ஏகாதசி விரதம் இருந்த அம்பரீசனை காத்த பெருமாளின் சுதர்சன சக்கரம்

சகல செல்வத்தை எல்லாம் பெற்று தரும் ஏகாதசி விரதத்தை அம்பரீசன் மன்னன் பல_ஆண்டுகளாக மேற்கொண்டு வந்தார். இவன் ஏகாதசியில் விரதமிருந்து மறு நாள் துவாதசியில் நல்லநேரத்தில் பிரசாதம் உண்டு விரதத்தை முடிப்பார் .

இவரது நூறாவது விரதநாளில் சிறப்பான ஏற்பாடுகள்

செய்யப்பட்டிருந்தது. நாட்டுமக்கள் அனைவரும் மிகசந்தோஷமாக இருந்தனர். இருப்பினும் தேவலோகத்திலோ அனைவரும் வருத்தமாக இருந்தனர். அம்பரீசன் நூறாவது விரதத்தை முடித்துவிட்டால் தேவலோக பதவிகூட கிடைத்துவிடும்.

மானிடனுக்கு இந்த தேவலோக பதவி கிடைத்துவிட்டால் தேவர்களின் மரியாதை குறைந்துவிடும் என்று பயந்தனர். எனவே தேவர்கள் துர்வாச முனிவரின் உதவியை நாடினர் . துர்வாச முனிவரும் தேவர்களுக்கு உதவுவதாக தெரிவித்து விட்டு, மன்னனின் விரதத்தைதடுக்க பூமிக்குவந்தார். அவர் வருவதற்க்குள் மன்னன் விரதத்தை முடித்திருந்தார் . அவர் ஏகாதசி விரதத்தை முடித்திருந்தாலும் துவாதசிநேரம் முடிவதற்குள் அவர் உணவை அருந்தியிருக்கவேண்டும். அப்போதுதான் ஏகாதசியின் முழுப்பயனையும் பெறலாம் .

துவாதசி நேரம் முடிந்துவிட்டால் பயனில்லை. துவாதசி ஆரம்பிக்க_மன்னன் உணவு உண்ண தயாரானார் . அதற்க்குள் துர்வாசர் வந்துவிட்டார். தன்விரதத்தை தடுக்கத்தான் துர்வாசர் வந்துள்ளார் என்பது மன்னனுக்குதெரியாது.
முனிவரை மகிழ்ச்சியுடன் வரவேற்ற மன்னன்,”” என்னுடன் தாங்களும் உணவருந்தினால், எனக்கு மிகுந்தசந்தோஷம் உண்டாகும் ‘என தெரிவித்தார் . முனிவரும் சம்மதித்தார்,

நதியில் நீராடி விட்டு வருகிறேன். அதன் பின் உணவருந்தலாம் என கூறி சென்றார். முனிவரின் திட்டமோ வேறு , தான் தாமதமாக நீராடி விட்டு வந்தால் அதற்குள் துவாதசிநேரம் முடிந்துவிடும். மன்னன் நம்மை எதிர்பார்த்து காத்திருந்தால் அவனது விரதம் தடைபடும் என்பதுதான். துவாதசி முடிவதற்கு சில மணி_நேரங்களே இருந்தன . துர்வாச முனிவர் வருவதற்குள் சாப்பிட்டுவிட்டால் அவரது கோபத்துக்கு ஆளாக நேரிடும். இன்னும் ஒரு சில நிமிடங்களே இருந்தன .

வேதபண்டிதர்களிடம் என்ன செய்யலாம் என்று ஆலோசனை நடத்தினார் . உடனே தலைமை பண்டிதர, உள்ளங்கை அளவு தீர்த்தத்தை மூன்று_முறை குடித்தால் விரதம் முடிந்துவிடும் ஏகாதசியின் முழு பயனும் கிடைத்து விடும்,’ என தெரிவித்தார். அதை போன்று பெருமாளை நினைத்து தீர்த்தத்தை மூன்று முறை குடித்து தன்விரதத்தை பூர்த்தி செய்துவிட்டு, முனிவருடன் சேர்ந்து சாப்பிட காத்திருந்தார் .

இதனை தனது ஞான திருஷ்டியினால் அறிந்த துர்வாச முனிவர் மிகுந்த கோபம் கொண்டார் . உடனே ஒரு பூதத்தை அம்பரீசனின் மீது ஏவி அவரை கொல்லுமாறு ஆணையிட்டார். இதை கண்டு பயந்த அம்பரீசன் பரிமளரங்கநாதரிடம் சென்று, பெருமாளே! உனக்காக ஏகாதசிவிரதம் இருக்ககூடாது என்பதற்க்காக ஏவப்பட்டுள்ள பூதத்திடமிருந்து என்னை காப்பாற்று என பெருமாளின் பாதத்தில் சரணடைந்தார்.

தனது பக்த்தனை கொள்ள வந்த பூதத்தை கண்ட பெருமாள் கோபம் அடைந்தார் தனது சுதர்சன சக்கரத்தால் அந்த பூதத்தை அழித்தார் .ஆனால் சுதர்சன சக்கரமோ ஏவிவிட்ட துர்வாசரையும் தாக்கவருகிறது. சிவன் பிரம்மா, ஆகியோரும் தங்களால் உதவ_இயலாது என்று கூறுகின்றனர். திருமாலிடமே துர்வாசர் தஞ்சம் அடைய அவரும் கை விரிக்கிறார்.பிறகு அம்பரீசனிடமே சென்று மன்னிப்புகேட்க அவரும் திருமாலை சுதர்சன சக்கரத்தை திரும்பபெற வேண்டி அவரை காப்பாற்றுகிறார். துர்வாசர் கர்வம் அடக்கியது .

நூறு ஏகாதசி விரதங்கள் இருந்து மன்னனிடம், வேண்டியதை கேள்’ என பெருமாள் கேட்டார் . அதற்கு மன்னன், தாங்கள் இத்தலத்திலேயே வீற்றிருந்து பக்தர்களின் குறை கேட்டு அருள் புரிய வேண்டும்,’என வேண்டினார் . பெருமாளும் மன்னன் விருப்பப்படி இத்தலத்தில் அருள் புரிந்து வருகிறார். இத்தளம் மயிலாடுதுறையில் இருக்கிறது இந்த திருஇந்தளூர் பரிமள ரங்கநாதர் திருத்தலம். சென்னையி லிருந்து சுமார் 260 km தொலைவில்_அமைந்துள்ளது

ஏகாதசி விரதம் | ஏகாதசி விரதம் உருவான கதை | ஏகாதசி என சொன்னாலே பாவம் தீரும் | வைகுண்ட ஏகாதசி சொர்க்கவாசல் திறக்கப்படுவது ஏன்

Leave a Reply

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

அயோத்திக்கு 34 சிறப்பு ரயில்… ம ...

அயோத்திக்கு 34 சிறப்பு ரயில்… மொத்த செலவும் மத்திய அரசே உத்தரப்பிரதேச மாநிலம் அயோத்தியில் கடந்தமாதம் ராமர் கோயில் திறக்கப்பட்டது. ...

அரசியலுக்காக பேசும் பேச்சுக்க ...

அரசியலுக்காக பேசும் பேச்சுக்கள் வலியை ஏற்படுத்துகிறது இந்தியாவை வளர்ந்த நாடாக்க பிரதமர் மோடி சபதம் ஏற்றுள்ளார். ...

கட்சியில் வாரிசுகள் இருக்கலாம ...

கட்சியில் வாரிசுகள் இருக்கலாம்.  கட்சியே வாரிசுகள் கையில் இருப்பது ஆபத்து லோக்சபா தேர்தலில் தேசிய ஜனநாயக கூட்டணி 400 இடங்களில் ...

எங்கள் குழந்தை ராமர் இனி கூடாரங ...

எங்கள் குழந்தை ராமர் இனி கூடாரங்களில் வசிக்க மாட்டார் ராமச்சந்திர மூர்த்திக்கு ஜெயம் உண்டாகட்டும் ராமச்சந்திர மூர்த்திக்கு ஜெயம் உண்டாகட்டும் வணக்கத்திற்குரிய ...

பாகுபாடு, திருப்தி படுத்தும், அ ...

பாகுபாடு,  திருப்தி படுத்தும், அரசியல் பிரச்சனைகளை வளர்த்தது நம்பாரதம் 1,500 ஆண்டுகளாக அன்னியரை எதிர்த்து போராடியது வரலாறு. ...

புனிதத்துவத்தை உணர்ந்த மனிதர்

புனிதத்துவத்தை உணர்ந்த மனிதர் இந்தமனிதன் நினைத்திருந்தால் நேரடியாக ஜனவரி 22 ஆம் தேதி ...

மருத்துவ செய்திகள்

காரம்

காரம் சுவையுள்ளதாகும். மிளகு, மிளகாய், கடுகு, இஞ்சி, சுக்கு, கருணைக்கிழங்கு, கலவைக்கீரை, வேளைக்கீரை ...

தியானமும் தற்சோதனையும்

தற்சோதனை இல்லாத தியானம், கைப்பிடி இல்லாத கூர்மையான கத்தி போன்றது. தற்சோதனையின்றி தியானம் ...

பேரீச்சம் பழத்தின் மருத்துவ குணம்

இயற்கை அன்னையின் கொடையான பழங்களில் பலவற்றை அப்படியே நேரடியாக சாப்பிட்டுவிடலாம் , சில ...