எங்களை பொறுத்த வரை வளர்ச்சி ஒன்றேகுறிக்கோள்

 தமிழக பா.ஜ.க தலைவர் டாக்டர் தமிழிசை சவுந்தர ராஜன் கூறியதாவது:–

பா.ஜனதா மாநில செயற்குழு கூட்டம் நாளை கும்பகோணத்தில் நடக்கிறது. இந்தகூட்டத்தில் வருகிற சட்ட சபை தேர்தலை சந்திப்பது, கட்சியில் சேர்ந்துள்ள 40 லட்சம் உறுப்பினர்களையும் தனித் தனியாக சந்திக்கும் மகாமக்கள் சந்திப்பு நிகழ்ச்சியை நடத்துவது குறித்து விரிவாக விவாதிக்கப்பட உள்ளது.

தேசிய கட்சியான பா.ஜனதா 40 லட்சம் உறுப்பினர்களை சேர்த்தது சாதாரண விஷயம் அல்ல. உறுப்பினர்கள் ஒவ்வொருவரும் தாமாக விருப்பப்பட்டு எஸ்எம்எஸ். அனுப்பி சேர்ந்து இருக்கிறார்கள்.

இன்னும் 4 மாதத்தில் அவர்கள் அனைவரையும் தொடர்புகொண்டு பயிற்சி முகாம்கள் நடத்தி கட்சிபணியில் ஈடுபடுத்தும் பணிகள் நடத்தி முடிக்கப்படும். மத்திய அரசின் ஓராண்டுசாதனை விளக்க பொதுக் கூட்டம் 100 இடங்களில் நடத்தப்படுகிறது.

பா.ஜ.க.,வை பொறுத்தவரை சட்ட சபை தேர்தலை சந்திக்க தயாராகவே உள்ளது. எங்கள்கட்சி பலவீனமான கட்சி என்பதை ஏற்கமுடியாது. உள்ளாட்சி தேர்தலில் போட்டியிட்டோம். ஸ்ரீரங்கம் இடைத்தேர்தலில் பல்வேறு கெடுபிடிக்கு இடையேயும் 5 ஆயிரத்துக்கும் அதிகமான வாக்குகளை பெற்றோம்.

மாவட்ட வாரியாக பொதுக் கூட்டம் நடத்தி வருகிறோம். அதில் ஆயிரக் கணக்கில் மக்கள் கூடுகிறார்கள். பொதுமக்களிடம் நல்ல வரவேற்பு உள்ளது. எங்கள் செயல் பாட்டால் பலம்பொருந்திய கட்சியாகவே இருக்கிறோம்.

இரு திராவிட கட்சிகளுக்கும் மாற்றாக மக்கள் பா.ஜ.க.,வை பார்க்கிறார்கள். ஆட்சிமாற்றம் வேண்டும் என்று மக்கள் விரும்ப தொடங்கிவிட்டார்கள்.

இருதிராவிட கட்சிகளும் மக்களின் எதிர் பார்ப்புகளை நிறைவேற்ற வில்லை. கால்வாய்கள் தூர்வாரி 20 ஆண்டுகளுக்கும் மேலாகிவிட்டன. பெரிய அளவிலான திட்டங்கள் எதுவும் நிறைவேற்றப் படவில்லை. வேலைவாய்ப்பு இல்லை. திட்டங்கள் அனைத்தும் விளம்பரத்துக்காக அறிவிக்கப் படுகிறதே தவிர நிறைவேற்றுவதற்கு அல்ல. எங்களை பொறுத்த வரை வளர்ச்சி ஒன்றேகுறிக்கோள். அதை முன்னிலைப் படுத்தியே எங்கள் செயல்பாடு அமையும்.

இவ்வாறு அவர் கூறி னார்.

Leave a Reply

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

பெண்களுக்கு எதிரான குற்றம்; மறை ...

பெண்களுக்கு எதிரான குற்றம்; மறைக்க தமிழக அரசு முயற்சி தி.மு.க., ஆட்சியில் பெண்களுக்கு எதிரான பாலியல் வன்கொடுமைகள் அதிகரித்துள்ளன. ...

தமிழகத்தில் தொழில் துவங்க தி.மு ...

தமிழகத்தில் தொழில் துவங்க தி.மு.க.,வினருக்கு கப்பம்: அண்ணாமலை குற்றச்சாட்டு தி.மு.க.,வினருக்கு கப்பம் கட்டினால்தான், தமிழகத்தில் தொழில் நடத்த முடியும் ...

வளர்ச்சி அடைந்த பாரதமே, ஒவ்வொரு ...

வளர்ச்சி அடைந்த பாரதமே, ஒவ்வொரு இந்தியரின் இலக்கு ''வளர்ச்சி அடைந்த பாரதமே, ஒவ்வொரு இந்தியரின் இலக்கு'' என ...

டில்லியில் நிடி ஆயோக் கூட்டம்; � ...

டில்லியில் நிடி ஆயோக் கூட்டம்; மாநில முதல்வர்கள் பங்கேற்பு டில்லியில் இன்று (மே 24) பிரதமர் மோடி தலைமையில் ...

பயங்கரவாத எதிர்ப்பு நடவடிக்கை; ...

பயங்கரவாத எதிர்ப்பு நடவடிக்கை; இந்தியாவுக்கு ரஷ்யா ஆதரவு பஹல்காம் பயங்கரவாத தாக்குதலுக்கு பதிலடி தரும் வகையில், பாகிஸ்தானுக்கு ...

பாகிஸ்தான் ராணுவத்தை அம்பலப்ப� ...

பாகிஸ்தான்  ராணுவத்தை அம்பலப்படுத்திய ஆப்பரேஷன் சிந்துார் ஆப்பரேஷன் சிந்துாருக்கு பின் தான், இந்தியாவில் நடைபெறும் அனைத்து ...

மருத்துவ செய்திகள்

நீரிழிவு நோய்

உங்களுக்கு நீரிழிவு என வைத்தியர் கூறியிருக்கிறார். இது உங்கள் மனத்தில் உங்கள் உடல்நிலை ...

தலைவலி குணமாக

விரவி மஞ்சளை விளக் கெண்ணையில் முக்கி விளக்கில் காட்டி சுட்டு அதன் புகையை ...

திருமணத்திற்கு முன்பு ஆணும் பெண்ணும் Rh சோதனை செய்ய வேண்டுமா?

Rh சோதனை செய்வது நல்லது. Rh ல் இருவகை உள்ளது. ஒன்று +ve (positive) ...