அதிமுக உடையாது மெல்ல கரையும்

அதிமுகவின் தலைவராக சசிகலா திணிக்கப் பட்டால் அதிமுக உடையாது…அந்த கட்சி மெல்ல கரையும், அதிமுகவில் தொண்டர்கள் ஒரு பக்கம்… தலைவர்கள் ஒரு பக்கம் உள்ளனர். 1972-ல் திமுக எப்படி இருந்ததோ அப்படி இருக்கிறது அதிமுக.,வின் தற்போதைய நிலை. கருணாநிதியின் குடும்ப அதிகாரத்தை அப்போது எம்ஜிஆர் ஏற்கவில்லை. இதையடுத்து எம்.ஜி.ஆர் திமுகவில் இருந்து வெளியேற்றப் பட்டார்.

அப்போது எம்ஜிஆருக்கு பின்னர் தொண்டர்கள் திரண்டர். ஆனால் கருணாநிதியுடன் தலைவர்கள் இருந்தனர். இதே போல் 1987-ம் ஆண்டு ஜெயலலிதா ஒரு பக்கம், தலைவர்கள் ஒரு பக்கம் நின்றனர். பின்னர் ஜெயலலிதாவை தொண்டர்கள் ஏற்றனர். தற்போது ஜெயலலிதா இல்லாதநிலையில் ஒருதலைவர் தேடப்படுகிறார். அதற்காக ஜெயலலிதா உடன் இருந்த சசிகலாவை தலைவராகதேடுவதை தொண்டர்கள் ஏற்கவில்லை.

நாள் தோறும் சசிகலாவை தலைவராக்க போயஸ் கார்டனில் எப்படி குவிகிறார்கள் என்பதை ஒரு பத்திரிகையாளனாக எனக்குதெரியும். அதிமுகவில் மேலே இருந்து அதிகாரத்தை கைப்பற்றும் நிலை இருக்கிறது. இப்படி தொண்டர்களுக்கு பிடிக்காத தலைமையை திணித்தால் அ.தி.மு.க., கரையும்.

அதிமுக உடையும் என்பதை விட கரையும். அதாவது அ.தி.மு.க., என்பது திமுக.,வை பிடிக்காத கட்சி. திமுகவை கடுமையாக எதிர்க்கும் கட்சி. அக்கட்சியின் தொண்டர்கள் திமுகவுக்கு எதிரான கட்சியில் தான் இணைவர்.

சசிகலா தலைமை ஏற்க கூடாது. தலைமையை உருவாக்குகிற பொறுப்பு அவருக்குள்ளது. அப்பொழுதான் அவரை தொண்டர்கள் நம்புவார்கள். சசிகலா ஜெயலலிதாவின் முழு நம்பிக்கைக்கு பாத்தியப்பட்டவர் என்பதை ஏற்கமுடியாது. சசிகலாவை 2 முறை ஜெயலலிதா வெளியேற்றினார். சசிகலாவின் உறவினர்கள் அனைவரையும் சிறைக்குள்போட்டார் ஜெயலலிதா. 1991-ல் இருந்து சசிகலா உறவினர்கள் ஆட்சியில் தலையிட்டார்கள் என்பதும் உண்மை.

சசிகலா அதிமுக தலைமையை ஏற்கக் கூடாது. அவர் தலைமையை உருவாக்குகிற பொறுப்பில் உள்ளார். அதிமுக.,வின் உட்கட்சியில் தலையிட்டால் பாஜகவுக்கு என்னலாபம் இருக்கிறது. மற்றகட்சிகள் நலிவதால் தங்கள் கட்சி வளரும் என பாஜக நம்பவில்லை. மத்திய பாஜக அரசு ஓபிஎஸ்ஸை மட்டும் ஆதரிப்பதாக சொல்லமுடியாது. அதிமுக எம்எல்ஏக்கள் சசிகலாவை பொது செயலாளராக ஏற்றுக்கொண்டால் அதை மத்திய அரசு தடுக்காது.

நன்றி குரு மூர்த்தி .

Leave a Reply

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந் ...

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந்துள்ளேன் கோவையில் கஸ்தூரி நாயக்கன்பாளையம் பகுதியில் பிரச்சாரம் மேற்கொண்ட அண்ணாமலை ...

இது சாதாரண தேர்தல் அல்ல

இது சாதாரண தேர்தல் அல்ல பாஜக மற்றும் கூட்டணி வேட்பாளர்கள் ஒவ்வொருவரும் வெற்றிபெற்று, நாடாளுமன்றத்தில் ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாதத ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாததை 10 ஆண்டுகளில் செய்து முடித்தேன் காங்கிரஸ்கட்சி பிரிவினைவாதத்தை தூண்டியது. ஆனால், நான் பிராந்தியத்தில் அமைதி ...

பால் மற்றும் மின் கட்டண உயர்வே ...

பால் மற்றும்  மின் கட்டண உயர்வே திமுக -வின் சாதனை இந்தியாவின் பாதுகாப்பை பிரதமர் மோடி உறுதி செய்துள்ளார்'' என ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் வ ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் விரும்பும் மோடி பிரதமர் நரேந்திரமோடி மற்றும் மைக்ரோசாப்ட் நிறுவனர் பில்கேட்ஸ் இடையே ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் த ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் தொல்லை கொடுப்பதும் காங்கிரஸின்  கலாச்சாரம் நீதித்துறையின்மீது அழுத்தம் தரப்படுவதாகவும் நீதிமன்றங்கள் அவமதிப்படுவதாகவும் நூற்றுக்கணக்கான வழக்குரைஞர்கள் ...

மருத்துவ செய்திகள்

சின்னம்மை ( நீர்க்கோளவான் )

சின்னம்மைக்கு காரணம் 'வேரிசெல்லா' என்கிற வைரசாகும், இது காற்றின் மூலம் பரவ கூடியது. ...

இலந்தையின் மருத்துவ குணம்

ஒரு கைப்பிடியளவு இலந்தையின் கொழுந்து இலையை ஒரு புதுச்சட்டியில் போட்டு நன்றாக வதக்கிய ...

பேரீச்சம் பழத்தின் மருத்துவ குணம்

இயற்கை அன்னையின் கொடையான பழங்களில் பலவற்றை அப்படியே நேரடியாக சாப்பிட்டுவிடலாம் , சில ...