சென்னை உள்ளிட்ட மாவட்டங்களில் மழைவெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு, திருப்பூரிலிருந்து 3.5 லட்சம் சப்பாத்திகள் உள்ளிட்ட உணவுப்பொருள்கள், மருந்துகள் லாரிகள் மூலமாக வியாழக்கிழமை அனுப்பி வைக்கப்பட்டன.
சென்னை, கடலூர், காஞ்சிபுரம், திருவள்ளூர் உள்ளிட்ட மாவட்டங்கள் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ளன. வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு அரசு சார்பில் நிவாரணப்பணிகள் மேற்கொள்ளப்பட்டு வரும் நிலையில், பல்வேறு பொது நல அமைப்புகளைச் சேர்ந்தவர்களும், தங்களால் ஆன உதவிகளை செய்துவருகின்றனர்.
இந்நிலையில், உணவு கூட சமைக்க முடியாமல் தவிக்கும் சென்னை, கடலூர் மக்களுக்கு உதவும்வகையில் திருப்பூரில் உள்ள ஆர்எஸ்எஸ்., சேவாபாரதி உள்ளிட்ட தொண்டு நிறுவனத்தினர், பொதுமக்கள் உதவியுடன் சப்பாத்திகள் தயாரித்தும், மருந்து உபகரணங்கள், மளிகைப் பொருள்கள், ரொட்டிகள் உள்ளிட்ட வைகளை அனுப்புவதற்கான பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
அதன் ஒரு பகுதியாக,திருப்பூர் சேவாபாரதி சார்பில் தனியார் திருமண மண்டபத்தில் வியாழக் கிழமை காலை முதல் 600-க்கும் மேற்பட்டோர் சப்பாத்தி மற்றும் உணவுதயாரிக்கும் பணியில் ஈடுபட்டனர். இதில் ஒரே நாளில் 3.5 லட்சம் சப்பாத்திகள் செய்யப்பட்டு விநியோகத்துக்காக சென்னைக்கு அனுப்பப் பட்டுள்ளது. இதில் இரண்டு திருமண மண்டபங்களில் இரண்டு குழுக்களாக சப்பாத்தி உள்ளிட்ட உணவு தயாரிக்கும் பணிகள் நடந்துள்ளன. மேலும் ஒவ்வொரு குடும்பமும் தங்கள் வீட்டில் அவர்களால் இயன்ற அளவிற்கு சப்பாத்திகளை செய்து தரும்படி கேட்டுக்கொள்ளப் பட்டது. இதில் அவர் அவர் அவர்களது சக்திக்கு உட்பட்டு 50 முதல் 4000 சப்பாத்திகள் வரை செய்து ஒப்படைத்துள்ளனர். இப்படி ஒன்றுப்பட்ட முயற்சியால் பலலட்சம் சப்பாத்தி உற்பத்தி மற்றும் விநியோகம் சாத்தியம் ஆகியுள்ளது. மேலும் ஒரு சில நாட்களிலேயே 1.5 கோடி மதிப்பிலான பொருட்களை திரட்டியுள்ளனர்.
இதை சென்னையில் 100க்கும் மேற்ப்பட்ட இடங்களில் ஆயிரக்கணக்கான ஸ்வயம்சேவகர்கள் (தொண்டர்கள்) விநியோகித்து வருகின்றனர்.
தமிழ்த் தாமரை VM வெங்கடேஷ்
நீரிழிவுநோய்க் கட்டுப்பாட்டில் உணவுமுறை ஒரு முக்கியப்பங்கு வகிக்கிறது. அதனால் நீரிழிவுநோய் உள்ளவர்கள் சரியான, ... |
அதற்கு எந்த விதமான ஆதாரமும் இல்லை. நான் எந்த ஒரு ஊட்டச்சத்து மாவையும் ... |
இதில் சிற்றரத்தை, பேரரத்தை என்று இரண்டு வகைகள் உண்டு. இந்த இரண்டு வகையும் ... |
Leave a Reply
You must be logged in to post a comment.