சர்வதேச யோகாதினத்துக்கு உற்சாகமான வரவேற்பு

சர்வதேச யோகாதினத்துக்கு இந்த அளவு உற்சாகமான வரவேற்பு கிடைக்கும் என எதிர் பார்க்கவில்லை என பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.

பிரதமர் மோடியின் கோரிக்கையை ஏற்று ஜூன் 21-ம் தேதியை சர்வதேச யோகா தினமாக கடந்த 2014 டிசம்பரில் ஐ.நா. அங்கீகரித்தது. இதையடுத்து கடந்த ஆண்டு டெல்லியில் பிரதமர் மோடி தலைமையில் 36,000 பேர் பங்கேற்ற பிரம்மாண்ட யோகாநிகழ்ச்சி நடந்தது. இதேபோல் இந்த ஆண்டும் வரும் 21-ம் தேதி சண்டீகரில் பிரம்மாண்ட யோகா நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப் பட்டுள்ளது.

இது குறித்து காணொலி மூலம் பிரதமர் மோடி பேசியதாவது:

எனது கோரிக்கையை ஏற்று ஜூன் 21ம் தேதியை சர்வதேச யோகாதினமாக ஐ.நா அறிவித்தது. இந்தநிகழ்ச்சிக்கு உலகத்தின் பல்வேறு மூலைகளில் இருந்தும் உற்சாகமான வரவேற்புகிடைக்கும் என நான் எதிர்பார்க்கவே இல்லை.

சர்வதேச யோகா தினத்துக்கு இந்தாண்டும் பெருந்திரளான மக்கள் ஆதரவு தெரிவிக்கவேண்டும். நமது நாட்டின் பண்டைய ஒழுக்கங்களில் ஒன்றான யோகாவை உலகம் முழுவதும் பரப்ப அனைவரும் உறுதியேற்கவேண்டும். ‘வசுதைவ குடும்பகம்’ (உலகமே ஒரு குடும்பம்) என்ற கொள்கையின் வெளிப்பாடுதான் யோகா. அதை அனைவரும் கற்க வேண்டும்.

கடந்த ஆண்டு பசிபிக்தீவுகள் முதல் போர்ட் ஆப் ஸ்பெயின் வரையிலும், விளாடிவோஸ்டாக் முதல் வான் கூவர் வரையிலும், கோபன் ஹேகன் முதல் கேப்டவுன் வரையிலும் ஆயிரக் கணக்கான மக்கள் திரண்டு வந்து உடலையும், மனதையும் ஒருங் கிணைக்கும் யோகா பயிற்சிசெய்தனர். அந்த இனிமையான தருணத்தை மீண்டும் நினைத்துப்பார்க்கிறேன்.

வழக்கமான உடற் பயிற்சிகளை காட்டிலும் யோகா மேன்மையானது. நமது சுயத்தை அறிந்து கொள்வதற்கான புதிய பரிணாமத்தை யோகா வெளிக்கொண்டு வரும். உடலுக்கான ஆரோக்கியத்தையும் பேணிக்காக்கும். நமது பண்டைய ஒழுக்கத்தை உலகம் முழுவதும் பிரச்சாரம்செய்து வருபவர்களுக்கு எனது நன்றிகளை தெரிவித்துக் கொள்கிறேன்.

ஒவ்வொருவருமே யோகா கலையின் தூதுவர்களாக செயல்பட்டு, இந்தியாவின் பண்டைய ஒழுக்கதகவல்களை உலக நாடுகளுக்கு முன்னெடுத்து செல்ல வேண்டும் இவ்வாறு அவர் பேசினார்.

Leave a Reply

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந் ...

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந்துள்ளேன் கோவையில் கஸ்தூரி நாயக்கன்பாளையம் பகுதியில் பிரச்சாரம் மேற்கொண்ட அண்ணாமலை ...

இது சாதாரண தேர்தல் அல்ல

இது சாதாரண தேர்தல் அல்ல பாஜக மற்றும் கூட்டணி வேட்பாளர்கள் ஒவ்வொருவரும் வெற்றிபெற்று, நாடாளுமன்றத்தில் ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாதத ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாததை 10 ஆண்டுகளில் செய்து முடித்தேன் காங்கிரஸ்கட்சி பிரிவினைவாதத்தை தூண்டியது. ஆனால், நான் பிராந்தியத்தில் அமைதி ...

பால் மற்றும் மின் கட்டண உயர்வே ...

பால் மற்றும்  மின் கட்டண உயர்வே திமுக -வின் சாதனை இந்தியாவின் பாதுகாப்பை பிரதமர் மோடி உறுதி செய்துள்ளார்'' என ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் வ ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் விரும்பும் மோடி பிரதமர் நரேந்திரமோடி மற்றும் மைக்ரோசாப்ட் நிறுவனர் பில்கேட்ஸ் இடையே ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் த ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் தொல்லை கொடுப்பதும் காங்கிரஸின்  கலாச்சாரம் நீதித்துறையின்மீது அழுத்தம் தரப்படுவதாகவும் நீதிமன்றங்கள் அவமதிப்படுவதாகவும் நூற்றுக்கணக்கான வழக்குரைஞர்கள் ...

மருத்துவ செய்திகள்

திருமணத்திற்கு முன்பு ஆணும் பெண்ணும் Rh சோதனை செய்ய வேண்டுமா?

Rh சோதனை செய்வது நல்லது. Rh ல் இருவகை உள்ளது. ஒன்று +ve (positive) ...

கருவேல் இலையின் மருத்துவக் குணம்

கருவேலன் கொழுந்துடன் அதற்கு பாதியளவு சீரகத்தை சேர்த்து நெகிழ அரைத்து வடைபோல் தட்டி ...

முட்டைகளின் மருத்துவக் குணம்

கோழிமுட்டை தாது அதிகப்படும். தேகம் தலைக்கும். இரத்தம் உண்டாகும். இதை அதிகநேரம் வேகவைத்தால் கெட்டியாய்விடும்; ...