ஆயத்த ஆடைதுறையின் வளர்ச்சிக்காக மத்திய அரசு ரூ.6 ஆயிரம்கோடி சிறப்புநிதி

ஜவுளி, ஆயத்த ஆடைதுறையின் வளர்ச்சிக்காக மத்திய அரசு ரூ.6 ஆயிரம்கோடி சிறப்புநிதி வழங்குவதாக அறிவித்திருப்பதை கோவையை சேர்ந்த ஜவுளித்தொழில் அமைப்புகள் வரவேற்றுள்ளன.

ஜவுளித்தொழில் துறையில் வரும் 2018-ஆம் ஆண்டுக்குள் மேலும் ஒருகோடி வேலை வாய்ப்புகளை உருவாக்கும் நோக்கிலும், புதியதொழில் முதலீடுகளை ஈர்க்கும் விதமாகவும் ஜவுளி, ஆயத்த ஆடைதுறைக்கு ரூ.6 ஆயிரம் கோடி சிறப்புநிதியை மத்திய அரசு ஒதுக்கியுள்ளது.

மத்திய அரசின் இந்த அறிவிப்பு ஜவுளித்தொழில் துறையின் வளர்ச்சிக்கு உதவியாக இருக்கும் என்று இந்தியன் டெக்ஸ்பிரனர்ஸ் அமைப்பின் பொதுச்செயலர் பிரபு தாமோதரன் தெரிவித்துள்ளார்.

மேலும், வருங்கால வைப்புநிதி பிடித்தம் செய்வதை தொழிலாளர்களின் விருப்பத்துக்கு ஏற்ப வைத்து கொள்ளலாம் என்ற தொழில் நிறுவனங்களின் நீண்ட கோரிக்கையையும் அரசு நிறைவேற்றி யுள்ளது.

இதனால், தொழில் நிறுவனங்களில் குறுகியகாலத்துக்கு மட்டும் பணியாற்றும் தொழிலாளர்கள் பயன் பெறுவார்கள். மேலும், ஜவுளித் தொழில் மேம்பாட்டு நிதியை 25 சதவீதமாக உயர்த்தியிருப்பது, வரிச் சலுகை, உற்பத்தி ஊக்கத் தொகைகள் போன்ற திட்டங்கள் ஜவுளித்தொழில் துறையினருக்கு உற்சாகத்தை அளிக்கும் விதத்தில் உள்ளன. ஜவுளித்தொழிலில் முன்னணியில் உள்ள வியட்நாம், வங்கதேச நாடுகளை பின்னுக்குத்தள்ளி இந்தியா முன்னேறுவதற்கு இந்த அறிவிப்புகள் உறுதுணையாக இருக்கும். அதே நேரம், பேப்ரிக்கிற்கு இறக்குமதி சலுகை வழங்கப்படும் என்ற அறிவிப்பில் மட்டும் இந்தியாவில் இல்லாத ரகங்களை இறக்குமதி செய்ப வர்களுக்கு மட்டும் சலுகை வழங்கவேண்டும் என்றார் அவர்.

ஜவுளித் துறை நலிவடைந்து வரும் நிலையில் மத்திய அரசின் இந்த அறிவிப்பு தங்களுக்கு ஊக்கமளிப்பதாக இருப்பதாக சைமா தலைவர் எம்.செந்தில்குமார் கூறியுள்ளார்.

தொழிலாளர் சட்டங்களில் விலக்கு அளிக்கப் பட்டிருப்பது தொழில் துறையினருக்கு பயனளிக்கும். ஜவுளித்தொழில் நிறுவனங்களில் புதிதாகசேரும் தொழிலாளர்களுக்கு 12 சதவீத பங்களிப்புடன் பி.எஃப். திட்டம் அறிவிக்கப் பட்டிருப்பது இரு தரப்பினருக்கும் பலனளிக்கும்.

அதேபோல் ஜவுளித்தொழில் மேம்பாட்டு நிதியை 15 சதவீதத்தில் இருந்து 25 சதவீத உயர்த்தியிருப்பது, ஜவுளித்துறையில் புதிய முதலீடுகளை ஈர்க்க வழி வகை செய்யும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

Leave a Reply

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

செங்கோல் என்ன செய்யும்?

செங்கோல் என்ன செய்யும்? கொடுங்கோன்மை' என்ற சொல்லுக்கு மாற்றாக 'செங்கோன்மை' என்ற சொல்லை ...

ஆனந்த் பவனில் ‘வாக்கிங் ஸ்டிக ...

ஆனந்த் பவனில் ‘வாக்கிங் ஸ்டிக்’காக இருந்ததை வெளிக்கொண்டு வந்துள்ளோம் புதிய பார்லிமென்டில் நிறுவப்பட உள்ள செங்கோல் பிரதமர் நரேந்திர ...

மோடி கைபட்டால் குற்றம், கால்பட் ...

மோடி கைபட்டால் குற்றம், கால்பட்டால் குற்றம் பாரத பிரதமர் நரேந்திர மோடியின் கனவு திட்டங்களில் ஒன்று ...

கர்நாடக தேர்தல் முடிவு தேசத்தி ...

கர்நாடக தேர்தல் முடிவு தேசத்தின் மனோநிலை ஆகாது நடந்து முடிந்த கர்நாடக மாநில சட்டமன்ற   தேர்தலில் காங்கிரஸ் ...

ரூ.1.31 லட்சம் கோடி: திமுகவின் சொத் ...

ரூ.1.31 லட்சம் கோடி: திமுகவின் சொத்து பட்டியலை வெளியிட்டார் அண்ணாமலை! தமிழக பா.ஜ., தலைவர் அண்ணாமலை இன்று ஆளும் தி.மு.க., ...

நமது ஆட்சிமுறையும் சுவாமி விவே ...

நமது ஆட்சிமுறையும் சுவாமி விவேகானந்தரால் ஈர்க்கப்பட்டதுதான் ஸ்ரீ இராமகிருஷ்ண பரமஹம்சா, மாதா ஸ்ரீ சாரதா தேவி ...

மருத்துவ செய்திகள்

முகத்தில் எண்ணெய் வழிவதை தடுக்க

வெள்ளரி காயை, தினசரி காலையில் எழுந்ததும் முகத்தில் தேய்த்துவர முகத்தில் அதிகமாக எண்ணெய் ...

இஞ்சியின் மருத்துவ குணங்கள்

வயிற்றுஉப்பிசம், வயிற்றுவலி ஏற்பட்டிருந்தால் 1௦ கிராம் இஞ்சியை நைத்து ஒரு சட்டியில் போட்டு, ...

கர்ப்பிணிகளுக்கு DHA கூடிய பால் மாவு அவசியமா?

அதற்கு எந்த விதமான ஆதாரமும் இல்லை. நான் எந்த ஒரு ஊட்டச்சத்து மாவையும் ...