தமிழக பாஜக தலைவராக கே.அண்ணாமலை நேற்று பொறுப்பேற்றார். கட்சியின்மூத்த தலைவர்கள் அவருக்கு வாழ்த்து தெரிவித்தனர்.
தமிழக பாஜக தலைவராக இருந்த எல்.முருகன் மத்திய அமைச்சராக பொறுப்பேற்றதை தொடர்ந்து, புதியதலைவராக கே.அண்ணாமலை நியமனம் செய்யப் பட்டார். இதை தொடர்ந்து, தலைவர் பொறுப்பேற்பதற்காக கோவையில் இருந்து கடந்த 14-ம் தேதி புறப்பட்டு திருப்பூர், ஈரோடு, விழுப்புரம், செங்கல்பட்டு உள்ளிட்டமாவட்டங்கள் வழியாக நேற்று பிற்பகல் 2.30 மணிக்கு சென்னை தியாகராய நகரில் உள்ள கட்சியின் தலைமை அலுவலகமான கமலாலயம்வந்தார்.
அவருக்கு மேளதாளங்கள் முழங்க பூரணகும்ப மரியாதையுடன் தொண்டர்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர். மூத்த தலைவர்கள் வாழ்த்துகளை தெரிவித்தனர். இதை தொடர்ந்து, தலைவராக நியமனம் செய்யப்பட்டதற்கான ஆணையை பாஜகவின் அகில இந்திய பொதுச்செயலாளர் சி.டி.ரவி வழங்கினார். இதையடுத்து கே.அண்ணாமலை பொறுப்பேற்று கொண்டார்.
பின்னர், அண்ணாமலை செய்தியாளர்களிடம் கூறியதாவது: கட்சியை அடுத்தகட்ட வளர்ச்சிக்கு கொண்டுசெல்வதுதான் என்னுடைய ஆசை.சாதாரண மனிதனும் அமைச்சராகவும் தலைவராகவும் ஆகமுடியும் என்று சூழல் இருப்பதால் பாஜகவில்தான் சமூகநீதியை பார்க்க முடியும். பிரதமர் மோடி திட்டத்தால் பயனடைந்த 3.50 கோடி பேரை கிராமம் தோறும் சந்திக்கும் எண்ணம் உள்ளது.
திமுகவின் 70 நாள் ஆட்சியில் இதுவரை ஒருதேர்தல் வாக்குறுதிகளை கூட முழுமையாக நிறைவேற்றவில்லை. நீட்தேர்வினால் ஏற்படும் நன்மைகளை எடுத்து கூறுவோம். தமிழகத்துக்கு கூடுதல் தடுப்பூசிவழங்க மத்திய அரசை வலியுறுத்துவோம். மேகே தாட்டு அணை விவகாரத்தில் உச்சநீதிமன்றம் தீர்ப்பின்படி ஒருசொட்டு நீர் குறைவில்லாமல் வரவேண்டும். மேகேதாட்டு அணை கட்ட தமிழக பாஜக எதிர்ப்பு தெரிவித்துள்ளது. கொங்கு நாடு தொடர்பாக தீர்மானம் நிறைவேற்றப் பட்டது குறித்துதொடர்புடைய மாவட்ட தலைவரிடம் விளக்கம் கேட்கப் பட்டுள்ளது. இவ்வாறு கூறினார்.
கோவைக்கொடி இனத்தை சேர்ந்த இந்தமூலிகைக்கு பொதுவாக கருடன் கிழங்கு, பேய் சீந்தில், ... |
காய கல்ப மூலிகைகள் என்று போற்றப்படுபவைகளில் முக்கியமான இடத்தைப் பிடித்திருப்பது அருகம்புல்லாகும். இது ... |
ஆன்மீகக் கண்ணோட்டத்தை ஒதுக்கிவிட்டுப் பார்த்தால் கூட தியானம் முதன்மைத் தன்மை வாய்ந்த வாழ்வியல் ... |