பல மாநிலங்களில் பாஜக முன்னேற்றம்

ரூபாய் நோட்டு பிரச்சனையால்  பாஜக ஆளும் மாநிலங்களில் கட்சிக்கு பின்னடைவு ஏற்படவில்லை. மாறாக பல மாநிலங்களில் முன்னேற்றம் அடைந்துள்ளது .

கருப்பு, கள்ள ரூபாய்நோட்டுகளை ஒழிப்பதற்காக மத்திய அரசு ரூ.500, 1,000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என அறிவித்தது. இதற்கு நாடு முழுவதும் பல்வேறு அரசியல்கட்சிகள் கடும் எதிர்ப்புத் தெரிவித்தன. மேலும், இந்த அறிவிப்பிற்கு பின்னர், 4 மக்களவை தொகுதி, மற்றும் பல்வேறு மாநிலங்களில் உள்ள 9 சட்டப் பேரவைத் தொகுதிகளுக்கு கடந்த 19ம் தேதி இடைத்தேர்தல் நடைபெற்றதால், இந்ததேர்தலில் பொதுமக்கள் பிஜேபியை வெற்றி பெற வைக்கமாட்டார்கள் என எதிர்கட்சிகள் நம்பின. அதற்காக தீவிரபிரசாரத்தையும் மேற்கொண்டன.


இந்நிலையில், அதாவது, நாடுமுழுவதும் பணத்தட்டுப்பாடு ஏற்பட்டிருக்கும் இந்தநேரத்தில்  இந்த 13 தொகுதிகளுக்கும்   வாக்கு எண்ணிக்கை இன்றுகாலை தொடங்கியது.

திரிபுராவில் இடைத்தேர்தல் நடைபெற்ற 2 தொகுதிகளிலுமே சிபிஎம் வெற்றிபெற்றுள்ளது. அதே நேரத்தில் எப்போதும் 2-வது இடத்தில் இருந்துவரும் காங்கிரஸ் படுதோல்வியை சந்தித்து 3-வது இடத்துக்கு தள்ளப் பட்டுள்ளது. அங்கு பாஜக விஸ்வரூபமெடுத்து 2-வது இடத்துக்கு முன்னேறியுள்ளது.

 

அசாமில் உள்ள லக்கிம்பூர்,மத்தியப் பிரதேசத்தில் உள்ள சஹ்டோல், மற்றும் கூக்பெஹர், அசாம், அருணாச்சலப் பிரதேசம், மத்தியப் பிரதேசம் ஆகிய மாநிலங்களில் நடைபெற்ற இடைத் தேர்தலிலும் பாஜக  முதலிடம் பிடித்து அசத்தியுள்ளது.


 மேற்கு வங்க மாநிலத்தில் உள்ள டம்லுக் தொகுதியில் ஆளும் திரிணமுல் காங்கிரஸ் முன்னிலை வகிக்கிறது.  புதுச்சேரி நெல்லித் தோப்பு தொகுதியில் காங்கிரஸ் வெற்றி பெற்றுள்ளது. தமிழகத்தில்  தேமுதிகவை பின்னுக்கு தள்ளி பாஜக  3-ம் இடம் பெற்று அசத்திஉள்ளது. 

Leave a Reply

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

மற்றவர்களை அச்சுறுத்துவதும் த ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் தொல்லை கொடுப்பதும் காங்கிரஸின்  கலாச்சாரம் நீதித்துறையின்மீது அழுத்தம் தரப்படுவதாகவும் நீதிமன்றங்கள் அவமதிப்படுவதாகவும் நூற்றுக்கணக்கான வழக்குரைஞர்கள் ...

நாட்டில் ஊழலை முற்றிலும் ஒழிக் ...

நாட்டில் ஊழலை முற்றிலும் ஒழிக்க பாஜக உறுதிபூண்டுள்ளது மக்களிடம் இருந்து கொள்ளையடிக்கப்பட்ட பணத்தை திரும்பக் கொண்டு வருவதற்காக ...

ஆளுநராக இருந்த நான், உங்கள் அக் ...

ஆளுநராக இருந்த நான், உங்கள் அக்காவாக வந்திருக்கின்றேன் நாடாளுமன்ற தேர்தலில் பாஜக சார்பில் தென்சென்னை தொகுதியில் தமிழிசை ...

டீ குடிப்பது என்றாலும் சொந்தக் ...

டீ குடிப்பது என்றாலும் சொந்தக்காசில் குடிப்போம் 2019 தேர்தலில் அளித்த 295 வாக்குறு திகளையும் பாஜக ...

கன்னியாகுமரி மாவட்டத்தில் 48 ஆய ...

கன்னியாகுமரி மாவட்டத்தில் 48 ஆயிரம் கோடிக்கான திட்டங்களை  கொண்டுவந்துள்ளோம் தமிழகத்தில் அமைந்துள்ள தேசிய ஜனநாயக கூட்டணியின் வெற்றி, தமிழகத்தினுடைய ...

ஒரு லட்சம் பெண்களுக்கு வேளாண் ப ...

ஒரு லட்சம் பெண்களுக்கு வேளாண் பணி சார்ந்த ட்ரோன் மத்திய அரசு சார்பில் கடந்த2022-ம் ஆண்டு ‘நமோ ட்ரோன் ...

மருத்துவ செய்திகள்

அரத்தையின் மருத்துவக் குணம்

இதில் சிற்றரத்தை, பேரரத்தை என்று இரண்டு வகைகள் உண்டு. இந்த இரண்டு வகையும் ...

வேப்பையின் மருத்துவ குணம்

நம் தாய் திருநாட்டில் சக்தி என்றும் பராசக்தி என்றும் வேம்பு என்றும் ...

பெரும்பாடு குணமாக

நாகப்பட்டை, அத்திப்பட்டை, ஆவாரம்பட்டை மூன்றையும் ஒரு பிடி வீதம் எடுத்து மண் சட்டியிலிட்டு ...