“உக்ரைன் போரை முடிவுக்கு கொண்டுவர எந்தவொரு அமைதி பேச்சு வார்த்தையிலும் இணைய இந்தியா தயார்” என பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.
இரண்டுநாள் பயணமாக இந்தியாவந்துள்ள ஜெர்மனி பிரதமர் ஓலஃப் ஸ்கோல்ஸ், டெல்லியில் பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்துப் பேசினார். அவரது உரையில் உக்ரைன்போரே முக்கிய இடம் பெற்றிருந்தது. ரஷ்யா – உக்ரைன் மோதல் காரணமாக உலகம் அதிகம் பாதிக்கபட்டு வருவதாக அவர் வேதனை தெரிவித்தார். ஐரோப்பிய ஒன்றியம் – இந்தியா இடையே தடையற்ற வர்த்தகஒப்பந்தம் ஏற்பட தனிப்பட்ட முறையில் முயற்சிசெய்து அதனை உறுதிப்படுத்த போவதாகவும் ஓலஃப் ஸ்கோல்ஸ் உறுதிஅளித்தார்.
இந்த சந்திப்பின் போது பேசிய பிரதமர் நரேந்திர மோடி, ”கரோனா பெருந்தொற்று மற்றும் உக்ரைன் மோதல் காரணமாக ஒட்டுமொத்த உலகமும் பாதிக்கப்பட்டுள்ளது. இதன்காரணமாக வளரும் நாடுகள் எதிர்மறைபாதிப்புகளை சந்தித்து வருகின்றன. கூட்டுமுயற்சியின் மூலமாகவே இந்த பிரச்சினைக்குத் தீர்வுகாண முடியும் என்பதையும், ஜி20 மாநாட்டில் இதற்கு முக்கியத்துவம் அளிப்பது எனவும் நாங்கள் ஒப்புக் கொண்டுள்ளோம்.
உக்ரைன் மோதலை முடிவுக்குக் கொண்டுவர பேச்சுவார்த்தையும் தூதரக அணுகு முறையும் மிகவும் அவசியம் என்பதை இந்தியா தொடக்கம் முதலே கூறிவருகிறது. போரை முடிவுக்கு கொண்டுவர எந்தவொரு அமைதி பேச்சு வார்த்தையிலும் இணைய இந்தியா தயாராக இருக்கிறது.
ஐ.நா பாதுகாப்பு அவை சீர்திருத்தப்படவேண்டும். சர்வதேச யதார்த்தத்தை பிரதிபலிக்கக் கூடியதாக சர்வதேச பொதுஅவை இருப்பது மிகவும் முக்கியம். ஜி4 நாடுகளின் கூட்டமைப்பு ஐநா பாதுகாப்பு அவையில் சீர்திருத்தம் கொண்டுவர வேண்டும் என்பதை தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது” என்று பிரதமர் மோடி தெரிவித்தார்.
ஜி20 தலைமையை இந்தியா ஏற்றிருப்பதற்கு ஜெர்மனி பிரதமர் ஓலஃப் ஸ்கோல்ஸ் வாழ்த்துதெரிவித்தார். ”மிக கடினமான காலத்தில் ஜி20 தலைமைப்பொறுப்பை இந்தியா ஏற்றுள்ளது. இந்தியாவுக்கு மிகப்பெரிய பொறுப்பு இருக்கிறது. இதை குறிப்பிட்டுசொல்ல விரும்புகிறேன். அதேநேரத்தில், இந்தியா தனதுபொறுப்பை உணர்ந்து செயல்படும் என்ற நம்பிக்கையோடு இருக்கிறேன். உக்ரைன் போரால், உலகில் எந்த ஒரு நாடும் உணவுக்காகவோ, எரிபொருளுக்காகவோ தவிக்கக் கூடாது.
இந்தியாவில் நிறைய திறைமையான நிறுவனங்கள் இருக்கின்றன. இந்தியாவின் திறமையால்பலனடைய நாங்கள் விரும்புகிறோம். இந்தியாவின் திறன்மிகு நிறுவனங்களையும், தனிநபர்களையும் ஈர்க்கவே ஜெர்மனி விரும்புகிறது” என ஓலஃப் ஸ்கோல்ஸ் தெரிவித்தார்.
கண்ணில் எப்பொழுதும் எரிச்சல் இருந்து கொண்டே இருக்கும். அப்பொழுது எள்ளுப் பூவைக் கொண்டுவந்து, ... |
சாதாரணமாக வேலை செய்கின்ற பெண்களுக்குத் தேவைப்படுகின்ற கலோரியை விட மாதமாய் இருக்கிற கர்ப்பிணிகளுக்கு ... |
உடல் உழைப்பு குறைந்துபோய், தசைகளுக்கான உடற்பயிற்சி மற்றும் விளையாட்டுகள் போன்றவற்றை மேற்கொள்ள நேரமேயில்லாமல் ... |