காங்கிரஸ் தனித்து போட்டியிட தயாரா?

வரும் உள்ளாட்சித்தேர்தலில் காங்கிரஸ் தனித்து போட்டியிட தயாரா என தமிழக காங்கிரஸ் தலைவர் ஈ.வி.கே.எஸ். இளங்கோவனுக்கு தமிழக பாஜக தலைவர் தமிழிசை சவுந்தர ராஜன் சவால் விடுத்துள்ளார்.  இது தொடர்பாக நேற்று அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது:  நடந்து முடிந்த சட்டப்பேரவைத் தேர்தலில் ஒரு சில இடங்கள் தவிர மற்ற இடங்களில் பா.ஜ.க.வுக்கு டெபாசிட் கிடைக்கவில்லை என தமிழக காங்கிரஸ் தலைவர் ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் பேசியுள்ளார். இதற்கு எனது கண்டனத்தை தெரிவித்துக் கொள்கிறேன்.  சட்டப்பேரவைத் தேர்தலில் பாஜக தனித்து போட்டியிட்ட கடந்த 2011 தேர்தலைவிட 5 லட்சம் வாக்குகள் அதிகம் பெற்றுள்ளோம். 

தேமுதிக, மதிமுக, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், இந்திய கம்யூனிஸ்ட், விடுதலை சிறுத்தைகள் ஆகிய கட்சிகளைவிட பாஜக அதிகவாக்குகளை பெற்றுள்ளது.  கூடாநட்பு கேடாய் முடியும் என்ற பழமொழிக்கேற்ப தி.மு.க முதுகில் சவாரிசெய்த காங்கிரஸ் தான் கெட்டதோடு தி.மு.கவின் வெற்றியையும் பறித்து விட்டது. திமுக ஆட்சி அமைக்க முடியாத நிலை ஏற்பட்டதற்கு காங்கிரஸே காரணம் என திமுக மாவட்ட செயலாளர்கள் கூறியிருக்கிறார்கள். இதற்கு இளங்கோவனின் பதில் என்ன?  காங்கிரஸ் உள்கட்சி பிரச்சினைகளை தீர்க்கமுடியாத இளங்கோவனுக்கு பா.ஜ.க பற்றி பேச தார்மிகஉரிமை இல்லை.  நான் உள்பட பா.ஜ.க முக்கிய நிர்வாகிகள் பலர் கணிசமான வாக்குகளைப் பெற்றுள்ளோம்.

துணிச்சல் இருந்தால் காங்கிரஸ் தனித்து போட்டியிட்டிருக்க வேண்டும். முதல் முறையாக சென்னையில் பா.ஜ.க அதிக வாக்குகளை பெற்றுள்ளது. திராவிடகட்சிகளுக்கு மாற்று பா.ஜ.கதான் என்பதையே இந்ததேர்தல் முடிவுகள் காட்டுகின்றன.  வரும் உள்ளாட்சி தேர்தலில் பா.ஜ.க தனித்துதான் போட்டியிடும். அதுபோல காங்கிரஸ் தனித்து போட்டியிட தயாரா என இளங்கோவனுக்கு பகிரங்கசவால் விடுகிறேன். இதற்கு அவரின் பதிலை எதிர்பார்க்கிறேன். இவ்வாறு தமிழிசை சவுந்தர ராஜன் கூறினார்.

Leave a Reply

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந் ...

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந்துள்ளேன் கோவையில் கஸ்தூரி நாயக்கன்பாளையம் பகுதியில் பிரச்சாரம் மேற்கொண்ட அண்ணாமலை ...

இது சாதாரண தேர்தல் அல்ல

இது சாதாரண தேர்தல் அல்ல பாஜக மற்றும் கூட்டணி வேட்பாளர்கள் ஒவ்வொருவரும் வெற்றிபெற்று, நாடாளுமன்றத்தில் ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாதத ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாததை 10 ஆண்டுகளில் செய்து முடித்தேன் காங்கிரஸ்கட்சி பிரிவினைவாதத்தை தூண்டியது. ஆனால், நான் பிராந்தியத்தில் அமைதி ...

பால் மற்றும் மின் கட்டண உயர்வே ...

பால் மற்றும்  மின் கட்டண உயர்வே திமுக -வின் சாதனை இந்தியாவின் பாதுகாப்பை பிரதமர் மோடி உறுதி செய்துள்ளார்'' என ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் வ ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் விரும்பும் மோடி பிரதமர் நரேந்திரமோடி மற்றும் மைக்ரோசாப்ட் நிறுவனர் பில்கேட்ஸ் இடையே ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் த ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் தொல்லை கொடுப்பதும் காங்கிரஸின்  கலாச்சாரம் நீதித்துறையின்மீது அழுத்தம் தரப்படுவதாகவும் நீதிமன்றங்கள் அவமதிப்படுவதாகவும் நூற்றுக்கணக்கான வழக்குரைஞர்கள் ...

மருத்துவ செய்திகள்

சுவையான தகவல்கள்

ஆரோக்கியமாக வாழ வேண்டும் என்கிற ஆசை எல்லோருக்கும் உள்ள நியாயமான ஆசை. ஆனால் ...

சூரியகாந்திப் பூவின் மருத்துவக் குணம்

சூரியகாந்திப் பூக்களிலிலுருந்து பெறப்படும் எண்ணெய் ஆரோக்கியத்திற்கும், நரம்புத் தளர்ச்சி நீங்குவதற்கும் மிகச் சிறந்ததாகப் ...

வயிற்றில் உள்ள பூச்சிகள் கிருமிகள் அகல வேண்டுமானால்

குப்பைமேனி இலையைக் கசக்கிப்பிழிந்த சாற்றை வயதுக்கு ஏற்றவாறு கொடுக்க வேண்டும்.