லடாக் வந்ததில் பெருமை அடைவதாக பிரதமர் நரேந்திரமோடி கருத்து தெரிவித்துள்ளார். காஷ்மீர் மாநிலம் லே -வில் 2 புனல் மின்திட்டங்களை தொடங்கிவைத்து மோடி இவ்வாறு கூறினார்.
புனல்மின் திட்டம் லேநகரத்தின் சுற்றுச்சூழலுக்கு குந்தகம் ஏற்படுத்தாது என்று தெரிவித்தார். லே மக்களின் நாட்டுப் பற்றுக்கு தாம் தலைவணங்குவதாகவும் மோடிபேசினார். லே பிராந்திய முன்னேற்றத்துக்கு 3 அம்ச திட்டம் செயல்படுத்தப்படும். லே-வில் மின்சாரம், சுற்றுச்சூழல் மற்றும் சுற்றுலாவை மேம்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும் . இமயமலை மாநிலங்களை மேம்படுத்த புதிய அணுகுமுறை தேவை , காஷ்மீரில் காவிரி புரட்சியை கொண்டு வருவதே முக்கியம் நோக்கம். சியாச்சின் விவகாரத்தில் சமரசம் என்ற பேச்சுக்கே இடமில்லை என்று அவர் கூறினார்.
பிரதமர் நரேந்திர மோடி ஜம்முகாஷ்மீர் மாநிலம் லே வந்தடைந்தார். லே விமான நிலையத்தில் மோடிக்கு அதிகாரிகள் உற்சாக வரவேற்பளித்தனர். கார்கில் மற்றும் லே நகரங்களில் இரு புனல் மின்நிலையத் திட்டத்தை மோடி துவக்கி வைக்கிறார். இந்த நிகழ்ச்சிகளில் பங்கேற்ற பிறகு சியாச்சின் செல்ல மோடி திட்டமிட்டுள்ளார் 1999-ல் பாகிஸ்தானுடனான போருக்கு பிறகு, கார்கிலுக்கு வருகை தரும் முதல் பிரதமர் மோடி என்பது குறிப்பிடத்தக்கது.
கறிவேப்பிலையை மைபோல அரைத்துக் கொட்டைப்பாக்களவு எடுத்து ஒரு டம்ளர் எருமைத் தயிரில் கலந்து ... |
உயர் மன அழுத்தம் நாம் தினமும் சாப்பிடும் உணவின் தன்மை . எளிதில் உணர்ச்சி வசப்படுதல். மது ... |
டான்சிலிட்டிஸ்' (Tonsillitis) என்பதன் பெயர்தான் தொண்டை அழற்சி நோய். இது. தொண்டையின் சதையை ... |
Leave a Reply
You must be logged in to post a comment.