ரபேல் போர் விமான ஒப்பந்தம் இன்னும் இறுதி செய்யப்படவில்லை

பிரான்ஸ் நாட்டின் தஸ்சால்ட் ஏவியேசன் நிறுவனத்திடம் இருந்து 126 ரபேல் போர்விமானங்கள் வாங்க இந்தியா விரும்பியது. 3 ஆண்டுகள் பேரம்பேசியும், விலை உள்ளிட்ட பல்வேறு பிரச்சினைகளால் இதில் இறுதிமுடிவு எடுக்கப்படாமல் இருந்துவந்தது. இந்நிலையில், பிரதமர் நரேந்திர மோடி  கடந்த ஆண்டு  பிரான்ஸ் சென்றார். அவர் அந்த நாட்டின் அதிபர் பிராங்கோயிஸ் ஹாலண்டேயை சந்தித்துபேசினார்.இந்த சந்திப்பின் போது அவர், பிரான்சிடம் இருந்து இந்தியா நடுத்தரமானதும், பன்முக பயன்பாடு கொண்டதுமான 36 போர் விமானங்களை, பறக்கும்நிலையில் வாங்குவதாக உறுதி அளித்தார்.  
 
இந்நிலையில், ரபேல்போர் விமானம் வாங்கும் ஒப்பந்தம் இறுதி செய்யப்பட்டு விட்டதாக கடந்த சில தினங்களாக செய்திகள் வெளியாகிவந்தன. அதேபோல்,  பாஜக தனது டுவிட்டர் பக்கத்தில், “இந்த ஒப்பந்தம்( ரபேல் போர் விமான ஒப்பந்தம்) இறுதி செய்யப்பட்டு விட்டதாகவும், பிரதமர் பேச்சு வார்த்தை நடத்தி 21 ஆயிரம் கோடி ரூபாயை சேமித்துள்ளதாகவும் கூறப்பட்டு இருந்தது. 
 
மேலும், இந்த ஒப்பந்தம்  இறுதி செய்யப்பட்ட தன் விளைவாக  தொழில்நுட்ப அறிவு கிடைத்துள்ளதாகவும், எல்லையை பாதுகாக்க வான்பலம் அதிகரித்துள்ளதாகவும்  பாஜக தனது டுவிட்டர் பக்கத்தில் தெரிவித்து இருந்தது.
 
இந்நிலையில், இதுபற்றி விளக்கம் அளித்துள்ள மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சர் மனோகர் பாரிக்கார், “ இந்த ஒப்பந்தம் முன்னேறிய நிலையில் உள்ளது என்பதை மட்டுமே என்னால் தெரிவிக்க இயலும். இதை இறுதிசெய்யும் நோக்கத்துடன் நாங்கள் உள்ளோம். ஒப்பந்தத்தில் கையெழுத்திடும்வரை பேச்சுவார்த்தை முழுவதுமாக நிறைவு பெற்றது என்பதை என்னால் கூற இயலாது” என்று தெரிவித்தார்.
 
ரபேல் போர் விமானம் வாங்கும் ஒப்பந்தமானது மே மாத இறுதியில்  நிறைவுக்குவரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ரபேல் விமானத்தில் விலை விவகாரத்தில் பிரான்சிடம் இந்தியா பேரத்தில் ஈடுபட்டு வருகிறது.  முதலில் வெளியான டெண்டர் படி 65 ஆயிரம் கோடி என கூறப்பட்டது. இந்தவிலையை 59 ஆயிரம் கோடி அளவுக்கு குறைக்கவேண்டும் என்று பிரான்சிடம் இந்தியா பேரம் பேசிவருகிறது. 

Leave a Reply

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந் ...

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந்துள்ளேன் கோவையில் கஸ்தூரி நாயக்கன்பாளையம் பகுதியில் பிரச்சாரம் மேற்கொண்ட அண்ணாமலை ...

இது சாதாரண தேர்தல் அல்ல

இது சாதாரண தேர்தல் அல்ல பாஜக மற்றும் கூட்டணி வேட்பாளர்கள் ஒவ்வொருவரும் வெற்றிபெற்று, நாடாளுமன்றத்தில் ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாதத ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாததை 10 ஆண்டுகளில் செய்து முடித்தேன் காங்கிரஸ்கட்சி பிரிவினைவாதத்தை தூண்டியது. ஆனால், நான் பிராந்தியத்தில் அமைதி ...

பால் மற்றும் மின் கட்டண உயர்வே ...

பால் மற்றும்  மின் கட்டண உயர்வே திமுக -வின் சாதனை இந்தியாவின் பாதுகாப்பை பிரதமர் மோடி உறுதி செய்துள்ளார்'' என ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் வ ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் விரும்பும் மோடி பிரதமர் நரேந்திரமோடி மற்றும் மைக்ரோசாப்ட் நிறுவனர் பில்கேட்ஸ் இடையே ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் த ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் தொல்லை கொடுப்பதும் காங்கிரஸின்  கலாச்சாரம் நீதித்துறையின்மீது அழுத்தம் தரப்படுவதாகவும் நீதிமன்றங்கள் அவமதிப்படுவதாகவும் நூற்றுக்கணக்கான வழக்குரைஞர்கள் ...

மருத்துவ செய்திகள்

கூந்தல் பளபளப்பாகவும் மிருதுவாகவும் இருக்க

வாரம் ஒருமுறை மருதாணி இலையை அரைத்து தலையில்தேய்த்து குளித்து வந்தால், கூந்தல் பளபளப்பாகவும், ...

சிறுநீரக அழற்சி நோய் உள்ளவர்களுக்கான உணவு முறைகள்

நீண்ட நாட்களாகச் சிறுநீர் சரியாக வெளியேறாதவகளுக்கு பருப்பு வகைகள், காய்கறி சூப்பு, ஊறுகாய், ...

நித்தியகல்யாணியின் மருத்துவ குணம்

நித்திய கல்யாணியின் செடியின் வேர்ப்பட்டையை மட்டும் சீவிக் கொண்டு வந்து, தண்ணீர் விட்டுச் ...