அண்ணன் ஸ்டாலினின் அடிச்சுவட்டிலே தங்கை கனிமொழி

 "உள் குடும்ப பூசலால்" உளுத்துப் போன தி.மு.க— பாராளுமன்ற தேர்தலில் பெற்றது "ஜீரோ"…… உள்ளாட்சி இடைத்தேர்தல்களில் பெற்ற இடம் "ஜீரோ"……. குடும்பச் சண்டையால் வாரிசுப் போரால், உள் கட்சியில் மாபெரும் குழப்பம்… அதனால் மக்கள் மத்தியில் பெற்ற மதிப்பும் "0"…. இதை சரிகட்ட, யாரோ கொடுத்த ஆலோசனையில் ஸ்டாலினின் அரசியல், "அடி-வைப்புகள்" மாற்றியமைக்க, மறுசீரமைக்க முயற்சிகள் தொடங்கப்பட்டுள்ளது.

மோடி வழியில் தன் பிரச்சார யுக்தியும், தன்னை ஒரு "பிராண்ட்" ஆக நிலை நிறுத்தவும் "Positioning" செய்யவும் ஒரு பிரபலமான ஏஜென்சியை "ஸ்டாலின் குடும்பம்" தேர்ந் தெடுத்துள்ளது. அதன் வெளிப்பாடாக, ஸ்டாலின் பிறந்த நாளான மார்ச் 1ந் தேதியை ஐ.நா வின் வழியாக தாங்களும் "0" 'Discrimination Day' ஆக "கொண்டாடி இருக்கிறார்கள்.

இதற்காக சிறப்பு விளம்பரம்… எல்லா பத்திரிக்கைகளிலும், எல்லா மொழியிலும், எல்லோரையும் கவரும் வண்ணம்.. பொதுசேவையாக 1 லட்சம் பாட்டில் ரத்த தானமாம்…. "61 வயதான" ஸ்டாலின் தலைமை தாங்கும் தி மு க இளைஞரணி மூலம்….

"திமுக சுவடே இல்லாமல்", தன் பிறந்தநாளை "பாகுபாடுகளற்ற" புறந்தள்ளாத" ஒருமைப்பாட்டு நாளாக கொண்டாட அறைகூவல் விடுத்திருந்த ஸ்டாலின், ஒரு நிமிடம் இந்த அறை கூவலில் தன் அண்ணன் அழகிரியையும் "புறந்தள்ளாமல்" சேர்த்துக் கொண்டிருந்தால் நன்றாக இருந்திருக்கும்…..

அண்ணன் காட்டிய வழியில் தங்கை கனிமொழி

அண்ணன் ஸ்டாலினின் அடிச்சுவட்டிலே தங்கை கனிமொழியும் மார்ச் 7,8 உலக மகளிர் தினத்தை, திமுக மகளிர் அணி சார்பில் கோவையில் கொண்டாடி வருகிறார்.

அதற்கான பத்திரிக்கை விளம்பரங்கள் அண்ணனை விஞ்சும் வகையில் செய்துள்ளார். ஆம் அண்ணன் ""கால் பக்கம்" தங்கை "அரை பக்கம்" விளம்பரங்கள் –மளிருக்காக, மருத்துவ முகாம்– வேலை வாய்ப்பு முகாம், கலை நிகழ்ச்சிகள் என திமுக அடிச்சுவட்டில் ஆனால் அதன் "சாயம்" இல்லாமல் நிகழ்ச்சிகள் அரங்கேற்றியுள்ளார்.

ஆக தன்னை "புரமோட்" செய்து கொள்ள ஏஜென்ஸிகளை நாடியுள்ள அண்ணனும் தங்கையும், மீண்டும் குடும்பச்சண்டையில், யார் முன்னணியில்.. என்பதற்கு போட்டி போட்டு வருகின்றனர்.

தேய்ந்து போன "டயரை" எத்தனை முறை "ரீ பட்டன்" செய்தாலும், தாங்குவது தானே தாங்கும், நம்பி பாரம் ஏற்ற, தொலை தூரம் செல்ல, உத்தரவாதம் கொடுக்க முடியாது தானே?

இப்போது திமுக குடும்பத்தில் ஏஜென்சிகளுக்கு ஏக கொண்டாட்டம் தான்…. என்ன தான் "Positioning செய்ய நினைத்தாலும்" மொச புடிக்கற மூஞ்சிய" பார்த்தாலே தெரியுமே! அரிதாரத்திற்குள் மறைந்திருந்தால் கண்டுபிடிக்க முடியாதா? என்ன?

நன்றி ; எஸ்.ஆர். சேகர்

பாஜக மாநிலப் பொருளாளர்

Leave a Reply

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

தூண்டிவிடும் பாகிஸ்தான்: பயங்க ...

தூண்டிவிடும் பாகிஸ்தான்: பயங்கரவாதம் வீழ்த்தப்படும்: மோடி உறுதி பயங்கரவாதத்தை பாகிஸ்தான் தூண்டி விடுகிறது. அதனை இரும்புக்கரம் கொண்டு ...

9-வது நிர்வாக கூட்டத்திற்கு மோட ...

9-வது நிர்வாக கூட்டத்திற்கு  மோடி தலைமை தாங்குகிறார் பிரதமர் திரு நரேந்திர மோடி ஜூலை 27, 2024 ...

இந்தியாவின் கிராமப்புறங்களில் ...

இந்தியாவின் கிராமப்புறங்களில் வறுமை ஒழிப்பு திட்டம் கிராமப்புற மக்களின் பொருளாதார நிலையை மேம்படுத்துவதற்காக, வாழ்வாதார வாய்ப்புகளை ...

கார்கில் வெற்றி தின வெள்ளிவிழா ...

கார்கில் வெற்றி தின வெள்ளிவிழாவையொட்டி நினைவு தபால்தலை வெளியிடப்பட்டது கார்கில் வெற்றி தின வெள்ளிவிழாவையொட்டி நினைவு தபால்தலை இன்று ...

25-வது கார்கில் தினத்தையொட்டி பி ...

25-வது கார்கில் தினத்தையொட்டி பிரதமர் மரியாதை 25-வது கார்கில் வெற்றி தினத்தை முன்னிட்டு லடாக்கில் இன்று ...

பிரதமரின் வீட்டுவசதி திட்டம்

பிரதமரின் வீட்டுவசதி திட்டம் நாடு முழுவதும் நகர்ப்புறங்களில் அடிப்படை வசதி கொண்ட வீடுகளை ...

மருத்துவ செய்திகள்

மலச்சிக்கல் நீங்க உணவு முறைகள்

புரோட்டீன் தினமும் இவர்கள் ஒரு கிலோ எடைக்கு 1கிராம் வீதம் புரோட்டீன் உணவைச் சாப்பிடலாம்.

வாய், தொண்டை சம்பந்தமான நோய்கள் தீர!

1.வாய் , நாக்கு. தொண்டை ரணம் தீர:-பப்பாளிப் பாலைத் தடவி வரத் தீரும். 2.நாக்குப் ...

ஓமவல்லியின் மருத்துவக் குணம்

வியர்வை பெருக்கியாகவும், கோழையகற்றியாகவும், காய்ச்சல் தணிக்கும் மருந்தாகும் செயல்படுகிறது.