மத்திய அரசு, உள்நாட்டில், சூரியசக்தி மின்உற்பத்தியை அதிகரிக்கும் வகையில், சூரிய சக்தி மின் உற்பத்தி திட்டங்களை செயல்படுத்த, இலக்கு நிர்ணயிக்கப்பட்டு உள்ளது. முதற்கட்டமாக, விரைவில், ஐந்து மாநிலங்களுடன் ஒப்பந்தம் மேற்கொள்ள உள்ளது.
இதன் ஒரு பகுதியாக ஆந்திரா, தெலுங்கானா, குஜராத், ராஜஸ்தான் மற்றும் மத்திய பிரதேச மாநிலங்களில், தலா, 500 மெகா வாட் திறனுக்கும் மேற்பட்ட, மெகா சூரியசக்தி மின்திட்டங்கள் செயல்படுத்தப்பட உள்ளது.
இதற்கு தேவையான உதவிகளை, மத்திய அரசு வழங்கும்.குறிப்பாக, மத்திய பிரதேசத்தில், 750 முதல் 800 மெகா வாட் திறனில், சூரியசக்தி மின் உற்பத்தி திட்டங்களை செயல்படுத்த, இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
நடப்பாண்டு, ஜனவரி 31ம் தேதி நிலவரப்படி, இம்மாநிலத்தில், இவ்வகையிலான மின்உற்பத்தி திறன், 195 மெகாவாட்டாக உள்ளது. ராஜஸ்தான் மாநிலத்தில், அதிகபட்சமாக, 4,000 மெகாவாட் திறன்கொண்ட சூரியசக்தி மின் உற்பத்தி திட்டங்களை செயல்படுத்த, மத்திய அரசு திட்டமிட்டு உள்ளது.
இம்மாநிலத்தின் சூரியசக்தி மின் உற்பத்தி திறன், 667 மெகாவாட் என்ற அளவில்உள்ளது. இதேபோன்று, ஆந்திராவிலும், இவ்வகையிலான மின் உற்பத்தி திறனை, 93 மெகாவாட்டிலிருந்து, 1,000 மெகாவாட்டாக அதிகரிக்க இலக்கு நிர்ணயிக்கப்பட்ள்ளது.
இவ்வகையில், உற்பத்தி செய்யப்படும் ஒருயூனிட் மின்சாரத்திற்கான கட்டணம், 5.50 ரூபாய் – 5.40 ரூபாய் வரையில் இருக்கலாம் என தெரிகிறது .சூரிய சக்திமூலம் உற்பத்தி செய்யப்படும் மின் சாரத்தை, பயனீட்டாளர்களுக்கு விற்பனைசெய்யும் பணிகளை, சோலார் எனர்ஜி கார்ப்பரேஷன் (எஸ்இசிஐ.,) மேற்கொள்ளும்.
இதுகுறித்து, புதிய மற்றும் புதுப்பிக்கத்தக்க எரி சக்தி அமைச்சகத்தின் இணைசெயலர் தருண் கபூர் கூறியதாவது:நரேந்திரமோடி தலைமையிலான புதிய அரசு, சூரிய சக்தி மின்உற்பத்தியை அதிகரிக்க, தீவிர நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது. இதற்கான, முன் முயற்சிகள், பட்ஜெட்டில் அறிவிப்பிலேயே இடம்பெற்றுள்ளன.
உள்நாட்டில், சாத்தியக் கூறுகள் உள்ள மூலை முடுக்கெல்லாம், சூரிய சக்தி மின்உற்பத்தி மெகாதிட்டங்கள் செயல்படுத்தப்பட உள்ளது.இவ்வாறு, அவர் கூறினார்.
ஆடாதொடை இலையை தேவையான அளவு எடுத்து ஒரு சட்டிக்கு வேடுகட்டி, ஒரு டம்ளர் ... |
மாதுளம் பூ பல வகை நோய்களுக்கு அருமருந்தாக உபயோகப்படுகிறது. இப்பூவினால் இரத்த மூலம், ... |
தியானம் என்றால் எண்ணுதல் அல்லது நினைத்தல் என்று பொருளாகும். மனம் ஒரே பொருளின் மேலேயே ... |
Leave a Reply
You must be logged in to post a comment.