பிரதான் மந்திரி உஜ்வாலா யோஜனா திட்டத்துக்காக ரூ.8,000 கோடியை ஒதுக்கீடு

ஏழை பெண்களுக்கு இலவசகாஸ் இணைப்பு வழங்கு வதற்காக பிரதான் மந்திரி உஜ்வாலா யோஜனா திட்டத்துக்காக ரூ.8,000 கோடியை ஒதுக்கீடுசெய்து  மத்திய அமைச்சரவை அனுமதி  அளித்துள்ளது. இது குறித்து மத்திய பெட்ரோலியத் துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான் கூறியதாவது: பிரதமர் நரேந்திரமோடி  தலைமையிலான அமைச்சரவை கூட்டம் நடைபெற்றது. இதில் ஏழைபெண்களுக்கு இலவச காஸ் இணைப்பு வழங்குவதற்கான பிரதான் மந்திரி உஜ்வாலா  யோஜனாவுக்கு நிதி ஒதுக்கீடுசெய்வது பற்றி ஆலோசிக்கப்பட்டது. இதில் இந்ததிட்டத்தை செயல்படுத்து வதற்காக மூன்று ஆண்டுகளுக்கு ரூ. 8,000 கோடி ஒதுக்கீடு செய்ய முடிவு செய்யப்பட்டது. இதற்கு அமைச்சரவையும் ஒப்புதல் அளித்துள்ளது.

வறுமைக் கோட்டுக்கு கீழ் உள்ள குடும்பத்தை சேர்ந்தபெண்களுக்கு இந்த திட்டத்தின் மூலம் இலவச காஸ் இணைப்பு வழங்கப்படும் என்றார்.  நிதிய மைச்சர்  அருண்ஜெட்லி 2016-17ம் ஆண்டுக்கான பட்ஜெட்டை தாக்கல்செய்தபோது, ‘ஏழை குடும்பத்திலுள்ள பெண்களுக்கு இலவசகாஸ் இணைப்பு வழங்குவதை அரசு  நோக்கமாக கொண்டுள்ளது. இதற்காக நடப்புஆண்டுக்கு ரூ.2,000 கோடி ஒதுக்கீடு செய்யபட்டுள்ளது. இதன் மூலம் வறுமைக்கோட்டுக்கு கீழ் உள்ள 1.5 கோடி  குடும்பங்கள் பயன் பெறுவார்கள். இதற்கான திட்டம் குறைந்தது 2 ஆண்டுக்குமேல் செயல்படுத்தப்படும். இதனால் 5 கோடி குடும்பங்கள் பயன் பெறும்’’ என  தெரிவித்திருந்தார்.

Leave a Reply

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந் ...

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந்துள்ளேன் கோவையில் கஸ்தூரி நாயக்கன்பாளையம் பகுதியில் பிரச்சாரம் மேற்கொண்ட அண்ணாமலை ...

இது சாதாரண தேர்தல் அல்ல

இது சாதாரண தேர்தல் அல்ல பாஜக மற்றும் கூட்டணி வேட்பாளர்கள் ஒவ்வொருவரும் வெற்றிபெற்று, நாடாளுமன்றத்தில் ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாதத ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாததை 10 ஆண்டுகளில் செய்து முடித்தேன் காங்கிரஸ்கட்சி பிரிவினைவாதத்தை தூண்டியது. ஆனால், நான் பிராந்தியத்தில் அமைதி ...

பால் மற்றும் மின் கட்டண உயர்வே ...

பால் மற்றும்  மின் கட்டண உயர்வே திமுக -வின் சாதனை இந்தியாவின் பாதுகாப்பை பிரதமர் மோடி உறுதி செய்துள்ளார்'' என ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் வ ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் விரும்பும் மோடி பிரதமர் நரேந்திரமோடி மற்றும் மைக்ரோசாப்ட் நிறுவனர் பில்கேட்ஸ் இடையே ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் த ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் தொல்லை கொடுப்பதும் காங்கிரஸின்  கலாச்சாரம் நீதித்துறையின்மீது அழுத்தம் தரப்படுவதாகவும் நீதிமன்றங்கள் அவமதிப்படுவதாகவும் நூற்றுக்கணக்கான வழக்குரைஞர்கள் ...

மருத்துவ செய்திகள்

கொஞ்சம் வெய்யிலில காயுங்க பாஸ்!

ஒரு காலத்தில் முதுமையின் அடையாளமாக இருந்த கைகால், மூட்டு வலி பிரச்சனை இன்று ...

கீரையின் மருத்துவ குணம்

கீரைகளில் உப்புச் சத்துக்களும், உலோகச் சத்துக்களும், வைட்டமின் என்னும் உயிர்ச் சத்துக்களும் உள்ளன. ...

நெல்லிக்காயின் மருத்துவக் குணம்

இதன் சுவை இனிப்பு, புளிப்பு, துவர்ப்பு. இது குளிர்ச்சியை உடலுக்கு உண்டாக்கும். சிறுநீரை ...