
மாங்காய், மாம்பழம் இவை போன்று மாம்பூவும் மருத்துவத்திற்கு மிகச் சிறந்தது. |
Leave a Reply
You must be logged in to post a comment.