அனைத்து வளங்களையும் பெற வழிவகை செய்பவள் சரஸ்வதி

கல்விச்செல்வம் அளித்து அதன் மூலம் உலகில் வாழத்தேவையான அனைத்து வளங்களையும் பெற வழிவகை செய்பவள் சரஸ்வதி. பிரம்மனின் மனைவியான சரஸ்வதி கல்வி அறிவை வழங்குபவள். கல்வி என்பது குழந்தைகள், இளைஞர்களுக்கு மட்டுமல்ல அனைவருக்கும் எக்காலத்திற்கும் தேவையானது தான். இவ்வுலகத்திற்கு வேண்டிய அறிவையும், அவ்வுலகத்திற்கு தேவையான ஞானத்தையும் அளிப்பவள் சரஸ்வதி.

சரஸ்வதி தேவி பிரம்மாவை மணம் புரிய ஊசியின் முனைமேல் நின்று உத்த தவம் செய்ததாக கூறுவர். சரஸ்வதிக்குப் பெரும்பாலும் கோயில் இல்லை. தமிழகத்தில் கூத்தனூரில் தனிக் கோயில் உண்டு.

சிதம்பரத்தில் தில்லைக்காளி கோயிலில், வீணையேந்தி நிற்கும் சரஸ்வதிக்கு ஒரு சந்நிதி உண்டு. கல்விக் கடவுளாக ஒருபெண் தெய்வத்தை வணங்குவது மிகச் சிறப்பானது. அவளுக்கு என்று கோயில்கள் இல்லா விட்டாலும், இல்லம் தோறும் சரஸ்வதி பூஜையன்று கோலோச்சுபவள் சரஸ்வதியே.

வாழ்நாளில் கூத்தனூருக்கு ஒருமுறை சென்று வந்தால், கல்வியும் ஞானமும் செழிக்கும் என்பது நம்பிக்கை. கும்பகோணம், காரைக்கால் மார்க்கத்தில் பூந் தோட்டம் வழித் தடத்தில் உள்ள கூத்தனூர் என்னும் கிராமத்தில் கோயில் கொண்டுள்ளாள் சரஸ்வதி.

பண்டைய தமிழ் இலக்கியத்தில் பெரும் புகழ்பெற்றவர் ஒட்டக்கூத்தரின் . சொந்த ஊர் கூத்தனூர்  என்பதால் இவரது பெயருடன் அவ்வூரின் பெயர் இணைந்து ஒட்டக்கூத்தர் என்றானது என்பார்கள். மன்னன் ஒருவன் இவரது புலமையைமெச்சி இந்த ஊரைப் பரிசாக அளித்ததாகவும் கூறுவர்.

தற்போதும் இந்த ஊர் புகழ் பெற்று விளங்குவதற்குக் காரணம், இங்கு தனித்துக்கோயில் கொண்டுள்ள சரஸ்வதியே. இந்த சரஸ்வதியை வணங்குவதால் மாணவ, மாணவிகள் தங்கள் கல்விநிலை உயரப் பெறுவார்கள். இந்தக்கோயிலில் பேனாக்களைக் கொண்டுவந்து சரஸ்வதியின் பாதங்களில் வைத்து வேண்டிச்செல்லும் வழக்கம்  உண்டு.

பூஜைத் துளிகள்

# மனைப்பலகை ஒன்றில் மாக்கோலம் போட்டு, செம்மண் இடவேண்டும். பின்னர் அடுக்கவேண்டிய புத்தகங்கள், நோட்டுக்களுக்குச் சந்தனம், குங்குமம் இடவேண்டும். முதலில், நீண்டபுத்தகங்கள், நோட்டுக்கள் ஆகியவற்றை அடியில் வைக்கவேண்டும். அதற்கு மேல் சிறியபுத்தகம், நோட்டுக்களை வைத்து, அவை கீழேவிழாமல் அடுக்க வேண்டும். நோட்டுப் புத்தகங்களே இங்கு சரஸ்வதியாக போற்றப்படுவதால், சரஸ்வதிபடத்தை அவற்றின் மீது சாற்றி வைக்கலாம்.

# அறிவிற்கு குருவாக விளங்குபவள் என்பதால் மஞ்சள்சாமந்திப் பூச்சரத்தை அப்படத்தின் மீது அழகாகச்சாற்ற வேண்டும். வெண்மைக்கு உரியவள் என்பதால் மணம்வீசும் மல்லிகைப் பூச்சரத்தையும் சாற்றலாம். அடுக்கப்பட்டுள்ள புத்தகங்களுக்கு அருகே எழுது பொருள் உட்பட கல்விக்குத் தேவையான பேனா, பென்சில், ரப்பர், அளவுகோல் (ஸ்கேல்), ஜியாமெண்டிரி பாக்ஸ் ஆகியவற்றை அடுக்கவேண்டும். இல்லத்தில் ஒரு குழந்தைக்குமேல் இருந்தால், ஒவ்வொரு வருடைய பொருளையும் பூஜையில் வைக்கவேண்டும். சரஸ்வதி பிரம்மனின் மனைவி, பிரம்மனோ நாராயணனின் நாபியில் தோன்றியவர். அதனால் சரஸ்வதிக்கு மாமனார் ஆகிறார் விஷ்ணு. அதனால் விஷ்ணு சகஸ்ரநாமம், பகவத்கீதை ஆகிய புத்தகங்களையும், சரஸ்வதி பூஜையில் மேற்புறமாகவே வைக்க வேண்டும்.

# சுத்தி போன்ற ஆயுதங்கள் இருந்தால் அவற்றையும் அடுக்கவேண்டும். கிரிக்கெட் மட்டை, பந்து, கோலி, கேரம், சதுரங்கம் போன்ற விளையாட்டுப் பொருட்களை அணிவகுத்து வைக்கலாம். இசை சம்பந்தப்பட்ட, சுருதிப் பெட்டி, வீணை, கிடார், மிருதங்கம், ஜால்ரா அகியவற்றைச் சந்தனம், குங்குமம் இட்டு அழகுற வைக்கலாம்.

# உதிரிப்பூக்கள் கொண்டு சரஸ்வதியின் புகழைப் பாட்டாகவோ, வார்த்தைகளாகவோ கூறிப் பூஜிக்க வேண்டும்.

# ’சரஸ்வதி நமஸ்துப்யம் வரதே காமரூபிணிவித்யாரம்பம் கரிஷ்யாமி சித்திர் பவதுமே சதா’ என்ற துதியைச் சொல்லியும் சரஸ்வதியை வணங்கலாம். குளித்து முடித்துச் சுத்தமாக இருக்கும் குழந்தைகளை, சரஸ்வதியை நமஸ்கரிக்கச் செய்ய வேண்டும். அன்றைய தினம் படிக்கக் கூடாது என்பார்கள்.

# கல்விக்கு அதிபதியான சரஸ்வதியை வெண் தாமரையாலோ அல்லது அதன் இதழ்களாலோ பூஜித்தல் அரிய பலன்களை அளிக்கும் என்பது பெரியோர் வாக்கு. வெண்மை உடை உடுத்தி, வெள்ளை நிற அன்ன வாகனம் கொண்டவள். வெண் தாமரையில் அமர்ந்து, வீணை வாசிக்கும் கோலத்தில் காட்சி அளிக்கும் சரஸ்வதி அறிவினை அள்ளித் தருபவள். இத்தெய்வத்தைச் செந்தாமரை மலர்களாலும் அர்ச்சிக்கலாம். இதனால் வாழ்வில் வளம் பெருகும் என்பது ஐதிகம்.

# பூஜையின் முடிவில் சர்க்கரைப்பொங்கலில் நெய் அதிகம் சேர்த்து சமைத்து நிவேதனம் செய்யவேண்டும். மாலையில் கருப்பு கொண்டை கடலைச் சுண்டல் நிவேதனம் செய்வது மிகுந்த விசேஷத்தை அளிக்கும்

Leave a Reply

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

கேள்வி கேட்டால் கோபம் வருகிறதா? ...

கேள்வி கேட்டால் கோபம் வருகிறதா? திமுக மீது அண்ணாமலை விமர்சனம் 'கடன்களை தள்ளுபடி செய்வோம் என்று பொய்யான வாக்குறுதி கொடுத்து ...

டில்லியில் அனைத்து துறை வளர்ச் ...

டில்லியில் அனைத்து துறை வளர்ச்சியையும் உறுதிபடுத்துவோம் – பிரதமர் மோடி டில்லியில் பா.ஜ., ஆட்சியை கைப்பற்றியுள்ள நிலையில், 'வரலாற்று சிறப்புமிக்க ...

உத்திர பிரதேச மாநிலத்தில் பாஜக ...

உத்திர பிரதேச மாநிலத்தில் பாஜக முன்னிலை உத்தர பிரதேசத்தில் மில்கிபூர் சட்டசபை தொகுதி இடைத்தேர்தலில், 3ம் ...

டில்லியில் ஆட்சியை கைப்பற்றிய ...

டில்லியில் ஆட்சியை கைப்பற்றிய பாஜக டில்லி சட்டசபை தேர்தலில் வெற்றி பெற்று பா.ஜ., ஆட்சியை ...

விவசாயிகளுக்கு திமுக அளித்த வா ...

விவசாயிகளுக்கு திமுக அளித்த வாக்குறுதிகள் எங்கே போனது ? அண்ணாமலை கேள்வி வாக்குறுதியை நம்பி ஏமாந்து போன விவசாயிகளின் வயிற்றில் அடித்திருக்கிறது ...

முருக பக்தர்கள் மீது எச்சரிக்க ...

முருக பக்தர்கள் மீது எச்சரிக்கை விடுத்தால் நீங்கள் இருக்க மாட்டிர்கள் – அண்ணாமலை எச்சரிக்கை ''இரும்புக்கரம் கொண்டு முருக பக்தர்கள் மீது கை வைத்தால், ...

மருத்துவ செய்திகள்

இனிப்பு

இயற்கையான பழ உணவு உடலுக்குத் தீங்கு விளைவிக்காது. நீரிழிவு உள்ளவர்கள் மிகவும் குறைவாகப் ...

தும்பையின் மருத்துவக் குணம்

தும்பை இலையைக் கொண்டுவந்து நைத்து, சாறு எடுத்து வடிகட்டி அரை டம்ளர் அளவு ...

இரத்த அழுத்த நோய்

இரத்த அழுத்தம் அதிகமுள்ளவர்கள் கீழ்காணும் உணவுகளைக் கண்டிப்பாகத் தவிர்க்க வேண்டும்.