இடைதேர்தலில் பாஜக போட்டியிட வேண்டும் என நாடே எதிர்பார்க்கிறது

ஈரோடு கிழக்கு இடைதேர்தலில் பாஜக போட்டியிட வேண்டும் என நாடே எதிர்பார்க்கிறது, மக்களும் நினைக்கிறார்கள். இடைத் தேர்தலில் பாஜகவின் நிலைப்பாடு குறித்து 2 நாளில் அண்ணாமலை அறிவிப்பார் என பாஜக மாநில துணைத் தலைவர் கேபி ராமலிங்கம் தெரிவித்துள்ளார்.

ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் பாஜக போட்டியிடுவது பற்றி இதுவரை அறிவிக்கப் படாத நிலையில், பாஜக போட்டியிட்டால் ஆதரவு அளிப்போம் என ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்தார். அதையடுத்து ஜான்பாண்டியன், ஏசி சண்முகம் ஆகியோரும் பாஜக நிலைப்பாடே தங்கள்நிலைப்பாடு என்கிற ரீதியில் தெரிவித்துள்ளனர்.

இந்நிலையில், பாஜக மாநில துணைத்தலைவர் கேபி ராமலிங்கம், பாஜக போட்டியிடவேண்டும் என நாடே எதிர்பார்க்கிறது என பேசியுள்ளார். ஈரோடு கிழக்குதொகுதியில் திமுக கூட்டணியில் காங்கிரஸ் போட்டியிடும் என அறிவிக்கப்பட்டுள்ளது. காங்கிரஸ் சார்பில், மறைந்த எம்.எல்.ஏ திருமகன் ஈவெராவின் சகோதரர் சஞ்சய்சம்பத் போட்டியிட உள்ளதாகக் கூறப்படுகிறது. அவர் இன்று காங்கிரஸ் அலுவலகத்தில், விருப்பமனுவை தாக்கல் செய்துள்ளார். அதேபோல, எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அதிமுக இடைத்தேர்தலில் வேட்பாளரைநிறுத்த முடிவு செய்துள்ளது. இதற்காக அதிமுக எடப்பாடி பழனிசாமி தரப்புபல்வேறு கட்சிகளின் தலைவரிடம் ஆதரவுகேட்டு வருகிறது. இதற்கிடையே, ஓ.பன்னீர்செல்வம் தாங்களும் போட்டியிட இருப்பதாக அறிவித்தார். மேலும், பாஜக போட்டியிடவிரும்பினால், நாங்கள் முழு ஆதரவு தருவோம் என்றும் தெரிவித்துள்ளார்.

இதைதொடர்ந்து கூட்டணி கட்சியினரிடையே அதிமுகவின் இரு தரப்பினரும் ஆதரவு திரட்டி வருகிறார்கள். பாஜக தலைமைஅலுவலகத்தில் நேற்று அண்ணாமலையை எடப்பாடி பழனிசாமி மற்றும் ஓ.பன்னீர்செல்வம் என இரு தரப்பினரும் சந்தித்து ஆதரவுகோரினர். இந்நிலையில் இன்று ஓ.பன்னீர்செல்வம் குஜராத்சென்றுள்ளார். அங்கு பாஜக முக்கிய தலைவர்களுடன் பேச உள்ளதாகக் கூறப்படுகிறது.

இந்நிலையில், ஈரோட்டில் பாஜக மாநில துணைத்தலைவர் கேபி ராமலிங்கம் செய்தியாளர் சந்தித்து பேசுகையில், “ஓபிஎஸ், ஈபிஎஸ் அணிகள் இணையவேண்டும் என்பதே எங்கள்எண்ணம். எனினும், இரு அணிகளையும் இணைக்கும்வேலையில் பாஜக ஈடுபடாது. திமுகவிற்கு எதிராக உள்ள அணிகள் ஒன்றாகச்சேர வேண்டும். அதிமுகவின் இரு அணிகளும் இணையவேண்டும்”

இடைத்தேர்தலில் பாஜக போட்டியிட வேண்டும் என நாடே எதிர்பார்க்கிறது, மக்களும் நினைக்கிறார்கள். இடைத்தேர்தலில் பாஜகவின் நிலைப்பாடு குறித்து 2 நாளில் அண்ணாமலை அறிவிப்பார். காலஅவகாசம் உள்ளதால், இருஅணிகளும் ஒன்றாககூட சேரலாம்” எனத் தெரிவித்துள்ளார் கேபி ராமலிங்கம். பாஜக போட்டியிடவேண்டும் என மக்கள் நினைக்கிறார்கள் என பாஜக துணைத்தலைவர் கேபி ராமலிங்கம் பேசியிருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மாறும் நிலைப்பாடு ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலுக்கு தேர்தல் பணிக்குழுவை அமைத்த பாஜக, தாங்கள் போட்டியிடுவது பற்றி இதுவரை அறிவிக்கவில்லை. ஈபிஎஸ் அணி போட்டியிட தயாராவதால் பாஜக போட்டியிடாது எனக் கூறப்பட்ட நிலையில், ஓபிஎஸ், பாஜக போட்டியிட்டால் ஆதரவு எனத்தெரிவித்த நிலையில், பாஜகவின் நிலைப்பாட்டில் மாற்றம் ஏற்படத் தொடங்கியிருப்பது பல்வேறு கேள்விகளை எழுப்பியுள்ளது.

Comments are closed.

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

தமிழகத்தில் ஏற்பட்ட புயல் பாதி ...

தமிழகத்தில் ஏற்பட்ட புயல் பாதிப்புகள் குறித்து கேட்டறிந்த பிரதமர் மோடி 'பெஞ்சல்' புயல், தமிழகத்தில் ஏற்படுத்தியுள்ள கடுமையான பாதிப்புகள் குறித்து, ...

மக்கள் மன்றத்தில் வெற்றி பெற வே ...

மக்கள் மன்றத்தில் வெற்றி பெற வேண்டும் – அண்ணாமலை எந்த நீதிமன்றத்தில் வேண்டுமானாலும் தப்பித்தாலும், மக்கள் மன்றத்தில் வெற்றி ...

புதிய சட்டங்கள் மக்களை பாதுகாக ...

புதிய சட்டங்கள் மக்களை பாதுகாக்கும் – பிரதமர் மோடி பிரிட்டிஷ் ஆட்சி காலத்தில் இருந்து பயன்படுத்தப்படும், ஐ.பி.சி., எனப்படும் ...

மூன்று குற்றவியல் சட்டங்களை நி ...

மூன்று குற்றவியல் சட்டங்களை நிறைவேற்றிய நீதிபதிகளுக்கு நன்றி – பிரதமர் மோடி 'புதிய குற்றவியல் சட்டங்களை அமல்படுத்திய உச்சநீதிமன்றம், உயர்நீதிமன்ற நீதிபதிகளுக்கு ...

சாகசத்தை மட்டுமே பேசுகிறது வரல ...

சாகசத்தை மட்டுமே பேசுகிறது வரலாறு – அமைச்சர் ஜெய் சங்கர் ''அனைத்து சமூகத்திலும் வரலாறு என்பது சிக்கலானது. அன்றைய அரசியல் ...

தி சபர்மதி ரிப்போர்ட் படத்தை அம ...

தி சபர்மதி ரிப்போர்ட் படத்தை அமைச்சர்களுடன் பார்த்த பிரதமர் மோடி குஜராத்தின் கோத்ரா ரயில் எரிப்பு சம்பவத்தை மையமாக வைத்து ...

மருத்துவ செய்திகள்

அருகன்புல்லின் மருத்துவ குணம்

அருகன்புல்லின் வேர் ஒரு கைபிடியளவும், கானாம் வாழையிலை கைப்பிடியளவு, இதே அளவு அசோக ...

முருங்கை பிஞ்சு

முருங்கை பிஞ்சை எடுத்து அதை சிறிது சிறிதாக நறுக்கி அதனை நெய்யில் வதக்கி ...

முடி உதிர்தல் குறைய

வேப்பிலை கிருமிநாசினி . இது சிரிது எடுத்து நீரில் வேகவைத்து . வேகவைத்த ...