உணவு பாதுகாப்புக்கு சர்வதேசவர்த்தக அமைப்பில் நிரந்தர தீர்வு

 இந்தியா மேற்கொண்டுள்ள உணவு பாதுகாப்புக்கு சர்வதேசவர்த்தக அமைப்பில் (டபிள்யூ.டி.ஓ.) நிரந்தர தீர்வு எட்டப்படும் என்மத்திய வர்த்தகம் மற்றும் தொழில்துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன் நம்பிக்கை தெரிவித்துள்ளார்

தனது துறையின் 100 நாள் செயல்பாடுகள் குறித்து செய்தியாளர்களுக்கு விளக்கிய அவர், உணவுபாதுகாப்பு என்பது நமது நாட்டின் இறையாண்மையாகும். இதை டபிள்யூ.டி.ஓ. உறுப்பினர்கள் நிச்சயம் உணர்ந்து கொள்வார்கள் என்று அவர் நம்பிக்கைதெரிவித்தார்.

இந்த விஷயத்தில் இந்தியாவின் நிலையை போன்று வேறு சிலநாடுகளிலும் உள்ளது. விவசாயிகளிடமிருந்து குறைந்த விலையில் கொள்முதல்செய்து அதை ஏழைகளுக்கு குறைந்த விலையில் விற்பனைசெய்யும் வழக்கம் இங்குள்ளது. இந்த நடைமுறை இந்தியாவின் இறையாண்மை மட்டுமல்ல உரிமையும்கூட என்று அவர் சுட்டிக்காட்டினார்.

கடந்த ஜூலை மாதம் நடந்த மாநாட்டில் இந்தியாவின் நிலைப்பாடு தெளிவாக எடுத்து வைக்கப்பட்டது. இருப்பினும் கூட்டத்தில் திட்டவட்டமான முடிவு எடுக்கப்படவில்லை. விடு முறைக்குப் பிறகு செப்டம்பர் மாதம் டபிள்யூ.டி.ஓ. அலுவலகம் செயல்பட தொடங்கியுள்ளது.

டபிள்யூடிஓ வகுத்துள்ள விதிகளில் மாற்றம்செய்தால் மட்டுமே வர்த்தக ஒப்பந்தத்தில் கையெழுத்திட முடியும் என்று இந்தியா திட்டவட்டமாக கூறிவிட்டது.

இந்தியாவின் இந்த நிலைப்பாடு காரணமாக இந்தியா தனி மைப்படுத்தப்படுமா? என்று செய்தியாளர்கள் கேட்டதற்கு, இந்த பிரச்சினையில் இந்தியா தனதுநிலையை தெளிவாக முன்வைத்துவிட்டது. இதற்கு தீர்வுகாண வேண்டிய பொறுப்பு டபிள்யூ டிஓ-விடம்தான் உள்ளது. மேலும் உறுப்புநாடுகள் இந்தியாவின் நிலையை நன்கு புரிந்துகொண்டுள்ளன என்றார்.

இந்தியா தனிமைப் படுத்தப்பட்டுவிடும் என்ற எண்ணத்தை முதலில் கைவிடவேண்டும். பிற நாடுகள் இந்தியாவின் நிலையை உணர்ந்து, ஆதரவு நிலையை எடுத்துள்ளன. சமீபத்தில்தான் சீனாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டபோது அந்நாட்டு வர்த்தக அமைச்சர் இந்தியாவின் நிலையை ஏற்றுக் கொண்டதாக அமைச்சர் குறிப்பிட்டார்.

வேளாண் தொடர்பான விவாதக்கூட்டங்கள் இனி தொடர்ந்து ஜெனீவாவில் நடைபெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.உணவு பாதுகாப்பு தொடர்பான பிரச்சினைக்கு பல்வேறுதீர்வுகளை இந்தியா முன்வைத்துள்ளது. இதில் எதை ஏற்பது என்பதை டபிள்யூ.டி.ஓதான் தீர்மானிக்க வேண்டும்.

வேளாண் பொருள்களுக்கு அளிக்கப்படும் மானியத்தை கணக்கிடவேண்டும் என்று மத்திய அரசு டபிள்யூடிஓ அமைப்பை வலியுறுத்தியுள்ளது. இதற்கான விதிமுறைகள் வகுக்கப்பட்டால்தான் விவசாயிகளிட மிருந்து வேளாண் பொருள்களைக் கொள்முதல் செய்யமுடியும் என்றும் அதை குறைந்த விலையில் ஏழைகளுக்கு அளிக்க முடியும் என்றும் இந்தியா குறிப்பிட்டுள்ளது. இதற்கான கொள்கையை டபிள்யூடிஓ வகுத்து விட்டால் பிறகு விதியை மீறுவதாக குற்றம் சாட்ட முடியாது என்றும் இந்தியா குறிப்பிட்டுள்ளது.

மொத்த வேளாண் உற்பத்தி அளவில் 10 சதவீதம் மட்டுமே உணவுமானியமாக அளிக்க வேண்டும் என்று டபிள்யூ.டி.ஓ விதிமுறைகள் கூறுகிறது. ஆனால் உணவுப்பொருள்களின் விலை 20 ஆண்டுகளுக்கு முன்பிருந்த விலையையே டபிள்யூடிஓ நிர்ணயித்திருப்பதற்கு இந்தியா ஆட்சேபம் தெரிவித்துள்ளது.

வர்த்தக ஒத்துழைப்பு ஒப்பந்தத்தில் (டிஎப்ஏ) கையெழுத்திடுவதற்கு இந்தியா தயாராக உள்ளது. ஆனால் அதற்குமுன்பாக உணவு பாதுகாப்பு தொடர்பான பிரச்சினை தீர்க்கப்பட வேண்டும் என்று அவர் சுட்டிக் காட்டினார்.

டிஎப்ஏ அமலுக்கு வந்தால் சுங்க கட்டுப்பாடுகள் எளிமையாகும், வர்த்தகர்களின் பரிவர்த்தனை கட்டணம் குறையும்.

Leave a Reply

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந் ...

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந்துள்ளேன் கோவையில் கஸ்தூரி நாயக்கன்பாளையம் பகுதியில் பிரச்சாரம் மேற்கொண்ட அண்ணாமலை ...

இது சாதாரண தேர்தல் அல்ல

இது சாதாரண தேர்தல் அல்ல பாஜக மற்றும் கூட்டணி வேட்பாளர்கள் ஒவ்வொருவரும் வெற்றிபெற்று, நாடாளுமன்றத்தில் ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாதத ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாததை 10 ஆண்டுகளில் செய்து முடித்தேன் காங்கிரஸ்கட்சி பிரிவினைவாதத்தை தூண்டியது. ஆனால், நான் பிராந்தியத்தில் அமைதி ...

பால் மற்றும் மின் கட்டண உயர்வே ...

பால் மற்றும்  மின் கட்டண உயர்வே திமுக -வின் சாதனை இந்தியாவின் பாதுகாப்பை பிரதமர் மோடி உறுதி செய்துள்ளார்'' என ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் வ ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் விரும்பும் மோடி பிரதமர் நரேந்திரமோடி மற்றும் மைக்ரோசாப்ட் நிறுவனர் பில்கேட்ஸ் இடையே ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் த ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் தொல்லை கொடுப்பதும் காங்கிரஸின்  கலாச்சாரம் நீதித்துறையின்மீது அழுத்தம் தரப்படுவதாகவும் நீதிமன்றங்கள் அவமதிப்படுவதாகவும் நூற்றுக்கணக்கான வழக்குரைஞர்கள் ...

மருத்துவ செய்திகள்

உயர் இரத்த அழுத்தம் உருவாக காரணம்

உயர் மன அழுத்தம் நாம் தினமும் சாப்பிடும் உணவின் தன்மை . எளிதில் உணர்ச்சி வசப்படுதல். மது ...

மலச்சிக்கல் நீங்க உணவு முறைகள்

புரோட்டீன் தினமும் இவர்கள் ஒரு கிலோ எடைக்கு 1கிராம் வீதம் புரோட்டீன் உணவைச் சாப்பிடலாம்.

மகிழம் பூவின் மருத்துவக் குணம்

மகிழம் பூ குடி தண்ணீர் மகிழம் பூவைச் சுத்தம் பார்த்து எந்தக் கிருமியும் இல்லாமல் ...