கொஞ்சம் வெய்யிலில காயுங்க பாஸ்!

ரு காலத்தில் முதுமையின் அடையாளமாக இருந்த கைகால், மூட்டு வலி பிரச்சனை இன்று குழந்தைகள், பெரியவர்கள் என அனைவரையும் பாதிக்கிறது. இதற்கு முக்கியமான காரணம்   வைட்டமின் டி (Vitamin D) குறைப்பாடு. இது இயற்கையாகவே சூரியனின் புறஊதா கதிர்களின் (UV rays)  மூலம்  உடலில் உற்பத்தி ஆகும்.

உணவில்  உள்ள கால்சியம், பாஸ்பரஸ் உடலில் சேர்ந்து, எலும்புகள் உறுதியாக இருக்க  வைட்டமின் டி உதவுகிறது. இதன் குறைப்பாட்டால்   எலும்புகள் வலிமையிழந்து, எளிதில் உடையக்கூடிய நிலை ஏற்படும். இதனால் குழந்தைகளுக்கு  ரிக்கெட்ஸ் (Rickets), பெரியவர்களுக்கு ஆஸ்டியோமலேசியா (Osteomalacia) என்ற  நோய் ஏற்பட வாய்ப்புகள் அதிகம். மேலும் நம் நோய் எதிர்ப்பு   சக்திக்கும் இதய நோய் வராமல் தவிர்ப்பதற்கும் வைட்டமின் டி அவசியம்.

பால், வெண்ணெய், முட்டை, சோயா பால், பாலாடைக்கட்டி, மீன் எண்ணெய், கானாங்கெளுத்தி, இறால், ஆட்டு ஈரல், காளான், ஆரஞ்சு, வைட்டமின் டி சேர்க்கப்பட்ட பால், வெண்ணைய், தானியங்கள், பழச்சாறு முதலியவை வைட்டமின் டி அதிகமுள்ள உணவுகள். அனைவரும் குறிப்பாக பெண்கள், குழந்தைகள், முதியோர் அவசியம் இவ்வகை உணவை உட்கொள்ள வேண்டும்.

இன்றைய சூழ்நிலையில், நெருக்கமாக அமைந்த வீடுகள், அதிகம் வெளியில் நடமாடாமல் இருப்பது, முக்கியமாக குழந்தைகள் அதிகம் வெய்யிலில் விளையாடாமல் இருப்பது, சில உடை கட்டுப்பாடுகள் போன்ற காரணங்களால் சூரிய கதிர்கள் மூலம் நாம் அடைய வேண்டிய வைட்டமின் டி யை இழக்கிறோம். எனவே சூரியஒளி வாரம் இருமுறையாவது குறைந்தபட்சம் 15 நிமிடம் நம் உடலில் படுமாறு பார்த்துகொள்ளவேண்டியது அவசியம்.

நன்றி விஜயபாரதம்

Leave a Reply

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

தூண்டிவிடும் பாகிஸ்தான்: பயங்க ...

தூண்டிவிடும் பாகிஸ்தான்: பயங்கரவாதம் வீழ்த்தப்படும்: மோடி உறுதி பயங்கரவாதத்தை பாகிஸ்தான் தூண்டி விடுகிறது. அதனை இரும்புக்கரம் கொண்டு ...

9-வது நிர்வாக கூட்டத்திற்கு மோட ...

9-வது நிர்வாக கூட்டத்திற்கு  மோடி தலைமை தாங்குகிறார் பிரதமர் திரு நரேந்திர மோடி ஜூலை 27, 2024 ...

இந்தியாவின் கிராமப்புறங்களில் ...

இந்தியாவின் கிராமப்புறங்களில் வறுமை ஒழிப்பு திட்டம் கிராமப்புற மக்களின் பொருளாதார நிலையை மேம்படுத்துவதற்காக, வாழ்வாதார வாய்ப்புகளை ...

கார்கில் வெற்றி தின வெள்ளிவிழா ...

கார்கில் வெற்றி தின வெள்ளிவிழாவையொட்டி நினைவு தபால்தலை வெளியிடப்பட்டது கார்கில் வெற்றி தின வெள்ளிவிழாவையொட்டி நினைவு தபால்தலை இன்று ...

25-வது கார்கில் தினத்தையொட்டி பி ...

25-வது கார்கில் தினத்தையொட்டி பிரதமர் மரியாதை 25-வது கார்கில் வெற்றி தினத்தை முன்னிட்டு லடாக்கில் இன்று ...

பிரதமரின் வீட்டுவசதி திட்டம்

பிரதமரின் வீட்டுவசதி திட்டம் நாடு முழுவதும் நகர்ப்புறங்களில் அடிப்படை வசதி கொண்ட வீடுகளை ...

மருத்துவ செய்திகள்

ஆடுதீண்டாப்பாளையின் மருத்துவக் குணம்

சிலந்திப்பூச்சி விஷம், கருங்குஷ்டம், கரப்பான், ரோகம் இவை ஆடுதீண்டாப்பாளை மூலம் குணமாகும். உடல்பலம் ...

வாய் துர்நாற்றம் நீங்க

ஒரு சிலர் வாயை திறந்தாலே நமக்கு தலை சுற்றி மயக்கமே வந்துவிடும் . ...

திராட்சையின் மருத்துவக் குணம்

திராட்சையானது பத்திய உணவுக்கு ஏற்றது. பசியையும் தூண்டவல்லது. தொண்டை, முடி, தோல், கண்களுக்கு ...