வாஜ்பாய் தொலைநோக்கு திட்டத்தின் நாயகன்

 வாஜ்பாய் பாரத தேசத்தின் தன்னிகரற்ற தலைவன் என்பத்தைவிட தொலைநோக்கு திட்டத்தின் நாயகன் என்று கூறலாம் காங்கிரஸ் கட்சி சுமார் பத்துவருடம் நீங்கலாக இந்நாட்டை நீண்ட காலமாக ஆண்டுவந்தது. அதே காங்கிரஸ் கட்சி அன்று என்ன சொல்லி மக்களிடம் வோட்டுகேட்டதோ அதையே இன்றும் சொல்லி வோட்டுகேட்பது வெட்கக்கேடான ஒன்று.

 

பாரதிய ஜனதாக் கட்சியின் பெருமைமிகு வாஜ்பாய் பிரதமராக இருந்த போது நாட்டின் முன்னேற்றத்திற்க்காக பலதிட்டங்கள் தீட்டப்பட்டது. குறுகிய ஆண்டுகாலமே ஆட்சி புரிந்த வாஜ்பாய் நீண்டகால நாட்டு நலனையே கருத்திற் கொண்டு சிறப்பான ஆட்சிபுரிந்தார். அவர்களுடை திட்டங்கள் ஒவ்வொன்றும் தொலைநோக்கு கொண்டது. வோட்டிற்க்காக குறுகிய கால திட்டங்களை தீட்டாமல் தொலைநோக்கு திட்டங்களை தீட்டினார் வாஜ்பாய் . அதில் மிகமுக்கியமானவை இரண்டு. ஒன்று வாஜ்பாய் அவர்களின் கனவுத் திட்டமான தங்க நாற்கறசாலை. இன்று மக்கள் பெருமளவில் இந்ததிட்டத்தால் பயன் படுகின்றனர் என்று சொன்னால் அந்தபெருமை பாஜக.,வையும், வாஜ்பாய் அவர்களையுமே சாரும். ஆனால் அந்ததிட்டத்தை முடக்கி மிகவும் பின் தங்கிய நிலையில் செயல்பட வைத்துள்ளனர் காங்கிரசார். இதிலிருந்தே அவர்களுக்கு நாடு முக்கியமில்லை. தங்களது பாக்கெட்டும், பதவியும்தான் முக்கியம் என்று நிரூபித்து விட்டனர்.

அடுத்து இன்னொன்று நதிநீர் இணைப்பு. நாட்டிலே உள்ள நீர்பிரச்சனையை தீர்த்து பாரதத்தை பசுமை பூமியாக்க கனவுகண்டவர் வாஜ்பாய். அவரது பெருமுயற்சியால் பல நிபுணர்களை வைத்து நதிநீர் இணைப்பு திட்டத்தை செயல்வடிவம் தர இருந்தபோது துரதிருஷ்டவசமாக பாரதிய ஜனதாக் கட்சி ஆட்சியை இழந்தது. நாட்டிற்கு இது போராதகாலம் என்றே சொல்ல வேண்டும். அடுத்து வந்த சோனியா காங்கிரஸ் நாட்டின் நலனில் அக்கறைகொள்ளாமல் ஊழலில்  திளைப்பதையே சாதனையாக்கியது.

நதிநீர் இணைப்புதொடர்பாக ஆய்வு செய்வதற்காக 2002ம் ஆண்டில் அப்போதைய பிரதமர் வாஜ்பாய் நடவடிக்கை குழுவை அமைத்தார். அந்தக்குழு சமர்ப்பித்த அறிக்கையில், இமயமலைப்பகுதி, தீபகற்ப பகுதி என இருபிரிவாக திட்டத்தை செயல்படுத்த பரிந்துரை செய்திருந்தது. தீபகற்பப்பகுதியில் மகாநதி, கோதாவரி, கிருஷ்ணா, காவிரி, வைகை உள்ளிட்ட 16 நதிகளை இணைப்பது என திட்டமிடப் பட்டது. கேரளம், கர்நாடகத்தில் மேற்குநோக்கி பாயும் ஆறுகளின் வழித்தடத்தை மாற்றுவது, மேற்கு  கடற்கரையோரம் பாயும் சிற்றாறுகளை இணைப்பது போன்றவையும் இந்தத்திட்டத்தில் அடங்கும்.

இமயமலைப் பகுதியில் கங்கை, பிரம்மபுத்திரா, அவற்றின் கிளைநதிகள் ஆகியவற்றின் குறுக்கே நீர்த் தேக்கங்களை அமைத்து பாசனத்துக்கும், மின்சாரம் தயாரிக்கவும் பயன் படுத்துவதற்குத் திட்டமிடப்பட்டது. இதன்மூலம் மழைக் காலங்களில் ஏற்படும் திடீர் வெள்ளப்பெருக்கைத் தடுக்கலாம் என்றும் யோசனை கூறப்பட்டது.

இந்த திட்டத்தைச் செயல்படுத்துவதன் மூலமாக 2050ம் ஆண்டில் நாட்டின் பாசனப் பரப்பை 16 கோடி ஹெக்டேராக உயர்த்த முடியும். ரூ.5 லட்சம்கோடி செலவாகும் என மதிப்பிடப்பட்ட இந்தத் திட்டத்தின்படி,  2016-ம் ஆண்டுக்குள் முக்கிய ஆறுகள் இணைக்கப்பட வேண்டும் என்பது இலக்காகும். ஆனால், காங்கிரஸ் ஆட்சியில் இப்பணி தொடங்கப்படவில்லை.

இந்நாட்டின் முன்னேற்றத்திற்க்காக காங்கிரசார் என்றுமே பாடுபட்டதில்லை என்பது சரித்திரம்.பாஜக.,வுக்கும் வாஜ்பாயிக்கும் இந்ததிட்டத்தை செயல்படுத்தினால் பெயர்வந்துவிடும் என்ற அரசியல் காழ்ப் புணர்ச்சி காரணமாக இந்ததிட்டம் கிடப்பில் போட்டது . அதற்க்கான ஏதாவது சாக்குபோக்கை காங்கிரஸ் அரசு நீதிமன்றத்தில் கூறியது . ஆனால் ஒரு அருமையான திட்டத்தை வீழ்த்தியபெருமை சோனியா காங்கிரசைத் தவிர வேறு யாருக்கும் இல்லை.

Leave a Reply

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

குங்குமப்பூ விவசாயம் செய்யும் ...

குங்குமப்பூ விவசாயம் செய்யும் இளைஞரை பாராட்டிய பிரதமர் மோடி கேரள மாநிலம் வயநாடு மாவட்டம் சுல்தான்பத்தேரி-யை அடுத்த மலவயல் ...

பாகிஸ்தான் மீது தாக்குதல் நடத் ...

பாகிஸ்தான் மீது தாக்குதல் நடத்த பச்சைக்கொடி பஹல்காம் பயங்கரவாத தாக்குதல் தொடர்பான அடுத்தகட்ட நடவடிக்கை குறித்து ...

பிரதமர் மோடியுடன் ஆர் எஸ் எஸ் த ...

பிரதமர் மோடியுடன் ஆர் எஸ் எஸ் தலைவர் மோகன் பகவத் சந்திப்பு மிகவும் பரபரப்பான சூழ்நிலையில், பிரதமர் மோடியை, டில்லியில் உள்ள ...

பாகிஸ்தானுக்கு பதிலடி ; முப்படை ...

பாகிஸ்தானுக்கு பதிலடி ; முப்படைகளுக்கு முழு சுதந்திரம் – பிரதமர் மோடி உறுதி ல்லி: பஹல்காம் பயங்கரவாத தாக்குதலுக்கு பதிலடி தருவதற்கான உயர்மட்ட ...

கல்வியை நவீனபடுத்தும் மத்திய அ ...

கல்வியை நவீனபடுத்தும் மத்திய அரசு – பிரதமர் மோடி பெருமிதம் நாட்டின் எதிர்காலத்திற்கு இளைஞர்களை தயார்படுத்த கல்வி முக்கிய பங்காற்றுகிறது. ...

கனடா தேர்தலில் வெற்றி பெற்ற மார ...

கனடா தேர்தலில் வெற்றி பெற்ற மார்க் கார்னிக்கு பிரதமர் மோடி வாழ்த்து கனடா பார்லிமென்ட்டிற்கு நடந்த தேர்தலில் வெற்றி பெற்று மீண்டும் ...

மருத்துவ செய்திகள்

ரோஜாப் பூவின் மருத்துவக் குணம்

ரோஜாப் பூ வாய்ப்புண், சிறுநீர், வயிற்றுப் புண், தொண்டைப் புண், மார்புச்சளி, காது ...

நாடி சுத்தி பயிற்சி

தியானம் பழகுவதற்கு பிரானயாமப் பயிற்சியும், நாடி சுத்தி பயிற்சியும் அவசியமாகும். நாடிகளில் உள்ள ...

உணவை எளிதில் ஜீரணமாக்கும் பெருங்காயம்

நம்ம தமிழ் நாட்டுல ரசத்தையும், சாம்பாரையும் 'கமகமக்க' வைப்பதில் பெருங்காயத்தின் பங்கு அதிகம் ...