ஜூன் 21–ம் தேதி பிரதமர் மோடி சண்டிகாரில் 1 மணிநேரம் யோகா பயிற்சி

சர்வதேச யோகா தினமான ஜூன் 21–ம் தேதி  பிரதமர் மோடி சண்டிகாரில் 1 மணிநேரம் யோகா பயிற்சியில் ஈடுபட உள்ளதாக  தெரிவிக்கப் பட்டுள்ளது.


பிரதமர் மோடியின்  கோரிக்கையை ஏற்று ஜூன் 21–ம் தேதியை சர்வதேச யோகாதினமாக ஐ.நா. சபை  அறிவித்துள்ளது. கடந்தாண்டு  பிரதமர் மோடி டெல்லியில் யோகா பயிற்சியில்  ஈடுபட்டு யோகா தினத்தை தொடங்கிவைத்தார்.

இதில் ஏராளமான பள்ளி  மாணவ–மாணவிகள் சமூக ஆர்வலர்கள் கலந்துகொண்டனர்.அதே சமயம் நாடுமுழுவதும்  உள்ள மாணவ–மாணவிகளும், பொது மக்களும் யோகா பயிற்சியில் ஈடுபட்டனர்.
இந்த  ஆண்டு வருகிற ஜூன் 21–ம் தேதி சர்வதேச யோகாதினம் கடைப்பிடிக்கப்படுகிறது.  கடந்த ஆண்டைப் போலவே இந்த ஆண்டும் பிரதமர் மோடி யோகாபயிற்சியில்  ஈடுபடுகிறார். இந்தமுறை சண்டிகாரில் பிரதமர் மோடியின் யோகா  பயிற்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. பஞ்சாப்–அரியானா மாநிலங்களில்  கடும் வறட்சியால் விவசாயிகள் பாதிக்கப்பட்டு மன உளைச்சலால் பாதிக்கப்பட்டு  உள்ளனர்.


அவர்களை மீட்டெடுக்கும்வகையில் விவசாயிகளை யோகா பயிற்சியில்  ஈடுபடுத்தும் விதமாக சண்டிகாரில் யோகா பயிற்சியில் ஈடுபடுகிறார். கடந்தமுறை டெல்லியில் பிரதமர் மோடி 30 நிமிடம் யோகா பயிற்சி செய்தார். இந்தமுறை சண்டிகாரில் அவர் 1 மணி நேரம் யோகாபயிற்சி செய்கிறார். இதில்  மோடியுடன் யோகா பயிற்சியில் ஈடுபட 35,985 பேர் முன்பதிவு செய்துள்ளதாக 2016  யோகா தினம் தலைவரும் மோடியின் யோகா குருவுமான எச்.ஆர்.நாகேந்திரர்  தெரிவித்தார்.


அன்றைய தினம் 1 மணி நேரத்தில் 45 நிமிடங்கள் பொதுவான  யோகாபயிற்சிகளும் 15 நிமிடங்கள் பிரணயாமா, யோக நித்ர, தியானம், சத்சாங்  போன்ற யோகா பயிற்சிகள் நடைபெறும்.

Leave a Reply

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந் ...

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந்துள்ளேன் கோவையில் கஸ்தூரி நாயக்கன்பாளையம் பகுதியில் பிரச்சாரம் மேற்கொண்ட அண்ணாமலை ...

இது சாதாரண தேர்தல் அல்ல

இது சாதாரண தேர்தல் அல்ல பாஜக மற்றும் கூட்டணி வேட்பாளர்கள் ஒவ்வொருவரும் வெற்றிபெற்று, நாடாளுமன்றத்தில் ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாதத ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாததை 10 ஆண்டுகளில் செய்து முடித்தேன் காங்கிரஸ்கட்சி பிரிவினைவாதத்தை தூண்டியது. ஆனால், நான் பிராந்தியத்தில் அமைதி ...

பால் மற்றும் மின் கட்டண உயர்வே ...

பால் மற்றும்  மின் கட்டண உயர்வே திமுக -வின் சாதனை இந்தியாவின் பாதுகாப்பை பிரதமர் மோடி உறுதி செய்துள்ளார்'' என ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் வ ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் விரும்பும் மோடி பிரதமர் நரேந்திரமோடி மற்றும் மைக்ரோசாப்ட் நிறுவனர் பில்கேட்ஸ் இடையே ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் த ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் தொல்லை கொடுப்பதும் காங்கிரஸின்  கலாச்சாரம் நீதித்துறையின்மீது அழுத்தம் தரப்படுவதாகவும் நீதிமன்றங்கள் அவமதிப்படுவதாகவும் நூற்றுக்கணக்கான வழக்குரைஞர்கள் ...

மருத்துவ செய்திகள்

ஆரைக்கீரை தரும் மருத்துவக் குணங்கள்

நான்கு இலைகளையும் ஒரு காலையும் கொண்டு நன்கு நீருள்ள இடங்களில் சிறப்பாக வளர்ந்து ...

தியானம் என்றால் என்ன?

தியானம் என்றால் எண்ணுதல் அல்லது நினைத்தல் என்று பொருளாகும். மனம் ஒரே பொருளின் மேலேயே ...

நீரிழிவுநோய் தாக்குதலுக்கு அதிக வாய்ப்புள்ளவர்கள்

தாய் அல்லது தந்தை – இருவரில் யாராவது ஒருவருக்கு நீரிழிவுநோய் இருந்தால், அவர்களுடைய ...