நாடு ‘டோக்கன்‘ முறையிலிருந்து ‘டோட்டல்‘ அணுகுமுறையை நோக்கி நகா்ந்துள்ளது

மருத்துவ வசதியில் நாடு ‘டோக்கன்‘ அணுகு முறையிலிருந்து ‘டோட்டல்‘ (மொத்த) அணுகுமுறையை நோக்கி நகா்ந்துள்ளதாக மத்தியசுகாதாரம், குடும்ப நலன்; ரசாயனம் மற்றும் உரத்துறை அமைச்சா் மன்சுக் மாண்டவியா திங்கள்கிழமை தெரிவித்தாா்.

பிரதமா் நரேந்திரமோடி தலைமையில், மத்திய அரசின் குறிக்கோளாக இருப்பது, சுகாதாரத்துறையில் முன்தடுப்பு மருத்துவம், நவீன மருத்துவ வசதி ஆகியவைகளுக்கிடையே ஒருங்கிணைந்து பணியாற்றுவதாகும் எனவும் மாண்டவியா குறிப்பிட்டாா்.

தில்லி கனாட் பிளேஸில் மத்திய அரசுக்குசொந்தமான லேடி ஹாா்டிங் மருத்துவக் கல்லூரி மற்றும் அதனுடன் இணைந்த மருத்துவ மனையில் நவீன தொழில் நுட்ப வசதிகளுடன் புற நோயாளிகள் மற்றும் உள்-நோயாளிகளுக்கான கூடுதல்வசதிகள் கொண்ட கட்டடங்களை மத்திய சுகாதாரம், குடும்பநலத்துறை இணை அமைச்சா் டாக்டா் பாா்தி பிரவீண் பவாா் முன்னிலையில் மத்திய அமைச்சா் மன்சுக் மாண்டவியா திறந்துவைத்தாா்.

இந்த புதிய கட்டடங்கள் மூலம் மருத்துவமனையில் உள்நோயாளிகளுக்கான படுக்கைவசதிகள் 877 லிருந்து 1000 க்கும் மேற்பட்ட படுக்கைவசதிகள் அதிகரிக்கப்பட்டுள்ளது. இந்தபுதிய பகுதியில் கூடுதலான அதிநவீன சிடிஸ்கேனா் வசதிகள் ஏற்படுத்தப் பட்டுள்ளது. இதே போன்று புதிய மல்டி-ஸ்பெஷாலிட்டி(பல்நோக்கு வசதி) புறநோயாளிகளுக்கான பிரிவில் அனைத்துவகையான மருத்துவம், அறுவை சிகிச்சை சிறப்பு நிபுணா்கள் உள்ளிட்ட முழுமையான சுகாதாரப் பாதுகாப்புகளுடன் கூடுதல்வசதிகள் செய்யப்பட்டுள்ளன.

இந்த திறப்புவிழா நிகழ்ச்சியில் மத்திய சுகாதாரத்துறை அமைச்சா் டாக்டா் மன்சுக் மாண்டவியா பேசுகையில் கூறியதாவது:

நாடு ‘டோக்கனில்‘ இருந்து விலகி ‘ ‘ டோட்டல்‘‘ (மொத்த)அணுகுமுறையை நோக்கி நகா்ந்துள்ளது. ஏழைகளுக்கான மருத்துவ சிகிச்சை செலவைகுறைக்கப்பட்டு, மருத்துவா்களின் எண்ணிக்கையை விரைவாக அதிகரிப்பதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

நாம் முழுமையாகச் சிந்தித்து நீண்ட காலத்திற்கான பாதையை மருத்துவத்தில் உருவாக்க வேண்டும். இந்த ஆண்டு, சுதந்திரத்தின் அமுதப் பெருவிழாவைக் கொண்டாடும் போது,​நாம் சுதந்திரத்தின் 100 -வது ஆண்டு நிறைவடையும் போது இந்தியா எத்தகைய சுகாதார உள்கட்டமைப்பு கொண்டு இருக்கவேண்டும் என்கிற தொலைநோக்கு பாா்வையுடன் இணைந்து செயல்பட வேண்டும். மத்திய அரசின் எந்த ஒரு திட்டத்தையும் செயல்படுத்தும் போது அதில் மாநிலங்கள் மிக முக்கிய பங்கு வகிக்கின்றன. கடந்த 3-நாள்களாக குஜராத் கேவாடியாவில் நடைபெற்ற சிந்தனைக்கூட்டத்தில், அனைத்து மாநில சுகாதார அமைச்சா்களும் தங்களின் சிறந்த நடைமுறைகளைப் பகிா்ந்துகொண்டனா். அதை எவ்வாறு உலகளாவியதாக மாற்றுவது என்பது பற்றியும் பயனுள்ளவிவாதம் நடந்தது. இதே போன்று மத்திய அரசின் எந்தவொரு செயல் திட்டத்திலும் பொது மக்கள் பங்கேற்பு மிகவும் முக்கியமானது.

ஆரோக்கியம் அணுகக்கூடியதாகவும், மலிவு விலையில் நோயாளிகளுக்கு கிடைக்கத்தக்கதாக மாற்றுவது மிகவும் முக்கியம் என குறிப்பிட்டாா்.

மத்திய இணை அமைச்சா் டாக்டா் பாரதி பிரவின் பவாா், நாட்டின் தலைநகரில் உள்ள பழமையான இந்த மருத்துவக் கல்லூரிக்கு ஒரு நீண்ட வரலாறு உண்டு. சிறந்த சுகாதார வசதி என்பது நோய்களுக்கான சிகிச்சைக்கு மட்டுமல்ல அவை சமூக நீதியை ஊக்குவித்து மேம்படுத்துகின்றன எனக் குறிப்பிட்டாா்.

இந்த நிகழ்ச்சியில் மத்திய சுகாதார சேவைகளுக்கான இயக்குநா் ஜெனரல் டாக்டா் அதுல் கோயல், லேடி ஹாா்டிஞ்ச் மருத்துவக் கல்லூரியின் இயக்குநா் டாக்டா் ராம் சந்திரா உள்ளிட்டோரும் கலந்து கொண்டனா்.

Comments are closed.

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

ஸ்டிக்கர் ஒட்டும் கனிமொழி

ஸ்டிக்கர் ஒட்டும் கனிமொழி குலசேகரப்பட்டினத்தில் ராக்கெட் ஏவுதளம் அமைக்கும் மத்தியஅரசின் திட்டத்துக்கு, கனிமொழி ...

அயோத்திக்கு 34 சிறப்பு ரயில்… ம ...

அயோத்திக்கு 34 சிறப்பு ரயில்… மொத்த செலவும் மத்திய அரசே உத்தரப்பிரதேச மாநிலம் அயோத்தியில் கடந்தமாதம் ராமர் கோயில் திறக்கப்பட்டது. ...

அரசியலுக்காக பேசும் பேச்சுக்க ...

அரசியலுக்காக பேசும் பேச்சுக்கள் வலியை ஏற்படுத்துகிறது இந்தியாவை வளர்ந்த நாடாக்க பிரதமர் மோடி சபதம் ஏற்றுள்ளார். ...

கட்சியில் வாரிசுகள் இருக்கலாம ...

கட்சியில் வாரிசுகள் இருக்கலாம்.  கட்சியே வாரிசுகள் கையில் இருப்பது ஆபத்து லோக்சபா தேர்தலில் தேசிய ஜனநாயக கூட்டணி 400 இடங்களில் ...

எங்கள் குழந்தை ராமர் இனி கூடாரங ...

எங்கள் குழந்தை ராமர் இனி கூடாரங்களில் வசிக்க மாட்டார் ராமச்சந்திர மூர்த்திக்கு ஜெயம் உண்டாகட்டும் ராமச்சந்திர மூர்த்திக்கு ஜெயம் உண்டாகட்டும் வணக்கத்திற்குரிய ...

பாகுபாடு, திருப்தி படுத்தும், அ ...

பாகுபாடு,  திருப்தி படுத்தும், அரசியல் பிரச்சனைகளை வளர்த்தது நம்பாரதம் 1,500 ஆண்டுகளாக அன்னியரை எதிர்த்து போராடியது வரலாறு. ...

மருத்துவ செய்திகள்

வேப்பம் பூவின் மருத்துவக் குணம்

வேப்பமரத்தின் பூக்கள் உடலுக்கு உரமளிக்கும். வயிற்று வலியைக் குணப்படுத்தும். குடற்புழுக்களைக் கொல்லும். இரத்தத்தைச் ...

தொட்டாற்சுருங்கியின் மருத்துவ குணம்

தொட்டாற்சுருங்கி இலைச் சாற்றை எடுத்துக் காலையிலும், மாலையிலும் தேமலின் மேல் தடவி வைத்துக் ...

பொடுகு நீங்க

பொடுகு காரணமாக தலையில்_அரிப்பு போன்றவை ஏற்படும். இதுபோன்ற பொடுகு பிரச்னையை திர்க சில ...