திமுக அரசுக்கு எதிர்ப்புத்தெரிவித்து, வரும் 15ஆம் தேதி மாநிலம் தழுவியளவில் போராட்டம் நடத்த இருப்பதாக தமிழக பாஜக அறிவித்துள்ளது.
தமிழகத்தில் பால்விலையை பார்த்தால் கண்கள் இருண்டு போவதாக தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.
முதன்முறையாக தமிழக பாஜக மண்டல அளவில்போராட்டம் நடத்தப்போவதாக அறிவித்துள்ளது. இதையடுத்து போராட்டம் வெற்றிபெறுவதை உறுதிசெய்ய கட்சி நிர்வாகிகள் முழுவீச்சில் செயல்பட்டு வருகின்றனர்.
“திமுக ஆட்சிஅமைந்தால் விடியலை தருகிறோம் என்று சொல்லிவிட்டு, பால்விலையை உயர்த்தி உள்ளது திமுக அரசு. இதுதான் மக்கள் விடியலுக்குத்தரும் விலையா?
“தமிழக அரசின் ‘ஆவின்’ பால் வழங்கும் நிறுவனம், அதன் நிர்வாகச் சீர் கேட்டினால், நஷ்டத்தில் நடத்தப் படுகிறது. தவறான நடைமுறையால் ஏற்படும் வருவாய் இழப்பை மக்கள் தலையில் சுமத்துவதை ஏற்றுக்கொள்ள முடியாது,” என்று அண்ணாமலை அறிக்கை ஒன்றில் தெரிவித் துள்ளார்.
ஏற்கெனவே வீட்டுவரி உயர்வு, சொத்து, தண்ணீர், கழிவு நீர் வரி ஆகியவற்றுடன் மின்கட்ணத்தையும் பத்திரப்பதிவுக் கட்டணத்தையும் தமிழக அரசு தாறுமாறாக உயர்த்திஉள்ளதாக குறிப்பிட்டுள்ள அவர், தற்போது பச்சிளம் குழந்தைகளுக்கு பயன் படும் பாலுக்கான விலையையும் உயர்த்தி இருப்பது, வாக்களித்த தமிழகமக்களை வஞ்சிக்கும் செயல் எனச் சாடியு ள்ளார்.
“அத்தியாவசிய பொருள்களின் விலைகள் எல்லாம் ஏறுமுகமாக உள்ளநிலையில், தமிழக மக்களின் வாழ்வாதாரம் மட்டும் இறங்குமுகத்தில் உள்ளது. பால் விலையை உயர்த்தி, மக்களை துன்பப்படுத்துகிறது திமுக அரசு,” என்று அண்ணாமலை தெரிவித்துள்ளார். இதற்கிடையே, முதல் முறையாக, பாஜக சார்பில் தமிழகத்தில் மண்டலளவில் போராட்டம் நடைபெறும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தமிழக பாஜக தலைவராக அண்ணாமலை பொறுப்பேற்ற பின்னர், மாநிலம் தழுவிய அளவில் சுமார் 1,200 மண்டலங்களையும் உட்படுத்தி, போராட்டம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இம்முறை அதிகக்கூட்டத்தை திரட்டிகாட்டும் மண்டலத் தலைவர்களை பிரதமர் மோடி நேரில் சந்திப்பார் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் பாஜக நிர்வாகிகள் முழுவீச்சில் செயல்பட்டு வருகின்றனர்.
கோவைக்கொடி இனத்தை சேர்ந்த இந்தமூலிகைக்கு பொதுவாக கருடன் கிழங்கு, பேய் சீந்தில், ... |
வயிற்றுஉப்பிசம், வயிற்றுவலி ஏற்பட்டிருந்தால் 1௦ கிராம் இஞ்சியை நைத்து ஒரு சட்டியில் போட்டு, ... |