ராகுலை தமிழக முதல்வ ராக்க வேண்டும் என இளங்கோவன் கூறியிருப்பது இந்த நூற்றாண்டின் மிகப் பெரிய தமாஷ் என மத்திய அமைச்சர் பொன். ராதாகிருஷ்ணன் கூறியுள்ளார்.
சென்னையில் இன்று செய்தியா ளர்களிடம் பேசிய பொன். ராதாகிருஷ்ணன், காங்கிரஸ் கட்சிக்கு வரும் சட்டப்பேரவை தேர்தலில் ஒரு எம்எல்ஏ பதவிகூட கிடைக்காது. நடந்து முடிந்த உள்ளாட்சி தேர்தலில் வெற்றிபெற முடியவில்லை. ஒரு எம்.பி. தொகுதியைக்கூட கைப்பற்ற முடியாத நிலையில் உள்ளது காங்கிரஸ் கட்சி.
இப்படிப்பட்ட நிலையில் இருக்கும்போது, ராகுலை தமிழக முதல்வராக்க வேண்டும் என்று இளங்கோவன் தெரிவித்திருக்கும் கருத்து, நூற்றாண்டின் மிகப் பெரிய தமாஷ். இந்த தமாஷை கேட்டு அவர்களது கட்சியினரே சிரிப்பார்கள் என்று கூறியுள்ளார்.
மேலும், தேர்தல்நேரத்தில் மக்களிடம் மன்னிப்பு கேட்பதும், வெற்றிபெற்றால் அதை மறந்து மீண்டும் ஊழல் செய்வதுமே தி.மு.க.,வின் வழக்கம். மக்களுக்கு அவர்கள் மீதான நம்பிக்கை போய்விட்டதை திமுக.,வினரும் அறிவார்கள் என பொன். ராதாகிருஷ்ணன் கூறினார்.
ஆடாதொடை இலையை தேவையான அளவு எடுத்து ஒரு சட்டிக்கு வேடுகட்டி, ஒரு டம்ளர் ... |
மனிதனுக்குக் கிடைத்த மிகப் பெரிய நன்மைகளில் உறக்கம் ஒன்றாகும். ஆழ்ந்த உறக்கம் உடலுக்கு ... |
Leave a Reply
You must be logged in to post a comment.