தற்போதைய கரீஃப் பருவத்தில் பயறு வகைகள் சாகுபடி பரப்பு அதிகரித்திருப்பது குறித்து மத்திய வேளாண்மை, விவசாயிகள் நலன், ஊரக மேம்பாட்டுத்துறை அமைச்சர் திரு சிவராஜ் சிங் சௌகான் மகிழ்ச்சி தெரிவித்துள்ளார். புதுதில்லியில் இன்று கரீஃப் பருவ சாகுபடி குறித்து ஆய்வு செய்த அமைச்சர், பயறு வகைகள் குறிப்பாக துவரை, உளுந்து சாகுபடி பரப்பு சென்ற ஆண்டை விட, 50 சதவீதம் அதிகரித்திருப்பதாக தெரிவித்தார். அனைத்து மாநிலங்களிலும் உளுந்து, மைசூர் துவரம்பருப்பு ஆகியவற்றை 100 சதவீதம் கொள்முதல் செய்ய மத்திய அரசு உறுதிபூண்டுள்ளதாக அவர் கூறினார்.
வரவிருக்கும் பருவமழை காலம், நிலத்தடி நீர் நிலைமை, விதைகள், உரங்களின் இருப்பு நிலை பற்றி அமைச்சருக்கு அதிகாரிகள் எடுத்துரைத்தனர். கரீஃப், ரபி பயிர்களுக்கு உரிய காலத்தில் உரங்கள் கிடைப்பதை உறுதி செய்யுமாறு அதிகாரிகளிடம் அமைச்சர் சிவராஜ் சிங் செளகான் வலியுறுத்தினார். மாநிலங்களின் உரத் தேவையை பூர்த்தி செய்யுமாறும் அவர் அறிவுறுத்தினார்.
இந்த ஆய்வுக் கூட்டத்தில் அமைச்சகத்தின் மூத்த அதிகாரிகளும், இந்திய வானிலை ஆய்வு மையம், மத்திய நீர் ஆணையம், உரத்துறை ஆகியவற்றின் அதிகாரிகளும் கலந்துகொண்டனர்.
திராட்சையானது பத்திய உணவுக்கு ஏற்றது. பசியையும் தூண்டவல்லது. தொண்டை, முடி, தோல், கண்களுக்கு ... |
இது துவர்ப்பாக இருப்பதால் உடலை உரமாக்கிப் பலப்படுத்தும். சிறுநீர் பெருக்கும். முறைவெப்பமகற்றி நன்மை ... |
எட்டிமரம் - புங்க மரம் போல் தோற்றமளிக்கும். ஆனால் இதில் ஆரஞ்சுப்பழ நிறத்தில் ... |