திமுகவுக்கு ஆங்கிலேயர் ஆட்சியே பரவா இல்லை..

திமுகவுக்கு ஆங்கிலேயர் ஆட்சியே பரவா இல்லை.. கோவில்களை ஒழுங்கா வைத்திருந்தனர் என தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை பேசியுள்ளார்.

தமிழ்நாடு அரசின் இந்துசமய அறநிலையத் துறைக்கு எதிராக சென்னை வள்ளுவர் கோட்டத்தில் நேற்று சனிக் கிழமையன்று தமிழ்நாடு பாஜகவினர் போராட்டம் நடத்தினர். இந்தப் போராட்டத்தில் தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை பங்கேற்றுபேசினார்.

இப்போராட்டத்தில் அண்ணாமலை பேசியதாவது: இந்துகோவிலில் ஒரு எண்ணெய் வாங்குவதற்குகூட இஓ கையெழுத்து போட்டால்தான் முடியும். என்னய்யா காலக்கொடுமை? சூடம், பத்தி வாங்குவதற்குகூட இஓ கையெழுத்து. திமுகவுக்கு வெள்ளைக்காரங்களே பரவாயில்லை. அவனாவது கோவிலைகொஞ்சம் ஒழுங்கா வெச்சிருந்தான். யாரையும் திருடவிடாமல் பார்த்துக்கொண்டான். இதை எல்லாம் கேள்வி கேட்போம் தொடர்ந்து பேசுவோம்.. இது ஆரம்பம்தான்.

மக்களாக முன்னால்வந்து இந்துசமய அறநிலையத் துறையே வேண்டாம் சாமீ என சொல்லவேண்டும். நாங்களே நிர்வாகம்செய்து கொள்கிறோம் என மக்களே சொல்லவேண்டும். ஆஸ்திரேலியாவில் இருந்து இப்பதான் 3 ஆண்டுகளுக்கு முன்னர் டோனி அபோட், பிரதமர் மோடியிடம் ஒரு அற்புதமான நடராஜர் சிலையை கொடுத்து விட்டு சென்றார். இது எங்கள் நாட்டில் இருக்கக்கூடாது உங்கள் நாட்டில் இருக்கவேண்டும் என்று சொன்னார் டோனி அபோட். இன்றைக்கு 200க்கும் மேல டிஸ்பியூட்டில் இருக்கிறது.

திமுக 6 முறை தமிழ்நாட்டில் ஆட்சியில் இருந்திருக்கிறது. திமுக ஆட்சியில் ஒரே ஒருசிலையை மீட்டுகொண்டு வந்ததற்கு, முயற்சி எடுத்ததற்கு டாக்குமெண்ட்டை திமுக ரிலீஸ்செய்யனும். பேச்சுக்கு மட்டும் இந்துக்கு பாதுகாவலனாக இருக்கிறேன். இந்துக்களுக்கு துணை இருக்கிறேன் என்கிறது திமுக. உங்களுக்குதேவை உண்டியல். கண்ணு உண்டியல்லதான் இருக்கு. கோவிலில் 6 காலபூஜை எப்படி நடக்கனும், அந்தமரபை எப்படி கடைபிடிக்கனும் என்கிற ஆசை இல்லை.

திருச்செந்தூர் முருகன் கோவிலுக்கு நமது உறவினர்கள் கடவுளுக்கு வேண்டிகொண்டு பசுமாட்டை கொடுப்போம். திருச்செந்தூர் முருகன் கோவிலில் நடந்த கணக்குதணிக்கை அறிக்கையில் என்ன சொல்லப் பட்டிருக்கிறது எனில் 5,309 மாடுகளைக் காணவில்லை என்பதுதான். அதாவது பக்தர்கள் மாடுகொடுத்ததற்கு பதிவுகள் இருக்கின்றன. ஆனால் யார் ஏலம்விட்டது? யார் மாடுகளை சைடில் திருடி திமுக கிளைச் செயலாளருக்கு எல்லாம் கொடுத்தனர்? 5,309 மாடுகளை திருச்செந்தூர் கோவிலில் காணவில்லை. வடிவேலு கிணத்தை காணோம் என்று சொன்னது போல திருச்செந்தூரில் மாடுகள் காணாமல் போயிருக்கின்றன.மதுரை மீனாட்சி கோவிலில் உண்டியல் காசு எடுத்து 30லட்சத்தில் கார் வாங்கப்பட்டு உள்ளது. 2021 ஆண்டில் 21கோடி கோயில் நிர்வாகத்தை தணிக்கை செய்ய 70கோடி பணத்தை எடுத்து உள்ளனர். மைலாப்பூர் கபாலீசுவரர் கோவிலில் இந்து சமய அறநிலையத் துறை சார்பில் நடைபெறும் ஆய்வு கூட்டத்தில் அதிகாரிகள் மிச்சர், பட்டர் முருக்கு சாப்பிட்டுகின்றனர், அதுவும் உண்டியல் பணம் தான் , மேலும் வடபழனி முருகன் கோயிலில் அக்குவா வாட்டர் உள்ளிட்டவைகளை வாங்க உண்டியல் பணம் செலவு செய்துள்ளனர்.

தமிழகத்தில் பாஜக ஆட்சிக்கு வந்தால் இந்து சமய அறநிலையத் துறை என்பது இருக்காது அதற்கு முதல்கையெழுத்து பாஜக அமைச்சர் போடுவார் என அண்ணாமலை உறுதிபட தெரிவித்தார்.

Comments are closed.

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந் ...

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந்துள்ளேன் கோவையில் கஸ்தூரி நாயக்கன்பாளையம் பகுதியில் பிரச்சாரம் மேற்கொண்ட அண்ணாமலை ...

இது சாதாரண தேர்தல் அல்ல

இது சாதாரண தேர்தல் அல்ல பாஜக மற்றும் கூட்டணி வேட்பாளர்கள் ஒவ்வொருவரும் வெற்றிபெற்று, நாடாளுமன்றத்தில் ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாதத ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாததை 10 ஆண்டுகளில் செய்து முடித்தேன் காங்கிரஸ்கட்சி பிரிவினைவாதத்தை தூண்டியது. ஆனால், நான் பிராந்தியத்தில் அமைதி ...

பால் மற்றும் மின் கட்டண உயர்வே ...

பால் மற்றும்  மின் கட்டண உயர்வே திமுக -வின் சாதனை இந்தியாவின் பாதுகாப்பை பிரதமர் மோடி உறுதி செய்துள்ளார்'' என ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் வ ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் விரும்பும் மோடி பிரதமர் நரேந்திரமோடி மற்றும் மைக்ரோசாப்ட் நிறுவனர் பில்கேட்ஸ் இடையே ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் த ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் தொல்லை கொடுப்பதும் காங்கிரஸின்  கலாச்சாரம் நீதித்துறையின்மீது அழுத்தம் தரப்படுவதாகவும் நீதிமன்றங்கள் அவமதிப்படுவதாகவும் நூற்றுக்கணக்கான வழக்குரைஞர்கள் ...

மருத்துவ செய்திகள்

முடி உதிர்தல் குறைய

வேப்பிலை கிருமிநாசினி . இது சிரிது எடுத்து நீரில் வேகவைத்து . வேகவைத்த ...

குடல்வால் தேவையா?

மனிதனின் உடலில் சிறுகுடல் மற்றும் பெருங்குடல் இணையும் இடத்தில் குடல்வால் எனும் ஒரு ...

நீரிழிவு விழித்திரை நோய்

கடந்த 1922-ஆண்டில் ஃப்ரெடெரிக் பாண்ட்டிங்க் என்ற விஞ்ஞானி, சார்லஸ்பெஸ்ட் என்பவருடன் இணைந்து ...