சகிப்பின்மை விவகாரத்தின் பின்னணியில் பாகிஸ்தான்

 சகிப்பின்மை விவகாரத்தின் பின்னணியில் பாகிஸ்தான் இருப்பதாக ஹரியாணா மாநில சுகாதாரம், விளையாட்டுத்துறை அமைச்சர் அனில் விஜ் தெரிவித்தார்.

 இதுகுறித்து செய்தியாளர்களிடம் செவ்வாய்க் கிழமை கூறியதாவது:

 ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலில் இந்தியாவுக்கு நிரந்தர இடம் கிடைக்கக்கூடாது என்று பாகிஸ்தான் நினைக்கிறது. ஆதலால், ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலில் நிரந்தர உறுப்பினராகும் இந்தியாவின் வாய்ப்புகளை முறியடிக்கும் வகையிலான சூழ் நிலையை உருவாக்கும் முயற்சியில் பாகிஸ்தான் ஈடுபட்டுள்ளது.

 இதை கருத்தில்கொண்டே, இந்தியாவில் சகிப்பின்மை விவகாரத்தை எழுப்பும் சதித்திட்டம் பாகிஸ்தானில் உருவாக்கப்பட்டுள்ளது. பாகிஸ்தான் சார்பாக இந்தியாவில் சிலர், சகிப்பின்மை விவகாரத்தை எழுப்பி வருகிறார்கள். சகிப் பின்மை விவகாரம் தொடர்பாக ஹிந்திநடிகர் ஆமீர் கான் தெரிவித்த கருத்துகள், தேவையற்றது. தவறான நேரத்தில் அந்தகருத்து தெரிவிக்கப்பட்டுள்ளது.

 ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலில், இந்தியாவுக்கு நிரந்தரஇடம் அளிக்கப்படுவது தொடர்பாக உறுதியான நடவடிக்கைகளை பிரதமர்  எடுத்துவருகிறார். அவரது ஆற்றல் மிக்க தலைமையை, மதச்சார்பற்ற சக்திகள் என்று தங்களை தாங்களே அறிவித்து கொள்வோரால் ஜீரணித்து கொள்ள முடியவில்லை என்றார் அனில் விஜ்.

Leave a Reply

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந் ...

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந்துள்ளேன் கோவையில் கஸ்தூரி நாயக்கன்பாளையம் பகுதியில் பிரச்சாரம் மேற்கொண்ட அண்ணாமலை ...

இது சாதாரண தேர்தல் அல்ல

இது சாதாரண தேர்தல் அல்ல பாஜக மற்றும் கூட்டணி வேட்பாளர்கள் ஒவ்வொருவரும் வெற்றிபெற்று, நாடாளுமன்றத்தில் ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாதத ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாததை 10 ஆண்டுகளில் செய்து முடித்தேன் காங்கிரஸ்கட்சி பிரிவினைவாதத்தை தூண்டியது. ஆனால், நான் பிராந்தியத்தில் அமைதி ...

பால் மற்றும் மின் கட்டண உயர்வே ...

பால் மற்றும்  மின் கட்டண உயர்வே திமுக -வின் சாதனை இந்தியாவின் பாதுகாப்பை பிரதமர் மோடி உறுதி செய்துள்ளார்'' என ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் வ ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் விரும்பும் மோடி பிரதமர் நரேந்திரமோடி மற்றும் மைக்ரோசாப்ட் நிறுவனர் பில்கேட்ஸ் இடையே ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் த ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் தொல்லை கொடுப்பதும் காங்கிரஸின்  கலாச்சாரம் நீதித்துறையின்மீது அழுத்தம் தரப்படுவதாகவும் நீதிமன்றங்கள் அவமதிப்படுவதாகவும் நூற்றுக்கணக்கான வழக்குரைஞர்கள் ...

மருத்துவ செய்திகள்

தேனின் மருத்துவ குணங்கள்

தேன் மிகசிறந்த உணவு பொருளாகும். தேன் மூலம் எல்லா நோய்களையும் குணப்படுத்த முடியும். ...

கருத்தரித்த முதல் 3 மாதங்களில் என்ன செய்யலாம், என்ன செய்யக் கூடாது ?

கருத்தரிப்பு என்பது வியாதியில்லை. அது ஒரு உடல் ரீதியான மாற்றம். இதைச் ...

பழங்களை பயன்படுத்தும் முறை

பழங்களில் உள்ள சர்க்கரைச்சத்து நம் உடலில் உள்ள தசைநார்களை உறுதிப்படுத்துகின்றன. ஆரஞ்சு, சாத்துக்குடி, ...