5 ஆண்டுகளுக்கு பின்னர் டீசல்விலை லிட்டருக்கு ரூ.3.65 குறைந்தது

 5 ஆண்டுகளுக்கு பின்னர் டீசல்விலை லிட்டருக்கு ரூ.3.65 குறைந்தது. சர்வதேசசந்தையில் கச்சா எண்ணெய் விலை, டாலரின் மதிப்பு ஆகியவற்றுக்கு ஏற்ப இந்திய எண்ணெய் நிறுவனங் கள் பெட்ரோல் விலையை நிர்ணயம்செய்து வருகின்றன.

15 நாட்களுக்கு ஒருமுறை எண்ணெய் நிறுவனங்கள் இது போல விலையை நிர்ணயித்து வருகின்றன. கடந்த சில மாதங்களாக சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய்விலை குறைந்து வருகிறது.

இந்தநிலையில் டீசல் விலையை குறைப்பது என நேற்று கூடிய மத்திய மந்திரிசபை கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது. கூட்டமுடிவில் மத்திய நிதி மந்திரி அருண்ஜெட்லி கூறும்போது, ''கடந்த 5 ஆண்டுகளாக டீசல்விலை மாதந்தோறும் 50 பைசா உயர்ந்து வந்தது. இப்போது டீசல் விலை சர்வதேச சந்தை விலையைவிட அதிகமாக இருக்கிறது. எனவே டெல்லியில் நள்ளிரவு முதல் டீசல்விலை லிட்டருக்கு ரு.3.37 குறையும்'' என்றார்.

இதன் மூலம் மத்திய அரசுக்கு டீசல் விற்பனையில் ஏற்பட்டுவந்த மிகப் பெரிய மானியச்சுமை குறைந்தது. இனி பெட்ரோல் விலையை போல டீசல் விலையும் சர்வதேச சந்தை விலைக்கு ஏற்ப எண்ணெய் நிறுவனங்களே மாற்றியமைக்கும் என்றும் அருண்ஜெட்லி கூறினார்.

சென்னையில் டீசல் லிட்டருக்கு ரூ.3.65 குறைந்து ஒருலிட்டர் ரூ.59.27 ஆனது. மும்பையில் லிட்டருக்கு ரூ.3.72-ம், கொல்கத்தாவில் ரூ.3.51-ம் குறைந்தது.

Leave a Reply

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

செங்கோல் என்ன செய்யும்?

செங்கோல் என்ன செய்யும்? கொடுங்கோன்மை' என்ற சொல்லுக்கு மாற்றாக 'செங்கோன்மை' என்ற சொல்லை ...

ஆனந்த் பவனில் ‘வாக்கிங் ஸ்டிக ...

ஆனந்த் பவனில் ‘வாக்கிங் ஸ்டிக்’காக இருந்ததை வெளிக்கொண்டு வந்துள்ளோம் புதிய பார்லிமென்டில் நிறுவப்பட உள்ள செங்கோல் பிரதமர் நரேந்திர ...

மோடி கைபட்டால் குற்றம், கால்பட் ...

மோடி கைபட்டால் குற்றம், கால்பட்டால் குற்றம் பாரத பிரதமர் நரேந்திர மோடியின் கனவு திட்டங்களில் ஒன்று ...

கர்நாடக தேர்தல் முடிவு தேசத்தி ...

கர்நாடக தேர்தல் முடிவு தேசத்தின் மனோநிலை ஆகாது நடந்து முடிந்த கர்நாடக மாநில சட்டமன்ற   தேர்தலில் காங்கிரஸ் ...

ரூ.1.31 லட்சம் கோடி: திமுகவின் சொத் ...

ரூ.1.31 லட்சம் கோடி: திமுகவின் சொத்து பட்டியலை வெளியிட்டார் அண்ணாமலை! தமிழக பா.ஜ., தலைவர் அண்ணாமலை இன்று ஆளும் தி.மு.க., ...

நமது ஆட்சிமுறையும் சுவாமி விவே ...

நமது ஆட்சிமுறையும் சுவாமி விவேகானந்தரால் ஈர்க்கப்பட்டதுதான் ஸ்ரீ இராமகிருஷ்ண பரமஹம்சா, மாதா ஸ்ரீ சாரதா தேவி ...

மருத்துவ செய்திகள்

கர்ப்ப காலத்தில் எத்தனை நாட்களுக்கு ஒருமுறை மருத்துவரைப் பார்ப்பது நல்லது?

முதல் 20 வாரம் வரை, மாதம் ஒரு முறை மருத்துவரை அணுகி சிசுவின் ...

எள்ளுச் செடியின் மருத்துவக் குணம்

கண்ணில் எப்பொழுதும் எரிச்சல் இருந்து கொண்டே இருக்கும். அப்பொழுது எள்ளுப் பூவைக் கொண்டுவந்து, ...

தர்ப்பூசணியின் மருத்துவக் குணம்

வயிறு எரிச்சல், அடிவயிற்றுக் கோளாறுகளை உடனடியாகச் சரி செய்யும். சிறுநீரகக் கோளாறுகளையும், சிறுநீர்ப்பைக் ...