காங்கிரஸ் கட்சி ஏமாற்றுக்கட்சி, அக்கட்சியின் தேர்தல் அறிக்கை பொய்யானது ஆட்சிக்கு வந்து 100 நாட்களுக்குள் விலைவாசி உயர்வை கட்டுப்படுத்துவோம் என்று தெரிவித்தது. ஆனால் விலைவாசி உயர்வை கட்டுப்படுத்த வில்லை என்று பாஜக பிரதமர் வேட்பாளர் நரேந்திரமோடி சாடியுள்ளார்.
ஹிமாச்சல பிரதேசத்தில் தேர்தல்பிரச்சாரம் மேற்கொண்ட நரேந்திரமோடி: “நான் இவ்வாறு பேச விரும்பவில்லை. இருந்தாலும் சொல்கிறேன். காங்கிரஸ் கட்சி ஏமாற்றுக்கட்சி, அக்கட்சியின் தேர்தல் அறிக்கை பொய்யானது
கடந்த 2009-ல் காங்கிரஸ் தேர்தல் அறிக்கையை வெளியிட்ட போது, ஆட்சிக்கு வந்து 100 நாட்களுக்குள் விலைவாசி உயர்வை கட்டுப்படுத்துவோம் என்று தெரிவித்தது. ஆனால் விலைவாசி உயர்வை கட்டுப்படுத்த வில்லை. அப்படி என்றால் காங்கிரஸ் தேர்தல் அறிக்கை பொய் அறிக்கைதானே? தவறுகளை நீங்கள் மன்னிப்பார்கள். ஆனால் ஏமாற்றுக்காரர்களை ஒரு போதும் நீங்கள் மன்னிக்கமாட்டீர்கள் என்பது தெரியும்.
மத்தியில் ஆள பாஜக ஒருமுறை வாய்ப்பளியுங்கள். காங்கிரஸ் கட்சிக்கு 60 ஆண்டுகள் தந்த நீங்கள், எனக்கு 60 நாட்கள் தாருங்கள். நான் உங்களுக்காக சேவைசெய்வேன். நாட்டுக்கு இப்போது தேவை ஆட்சித்தலைமை அல்ல மக்கள் சேவகனே. ஒருசேவகனாக நான் உங்களுக்கு சேவைசெய்ய விரும்புகிறேன். அதற்கு உங்கள் ஆசி வேண்டும். நாங்கள் நிலையான ஆட்சி ஏற்பட 300 தாமரைகள் மலர வேண்டும். மக்கள் பா.ஜ.க.,வுக்கே வாக்களிக்க வேண்டும்” என்று வாக்கு சேகரித்தார்.
ஆலமரத்தின் மொக்கு, பூ இவைகளைக் கொண்டு வந்து அம்மியில் வைத்துப் பால்விட்டு மைபோல ... |
பள்ளிக்குச் செல்லுகின்ற குழந்தைகளுக்கு நல்ல சத்தான ஆரோக்கியமான உணவு கிடைத்தால்தான் அந்தக் குழந்தைகள் ... |
Leave a Reply
You must be logged in to post a comment.