இந்த அரசு உணர்ச்சிகலுக்கு ஆட்பட்டது அல்ல அர்ப்பணிப்புகளுக்கு மதிப்பளிக்க கூடியது

உலகிலேயே மிக உயரமான போர்க்களம் என்று வர்ணிக்கப்படும் காஷ்மீரின்  சியாச்சின் மலைப் பிரதேசத்தில் (19 ஆயிரத்து 600 அடி உயரத்தில்) இந்திய பாகிஸ்தான் எல்லைப்பகுதியில் தீவிரவாதிகளின் ஊடுருவலை தடுக்க இந்திய ராணுவத்தினர் முகாமிட்டு பாதுகாப்பு பணியில் ஈடுபடுவது வழக்கம்.

இங்கு தேசத்தை காப்பதற்காக -45 டிகிரி செல்சியஸ்ஸில் கடும் பணிப்போளிவையும் தாங்கிக்கொண்டு இந்திய ராணுவம் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகிறது. இந்நிலையில் கடந்த 3-ந் தேதி அந்த ராணுவ முகாமின் ஒரு பகுதியில் திடீர் பனிச் சரிவு ஏற்பட்டது. அதில்  தமிழ்நாட்டை சேர்ந்த 4 பேர் உள்பட 10 ராணுவ வீரர்கள் சிக்கி பனி மலைக்குள் சுமார் 25 அடி ஆழத்தில் புதைந்தனர்.

இதையடுத்து பனிக்கட்டிகளை அகற்றி 10 ராணுவ வீரர்களையும் மீட்கும் பணி தீவிரம் அடைந்தது . அதில்  5 ராணுவ வீரர்கள்  உயிரிழந்த நிலையில் ஹனுமந்தப்பா என்ற ஒரு ராணுவ வீரர் மட்டும் உயிருக்கு போராடி கொண்டிருந்தது கண்டுபிடிப்பபட்டது , உடனடியாக  மீட்புக் குழுவினர் அவரை பத்திரமாக மீட்டு.அந்த  இடத்திலேயே அவருக்கு முதல்  உதவி சிகிச்சை அளித்து பிறகு மேல் சிகிச்சைக்காக ஏர் ஆம்புலன்ஸ் மூலம் டெல்லி சிறப்பு  ஆராய்ச்சி மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்

 

இந்நிலையில் பிரதமர் நரேந்திர மோடி மருத்துவமனைக்கே நேரில் சென்று ஹனுமந்தப்பாவின் உடல் நிலை குறித்து நேரில் ஆய்வு செய்ததன் மூலம் கடும் பனியிலும், மழையிலும், பாலைவனத்திலும்  போராடி தேசத்தை காக்கும் நம் இராணுவ வீரர்களின் தியாகங்களுக்கு  மதிப்பளித்துள்ளார்.

 

தமது அரசு வாக்கு வங்கியை அடிப்படையாக கொண்டது அல்ல, தேசத்தின் உண்மை ஆரோக்கியத்தை அடிப்படையாக கொண்டது. உணர்ச்சிகலுக்கு ஆட்பட்டது அல்ல (ரோஹித் வேமூலா தற்கொலை, தாந்திரி சம்பவம்), உண்மை அர்ப்பணிப்புகளுக்கு மதிப்பளிக்க கூடியது என்று பிரதமர் தனது செயல்பாட்டின் மூலம் நிருபித்துள்ளார்.

 

எனவேதான் 1984-க்கு பிறகு இதுவரை 800-க்கும் அதிகமான இராணுவ வீரர்கள் பனிமலை சீற்றத்தினால் மட்டுமே பலியான போதிலும் ஏற்ப்படாத தேசிய உணர்வும், எழுதப்படாத செய்தி கட்டுரைகளும், பத்திரிக்கைகளின் முக்கியத்துவமும்   இந்த பத்து ராணுவ வீரர்களின் தியாகங்களுக்கு கிட்டியுள்ளது.    

தமிழ்த் தாமரை VM வெங்கடேஷ்

Leave a Reply

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந் ...

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந்துள்ளேன் கோவையில் கஸ்தூரி நாயக்கன்பாளையம் பகுதியில் பிரச்சாரம் மேற்கொண்ட அண்ணாமலை ...

இது சாதாரண தேர்தல் அல்ல

இது சாதாரண தேர்தல் அல்ல பாஜக மற்றும் கூட்டணி வேட்பாளர்கள் ஒவ்வொருவரும் வெற்றிபெற்று, நாடாளுமன்றத்தில் ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாதத ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாததை 10 ஆண்டுகளில் செய்து முடித்தேன் காங்கிரஸ்கட்சி பிரிவினைவாதத்தை தூண்டியது. ஆனால், நான் பிராந்தியத்தில் அமைதி ...

பால் மற்றும் மின் கட்டண உயர்வே ...

பால் மற்றும்  மின் கட்டண உயர்வே திமுக -வின் சாதனை இந்தியாவின் பாதுகாப்பை பிரதமர் மோடி உறுதி செய்துள்ளார்'' என ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் வ ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் விரும்பும் மோடி பிரதமர் நரேந்திரமோடி மற்றும் மைக்ரோசாப்ட் நிறுவனர் பில்கேட்ஸ் இடையே ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் த ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் தொல்லை கொடுப்பதும் காங்கிரஸின்  கலாச்சாரம் நீதித்துறையின்மீது அழுத்தம் தரப்படுவதாகவும் நீதிமன்றங்கள் அவமதிப்படுவதாகவும் நூற்றுக்கணக்கான வழக்குரைஞர்கள் ...

மருத்துவ செய்திகள்

இஞ்சியின் மருத்துவ குணங்கள்

வயிற்றுஉப்பிசம், வயிற்றுவலி ஏற்பட்டிருந்தால் 1௦ கிராம் இஞ்சியை நைத்து ஒரு சட்டியில் போட்டு, ...

அருகன்புல்லின் மருத்துவ குணம்

அருகன்புல்லின் வேர் ஒரு கைபிடியளவும், கானாம் வாழையிலை கைப்பிடியளவு, இதே அளவு அசோக ...

உளுந்தின் மருத்துவக் குணம்

இதை உண்பதால், வயிற்றுவலி, பேதி, சீதபேதி, அஜீரணபேதி, மூத்திரத் தொடர்புடைய நோய்கள், மூலவியாதி, ...