பலுசிஸ்தான் பற்றி பேசுவதற்கு இந்தியாவுக்கு முழு உரிமையுள்ளது

பலுசிஸ்தானில் பாகிஸ்தான் நடத்திவரும் மனித உரிமை மீறல்கள் குறித்து பேசிய மோடிக்கு ஆப்கான் அதிபர் ஹமீத்கர்சாய் தனது பாராட்டுகளை தெரிவித்துள்ளார்.  மேலும் பாகிஸ்தானின் அனைத்து அத்துமீறல்கள் பற்றி பேசுவதற்கு இந்தியாவுக்கு முழுஉரிமையுள்ளது எனவும் கூறியுள்ளார். 

முன்னதாக பிரதமர் நரேந்திரமோடி தனது சுதந்திர தின உரையில், பலுசிஸ்தான் மற்றும் பாக். ஆக்கிரமிப்புக் காஷ்மீரில் பாகிஸ்தானின் மனித உரிமைமீறல் குறித்து கேள்வி எழுப்பினார். பலுசிஸ்தான் மக்களுக்கு இந்தியா ஆதரவாக இருக்கும் என கருத்துதெரிவித்திருந்தார்.

இதுதொடர்பாக இந்தியாவுக்கு சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ள ஆப்கான் அதிபர் ஹமீத்கர்சாய் கூறியபோது,  “பாகிஸ்தான் அதிகாரிகள் ஆப்கனை பற்றியும், இந்தியாவை பற்றியும் வெளிப்படையாக கருத்துதெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் முதல் முறையாக இந்திய பிரதமர் மோடி பலுசிஸ்தான் பற்றி கருத்துதெரிவித்துள்ளார். 

பிரதமர் மோடி பலுசிஸ்தான் விவகாரம்குறித்து பேசியதால்தான் அந்தமக்கள் மீது பாகிஸ்தான் செலுத்தும் அடக்கு முறைகள் வெளியுலகிற்கு தெரியவந்துள்ளது. ஆப்கானிஸ்தானுக்கு இந்தியா அளிக்கும் ராணுவ உதவிபற்றி அமெரிக்கா ஆதரவு அளித்தால் அதை வரவேற்கிறோம். ஆதரவு அளிக்க வில்லை என்றால் யாருடைய அனுமதிக்காகவும் இந்தியா காத்திருக்க தேவையில்லை. இந்திய தனது பிராந்திய நாடுகளில் அமைதி நிலவ வேண்டும் என்றே விரும்புகிறது” என்றார். மேலும் கடந்தகாலங்களில் அமெரிக்க பாகிஸ்தானுக்கு அளித்த ஆதரவைப் பற்றியும் குற்றச்சாட்டினார்.  முன்னதாக இந்தவாரம் இந்தியா வந்த வங்கதேச அமைச்சர் ஹசானுல் ஹயு இனுவும் பலுசிஸ்தான் குறித்த மோடியின் பேச்சுக்கு தனது ஆதரவை தெரிவித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

ஆளுநராக இருந்த நான், உங்கள் அக் ...

ஆளுநராக இருந்த நான், உங்கள் அக்காவாக வந்திருக்கின்றேன் நாடாளுமன்ற தேர்தலில் பாஜக சார்பில் தென்சென்னை தொகுதியில் தமிழிசை ...

டீ குடிப்பது என்றாலும் சொந்தக் ...

டீ குடிப்பது என்றாலும் சொந்தக்காசில் குடிப்போம் 2019 தேர்தலில் அளித்த 295 வாக்குறு திகளையும் பாஜக ...

கன்னியாகுமரி மாவட்டத்தில் 48 ஆய ...

கன்னியாகுமரி மாவட்டத்தில் 48 ஆயிரம் கோடிக்கான திட்டங்களை  கொண்டுவந்துள்ளோம் தமிழகத்தில் அமைந்துள்ள தேசிய ஜனநாயக கூட்டணியின் வெற்றி, தமிழகத்தினுடைய ...

ஒரு லட்சம் பெண்களுக்கு வேளாண் ப ...

ஒரு லட்சம் பெண்களுக்கு வேளாண் பணி சார்ந்த ட்ரோன் மத்திய அரசு சார்பில் கடந்த2022-ம் ஆண்டு ‘நமோ ட்ரோன் ...

ரயில்வேயில் ‘மேட் இன் இந்தியா’

ரயில்வேயில் ‘மேட் இன் இந்தியா’ நாட்டில் கடந்த 10 ஆண்டுகள் நடைபெற்ற ஆட்சி வெறும் ...

10 புதிய வந்தே பாரத் ரயில்களை கொட ...

10 புதிய வந்தே பாரத் ரயில்களை கொடியசைத்து தொடங்கி வைத்த பிரதமர் ரயில்வே உள்கட்டமைப்பு, இணைப்பு மற்றும் பெட்ரோகெமிக்கல்ஸ் துறைக்கு பெரும் ...

மருத்துவ செய்திகள்

வயிற்றுப்புண் மற்றும் வாயுக் கோளாறுகள் நீங்க உணவுப் பொருட்கள்

ஜீரணமாகாத காரணத்தால் புளிச்ச ஏப்பம், சாப்பிட்ட உணவு மேல் கிளம்பி விடுதல், வாயில் ...

நோனியின் மருத்துவ குணம்

மனிதகுலத்துக்கு, இயற்கை தந்த கொடைதான் நோனி. மொரின்டா சிட்ரி ஃபோலியா மரத்தின் பழம்தான் நோனி. ...

அலரியின் மருத்துவக் குணம்

இதில் வெண்மை, செம்மை, அரக்கு மஞ்சள், மஞ்சள் நிறமாகவும் பூக்கும் தன்மையுடையது. வெண்மையாகப் ...