தூய்மை இந்தியா திட்டத்தில் இணைந்து பணியாற்று வோம்

 பிரதமர் நரேந்திர மோடியின் 'தூய்மை இந்தியா' திட்டத்தில் இணைந்து பணியாற்று வோம் என நடிகர் சூர்யா அழைப்பு விடுத்துள்ளார்.

இந்தியாவை சுத்தப்படுத்த பிரதமர் நரேந்திரமோடி 'கிளீன் இந்தியா' என்ற திட்டத்தை தொடங்கியுள்ளார். காந்தி ஜெயந்தியை யொட்டி டெல்லியில் துடைப்பம் எடுத்து குப்பையைகூட்டி இத்திட்டத்தை அவர் தொடங்கிவைத்தார்.

அத்துடன் தூய்மை இந்தியாதிட்டத்தில் இணைந்து பணியாற்றுமாறு நடிகர்கள் கமல்ஹாசன், சல்மான் கான், நடிகை பிரியங்காசோப்ரா, கிரிக்கெட் வீரர் தெண்டுல்கர் உள்பட 9 பிரபலங்களுக்கு அழைப்புவிடுத்தார்.

இதனை கமல்ஹாசன், சல்மான்கான், பிரியங்கா சோப்ரா ஆகியோர் ஏற்றுக் கொள்வதாக அறிவித்துள்ளனர். கமல்ஹாசன் கூறும்போது, பிரதமரின் தூய்மை இந்தியா திட்டத்தில் இணைந்து செயல்படுவேன் என்றும் இந்த இயக்கத்தில் 90 லட்சம்பேரை இணைப்பேன் என்றும் தெரிவித்தார்.

இந்நிலையில் நடிகர் சூர்யாவும் பிரதமரின் தூய்மை இந்தியா திட்டத்துக்கு ஆதரவுதெரிவித்துள்ளார். இது குறித்து அவர் நேற்று வெளியிட்ட அறிக்கையில் கூறி இருப்பதாவது:-

நம்மையும், நமது இல்லத்தையும், சுற்றுப் புறத்தையும் தூய்மையாக வைத்துக் கொள்வது முக்கியமானதாகும். இது ஒவ்வொருவரும் ஆரோக்கியமாக இருக்க உதவும்.

நமது குழந்தைகளுக்கு செல்வத்தை அளிப்பது எவ்வளவு முக்கியமோ தூய்மையான சுற்றுச் சூழலை அவர்களுக்கு அளிப்பது அதை விட முக்கியமானது. ஆரோக்கியமான இந்தியாவுக்கு சுத்தமான இந்தியாவை உருவாக்குவோம். பிரதமர் நரேந்திர மோடியின் தூய்மைபாரத இயக்கத்தில் இணைந்து அதற்கு ஆதரவுதாருங்கள். இவ்வாறு அறிக்கையில் குறிப்பிட்டு உள்ளார்.

Leave a Reply

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந் ...

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந்துள்ளேன் கோவையில் கஸ்தூரி நாயக்கன்பாளையம் பகுதியில் பிரச்சாரம் மேற்கொண்ட அண்ணாமலை ...

இது சாதாரண தேர்தல் அல்ல

இது சாதாரண தேர்தல் அல்ல பாஜக மற்றும் கூட்டணி வேட்பாளர்கள் ஒவ்வொருவரும் வெற்றிபெற்று, நாடாளுமன்றத்தில் ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாதத ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாததை 10 ஆண்டுகளில் செய்து முடித்தேன் காங்கிரஸ்கட்சி பிரிவினைவாதத்தை தூண்டியது. ஆனால், நான் பிராந்தியத்தில் அமைதி ...

பால் மற்றும் மின் கட்டண உயர்வே ...

பால் மற்றும்  மின் கட்டண உயர்வே திமுக -வின் சாதனை இந்தியாவின் பாதுகாப்பை பிரதமர் மோடி உறுதி செய்துள்ளார்'' என ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் வ ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் விரும்பும் மோடி பிரதமர் நரேந்திரமோடி மற்றும் மைக்ரோசாப்ட் நிறுவனர் பில்கேட்ஸ் இடையே ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் த ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் தொல்லை கொடுப்பதும் காங்கிரஸின்  கலாச்சாரம் நீதித்துறையின்மீது அழுத்தம் தரப்படுவதாகவும் நீதிமன்றங்கள் அவமதிப்படுவதாகவும் நூற்றுக்கணக்கான வழக்குரைஞர்கள் ...

மருத்துவ செய்திகள்

புளிப்பு

உணவைச் சீரணிக்க புளிப்புச்சுவை உதவுகிறது. புளிப்புச் சுவை அரிக்கும் தன்மையுள்ளது. இரத்தத்தில் உள்ள ...

புற்றுநோயை குணபடுத்தும் ஒட்டக பால்

அரபு நாடுகளை சேர்ந்த விஞ்ஞானிகள் ஒட்டகப் பால் மற்றும் அதன் சிறுநீரில் இருந்து ...

தொட்டாற்சுருங்கியின் மருத்துவ குணம்

தொட்டாற்சுருங்கி இலைச் சாற்றை எடுத்துக் காலையிலும், மாலையிலும் தேமலின் மேல் தடவி வைத்துக் ...