ஜம்முகாஷ்மீரின் கார்கில் மற்றும் லே பகுதியில் அமைக்கப்பட்டுள்ள இண்டு புனல்மின் திட்டங்களையும் மின்விநியோக லைன்களையும், பிரதமர் நரேந்திரமோடி, நாட்டுக்கு அர்ப்பணிப்பார் என மின்சாரத்துறை மந்திரி பியூஸ் கோயல் இன்று தெரிவித்துள்ளார்.
கார்கில் மாவட்டத்தில் 44 மெகாவாட் திறன் கொண்ட சுடாக் புனல் மின் திட்டத்தையும், லே மாவட்டத்தில் உள்ள நிமோ பாஸ்கோவில் 45 மெகாவாட் திறன்கொண்ட புனல்மின் திட்டங்களையும், மின்சாரத்தை வெளியேற்றும் மின்கம்பிகளையும்(டிரன்ஸ் மிசன் லைன்) நாட்டுக்கு அர்பணிக்க பிரதமர் நரேந்திரமோடி ஒப்புக்கொண்டுள்ளார்.
உத்தேசமாக அடுத்தவாரம் அல்லது அதற்கு அடுத்தவாரத்தில், பிரதமர் லே மாவட்டத்திற்கு வருகைபுரிந்து இரண்டு புனல்மின் திட்டங்களையும் நாட்டுக்கு அர்பணிப்பார். அதேபோல், லே மாவட்டத்தில் இருந்து கார்கில் மற்றும் ஸ்ரீநகர் செல்லும் மின்விநியோக லைன்களுக்கு அடிக்கல் நாட்டுவார் என்று நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்ட அமைச்சர் பியூஸ் கோயல் தெரிவித்தார்.
தினமும் கடுக்காய்ச் சூரணம் செய்து வைத்துக்கொண்டு, உணவுக்குப் பின் திரிகடியளவு சுடுநீரில் கலந்து ... |
*கரோனா இரண்டாம் அலையில் நாம் அடித்துசெல்லப்பட்டு கொண்டு இருக்கும் நிலையில் கோவிட் 19 ... |
பழங்களில் உள்ள சர்க்கரைச்சத்து நம் உடலில் உள்ள தசைநார்களை உறுதிப்படுத்துகின்றன. ஆரஞ்சு, சாத்துக்குடி, ... |
Leave a Reply
You must be logged in to post a comment.