தமிழக காவல் துறை தலைவர் சைலேந்திரபாபு, உளவுத்துறை தலைவர் டேவிட்சன் தேவசிர்வாதம் ஆகியோரை தமிழக ஆளுநர் அழைத்து ஆலோசனை நடத்தியது தமிழகத்தில் பரபரப்பை உண்டாக்கிய சூழலில், ஆளுநர்உடனான சந்திப்பிற்கு பிறகு தமிழகம் முழுவதும் ரவுடிகள் கைதுசெய்யப் பட்டதும்.
அதுவும் நள்ளிரவுநேரத்தில் போலீசார் பட்டியலில் இல்லாத 100 மேற்பட்ட ரவுடிகள் கைது செய்யபட்டதும் தமிழக அளவில் மிகபெரிய அதிர்வலைகளை உண்டாக்கியது, இந்த சூழலில் 21000 கோடி மதிப்புடைய போதைபொருளானது அகமதாபத்தில் சிக்கியது இதன் பின்னணியில் தமிழகத்தை சேர்ந்த பலர் பிடிபட்டனர், இந்நிலையில் இந்த வழக்கு NIA வசம் செல்ல இருக்கிறது, இது குறித்த தகவல்களை தமிழக உளவுபிரிவு தலைவரிடம் ஆலோசனை நடத்தியுள்ளார் ஆளுநர்.
இதன் பிறகே டெல்லி சென்றுள்ளார் ஆளுநர் டெல்லியில் மரியாதைநிமித்தமாக குடியரசு தலைவரை சந்தித்த ஆளுநர் NR.ரவி, உள்துறை அமைச்சகத்திடம் தமிழகத்தின் சட்டம், ஒழுங்கு குறித்து ஆலோசனை நடத்துகிறார், இதில் பல்வேறுதகவல்களை ஆளுநர் ரவி, உள்துறை அமைச்சர் அமித் ஷா மற்றும் பிரதமர் தனிசெயலாளர் ஆகியோருடன் கொடுக்க இருப்பதாக கூறப்படுகிறது .
மேலும் தமிழகத்தில் NIA புதிய கிளை செயல்பாடுகள், தமிழகத்தில் உள்ள சில கட்சிகளின் வெளிநாட்டு தொடர்புகள் ஆகியவைபற்றியும் இந்த ஆலோசனையில் இடம்பெற்று இருக்கலாம் எனவும் கூறப்படுகிறது, இதன் செயல்பாடுகள் விரைவில் வெளிவரலாம் எனவும் ஆளுநர் தமிழகம்திரும்பியதும் அடுத்தகட்ட நடவடிக்கைகள் பாயலாம் எனவும், தமிழக காவல்துறை, உளவு அமைப்புகள் ஆகியவற்றை கொண்டு உச்சபட்ச ஆட்டத்தில் தமிழகஆளுநர் இறங்கலாம் எனவும் கூறப்படுகிறது.
அரசியலில் நாங்கள் தலையிட போவதில்லை அதேபோல் நாட்டின் பாதுகாப்பு விஷயத்தில் சமரசம் செய்ய போவதில்லை என்ற தகவலை முறைப்படி தமிழக அரசிற்கு மத்திய அரசு தெரிவித்துள்ளதாம், மேலும் நாட்டின் பாதுகாப்பிற்கு முழுஒத்துழைப்பு தரதயார் எனவும் தமிழக காவல்துறை உயர் பொறுப்பில் இருக்கும் அதிகாரிகள் தெரிவித்து இருக்கிறார்களாம், இதன் மூலம் அடுத்தகட்ட நடவடிக்கை தமிழகத்தில் மிக பெரிய அளவில் இருக்கும் எனவும் அதற்கு தமிழக காவல்துறை முழு அளவில் ஒப்புதல் கொடுக்கும் என்பதே தற்போதைய முக்கியதகவலாக உள்ளது.
தமிழக ஆளுநர் RN.ரவி நியமனமே பரபரப்பை உண்டாக்கிய நிலையில், தற்போது ஆளுநரின் டெல்லி பயணம் அடுத்தபரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ஆலமரத்தின் மொக்கு, பூ இவைகளைக் கொண்டு வந்து அம்மியில் வைத்துப் பால்விட்டு மைபோல ... |
குப்பைமேனி இலையைக் கொண்டு வந்து, காரமில்லாத அம்மியில் வைத்து அத்துடன் சிறிதளவு உப்புச் ... |
இதய வடிவ இலையையும், மஞ்சள்நிறப் பூக்களையும் தாமரை வடிவ காய்களையும் உடைய செடி. ... |