பேஸ் புக் சமூக வலைத் தளத்தில் பிரதமர் நரேந்திரமோடி குறித்து, கேரளமாநிலம் அல்லாஞ்சேரியை சேர்ந்த வாலிபர் ராஜேஷ் அவதூறான கருத்தினை வெளியிட்டதற்காக கொல்லத்தை சேர்ந்த ஆர்.எஸ்.எஸ். தலைவர்கள் காவல்துறையில் புகார் செய்தனர்.
அந்தப் புகாரின் பேரில் ராஜேஷ்மீது கொல்லம் போலீசார் வழக்கு பதிவுசெய்து, நேற்று இரவு அவரை பிடித்து விசாரித்தனர். அதன் தொடர்ச்சியாக இன்று அவரை கைதுசெய்தனர். அவர் மார்க்சிஸ்ட் கம்யூ. கட்சியை சேர்ந்தவர் என்று தெரிய வந்துள்ளது.
மோடி பிரதமர் பதவி ஏற்றபின்னர் அவர் மீது கேரளாவில் அவதூறுகருத்து வெளியிடப்பட்டிருப்பது இது 3;வது தடவை ஆகும்.கடந்த ஜூன்மாதம் மோடி பற்றி அவதூறு கருத்துவெளியிட்ட 2 சம்பவங்கள் நடந்தன. அவற்றில், குருவாயூர் ஸ்ரீகிருஷ்ணா கல்லூரி மாணவர்கள் 9 பேரும், திருச்சூர் அருகேயுள்ள குழுர் பாலிடெக்னி கல்லூரி ஒன்றின் முதல்வரும், மாணவர்களும் கைதுசெய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது .
இரத்த அழுத்தம் அதிகமுள்ளவர்கள் கீழ்காணும் உணவுகளைக் கண்டிப்பாகத் தவிர்க்க வேண்டும். |
புளிப்பு மாதுளை, இனிப்பு மாதுளை, இனிப்பும், புளிப்பும் கலந்த மாதுளை என்று மொத்தம் ... |
Leave a Reply
You must be logged in to post a comment.