அரசியலமைப்பு சட்டத்தின் 370 ஆவது பிரிவுதொடர்பாக அறிவுப்பூர்வமான விவாதம் நடத்தப்படவேண்டும் என பா.ஜ.க.,வின் பிரதமர்வேட்பாளர் நரேந்திர மோடி வலியுறுத்தியுள்ளார்.
நரேந்திரமோடி டுவிட்டர் இணையளத்தில் திங்கள் கிழமை வெளியிட்ட பதிவில் தெரிவித்திருப்பதாவது:
அரசியலமைப்பு சட்டத்தின் 370 ஆவது பிரிவுதொடர்பாகவும், காஷ்மீர் பண்டிட்டுகளின் துன்பம் உள்பட இந்தமாநிலம் தொடர்பான மற்றவிவகாரங்கள் தொடர்பாகவும் அறிவுப் பூர்வமான விவாதம் நடத்தப்பட வேண்டும். ஜம்முகாஷ்மீரில் பல்வேறு சமூகங்களுக்கு இழைக்கப்பட்ட துன்பத்தின்காயம் இன்னமும் நம் இதயத்தில் இருக்கிறது. மக்களைப் பிளவு படுத்துவதற்கு பதிலாக ஒன்றுபடுத்துவது குறித்து நாம் பேசவேண்டும்.
பல ஆண்டுகளாக காஷ்மீர்பண்டிட்டுகள் அனுபவித்து வரும் துன்பங்களை யாரும் அலட்சியப்படுத்த கூடாது. இந்தச்சமூகத்துக்கு நீதிகிடைக்கச் செய்வதற்காக பாடுபடுவதற்கு நாம் உறுதி பூண்டுள்ளோம்.
ஜம்முகாஷ்மீர் மாநிலத்தில் உள்ள பாரபட்சமான அணுகு முறையை அருண் ஜேட்லி வெளிச்சத்துக்கு கொண்டுவந்தார். இதுபோன்ற அணுகுமுறைக்கு சட்டத்தில் இடமில்லை. பூமியில் ஒருசொர்க்கம் இருந்தால் அது ஜம்மு காஷ்மீர்தான் என சொல்வார்கள். இந்தமாநிலத்தை அமைதி, ஒருமைப்பாடு ஆகியவற்றின் சொர்க்கமாக மாற்ற நாம் அனைவரும் பாடுபடவேண்டியுள்ளது என்று தனது டுவிட்டர் பதிவில் மோடி தெரிவித்துள்ளார்.
கீரைகளில் உப்புச் சத்துக்களும், உலோகச் சத்துக்களும், வைட்டமின் என்னும் உயிர்ச் சத்துக்களும் உள்ளன. ... |
தியானத்திற்கு மன ஒருமைப்பாடு நிலை மிகவும் முதன்மையானது. மனம் அலைபாயாது ஒரு பொருளில் ... |
அகத்தை சுத்த படுத்துவதால் அகத்தி என பெயரை வைத்துள்ளனர்..சுமார் 50பது ஆண்டுகளுக்கு முன்பு ... |
Leave a Reply
You must be logged in to post a comment.