அடுத்த ஆண்டு பயன்பாட்டுக்கு வரும் சென்னை -பெங்களூர் விரைவுச்சாலை

சென்னை – பெங்களூரு விரைவுச் சாலைப் பணிகள் அடுத்த ஆண்டு மார்ச் மாதத்திற்குள் முழுமையாக முடிக்கப்படுமென, மத்திய சாலைப்போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத்துறை அமைச்சர் திரு நிதின் கட்கரி தெரிவித்துள்ளார்.

261.70 கிமீ தொலைவுள்ள (தமிழ்நாட்டில் உள்ள 105.7 கிமீ தொலைவு உட்பட) சென்னை – பெங்களூரு விரைவுச் சாலை, ரூ.7,525 கோடி மதிப்பீட்டில் மேற்கொள்ளப்பட்டு வருவதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

இதுவரை, 61.74% அளவிற்கு பணிகள் முடிவடைந்துள்ளதாகவும்  அமைச்சர் நிதின் கட்கரி கூறியுள்ளார்.

இந்தத் திட்டம் முடிவடைந்து மக்கள் பயன்பாட்டிற்கு வரும் போது, சென்னை – பெங்களூரு  இடையேயான பயணத் தொலைவு மற்றும் நேரம் வெகுவாகக் குறையும் என எதிர்பார்க்கப்படுகிறது.

சென்னை துறைமுகம் – மதுரவாயல் இடையிலான ஈரடுக்கு நான்குவழி உயர்மட்டச் சாலைத் திட்டப் பணிகள், பல்வேறு கட்டங்களாகப் பிரித்து மேற்கொள்ளப்பட்டு வரும் நிலையில், இந்தப் பணிகள் 2026-ம் ஆண்டு மே மாதத்திற்குள்  முடிக்கப்படும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

சென்னை – ராணிப்பேட்டை இடையேயான  தேசிய நெடுஞ்சாலையை 6 வழிச்சாலையாக விரிவாக்கம் செய்யும் பணிகள், மதுரவாயல் – ஸ்ரீபெரும்புதூர், ஸ்ரீபெரும்புதூர் – காரைப்பேட்டை மற்றும் காரைப்பேட்டை – வாலாஜாப்பேட்டை என 3 பிரிவுகளாகப் பிரிக்கப்பட்டு  மேற்கொள்ளப்பட்டு வரும் நிலையில், மதுரவாயல் – ஸ்ரீபெரும்புதூர்  பணிகள் 98.5% முடிவடைந்துள்ளதாகவும், ஸ்ரீபெரும்புதூர் – காரைப்பேட்டை இடையிலான பணிகள் 56.92%  அளவிற்கும்  காரைப்பேட்டை – வாலாஜாபேட்டை பணிகள் 74.90% அளவிற்கும் முடிவடைந்துள்ளதாகவும், இந்தப் பணிகள் 2025 மார்ச் மாதத்திற்குள்  முழுமையாக முடிக்கப்பட்டு விடும் எனவும் அமைச்சர் தமது பதிலில் குறிப்பிட்டுள்ளார்.

இது தவிர, சென்னை – திருப்பதி, மாமல்லபுரம் – முகையூர், தர்மபுரி – தொரப்பள்ளி, பொள்ளாச்சி – மடத்துக்குளம், திண்டிவனம் – கிருஷ்ணகிரி, மேலூர் – காரைக்குடி, விக்கிரவாண்டி  – சேத்தியாதோப்பு, ஒட்டன்சத்திரம் – பழனி, திருமங்கலம் – வடுகப்பட்டி உள்ளிட்ட பல்வேறு தேசிய நெடுஞ்சாலை விரிவாக்கப் பணிகள் அடுத்த  ஆண்டிற்குள் முடிக்கப்படும் எனவும்  நிதின் கட்கரி தெரிவித்துள்ளார்.

Comments are closed.

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

மாநிலத்தில் பயங்கரவாதிகள் அளி ...

மாநிலத்தில் பயங்கரவாதிகள் அளித்த கோவிலை மீண்டும் கட்டுவோம்-அமித்ஷா உறுதி ஜம்மு காஷ்மீர் சட்டசபை தேர்தலை முன்னிட்டு, பா.ஜ.,வின் தேர்தல் ...

தெலுங்கானாவில் வெள்ள நிவாரண பக ...

தெலுங்கானாவில் வெள்ள நிவாரண பகுதிகளை மத்திய அமைச்சர் பார்வையிட்டார் மத்திய வேளாண் மற்றும் விவசாயிகள் நலன் மற்றும் ஊரக ...

நீர் சேமிப்பில் மக்களின் பங்கு ...

நீர் சேமிப்பில் மக்களின் பங்கு திட்டத்தை பிரதமர் தொடங்கி வைத்தார் குஜராத் மாநிலம் சூரத்தில் இன்று 'நீர் சேமிப்பில் மக்கள் பங்கேற்பு' திட்டத்தைத் ...

தேசிய நாலாசிரியர் விருது பெற்ற ...

தேசிய நாலாசிரியர் விருது பெற்ற நல்லாசிரியர்களுடன் பிரதமர் கலந்துரையாடினார் தேசிய நல்லாசிரியர் விருது பெற்றஆசிரியர்களுடன் பிரதமர் நரேந்திர மோடி ...

சிங்கப்பூரில் திருவள்ளுவர் கல ...

சிங்கப்பூரில் திருவள்ளுவர் கலாச்சார மையம் பிரதமர் அறிவிப்புக்கு வரவேற்பு முதலாவது திருவள்ளுவர் கலாசார மையம் சிங்கப்பூரில் அமைக்கப்படும் என்று ...

பெண்கள் முன்னேற்றத்திற்கான தட ...

பெண்கள் முன்னேற்றத்திற்கான தடைகள் அகற்றம் – நிர்மலா சீதாராமன் பெருமிதம் ''பெண்கள் முன்னேற்றத்திற்கான தடைகளை, பிரதமர் மோடி தலைமையிலான பா.ஜ., ...

மருத்துவ செய்திகள்

குடல்வால் (அப்பெண்டிக்ஸ்) நோய்

நம்முடைய சிறுகுடலும் , பெருங்குடலும் சேர்கிற பகுதியில் இருக்கும் ஒரு சிறிய வால் ...

ஆடுதீண்டாப்பாளையின் மருத்துவக் குணம்

சிலந்திப்பூச்சி விஷம், கருங்குஷ்டம், கரப்பான், ரோகம் இவை ஆடுதீண்டாப்பாளை மூலம் குணமாகும். உடல்பலம் ...

ஆவாரம் பூ | ஆவாரம் பூவின் மருத்துவக் குணம்

உடல் பொன்னிறமாக ஆவாரம் பூ மற்றும் பருப்பு வெங்காயம் சேர்த்து சமையல் பாகத்தில் கூட்டு ...