ஈரோடு கிழக்கு சட்ட சபை இடை தேர்தலுக்காக அதிமுக ஒன்றுசேர வேண்டும் என்று பாஜக கூறிவருகிறது. ஆனால் ஈரோடு கிழக்கு இடைத் தேர்தலுக்கு ஓபிஎஸ், எடப்பாடி இருவரும் வேட்பாளரை நிறுத்த முடிவு செய்துள்ளதால் சின்னம் முடங்கும்நிலை ஏற்பட்டு உள்ளது.
இதையடுத்தே அண்ணாமலை இன்று எடப்பாடியை மற்றும் ஓ பன்னீர்செல்வத்தை சென்று சந்தித்துள்ளார். எடப்பாடி – ஓபிஎஸ் ஒன்று சேரவேண்டும் என்று இருவரிடமும் பாஜக தரப்பு கேட்டுஇருக்கிறது. அண்ணாமலை – சி டி ரவி இன்று செய்தியாளர்களை சந்தித்தனர். செய்தியாளர்சந்திப்பில் சிடி ரவி அளித்த பதிலில், பிப்ரவரி 7ம் தேதி வரை பொறுமையாக இருங்கள். திமுகவை எம்ஜிஆர் தீயசக்தி என்று கூறினார். ஜெயலலிதாவும் தீய சக்தி என்று கூறினார். அந்த தீயசக்திக்கு எதிராக மக்கள் அதிருப்தியில் இருக்கிறார்கள். திமுகஆட்சிக்கு எதிரான மனநிலை இருக்கிறது. மக்கள் நாளுக்குநாள் திமுக மீதான ஆதரவை இழந்து வருகிறார்கள். ஒன்றாக நிற்கவேண்டும் அதிமுக எதிர்க் கட்சியாக ஒன்றாக இருக்க வேண்டும். திமுக கூட்டணியை அப்போதுதான் எதிர்க்கமுடியும். எதிர்க்கட்சியாக தனிதனியாக நிற்காமல் ஒன்றாக நில்லுங்கள் என்று சொல்லி இருக்கிறோம்.
அதுதான் பாஜகவின் விருப்பம். டெல்லியின் விருப்பம் அதுதான். எதிர்க்கட்சியாக நாம் ஒன்றுஇணைய வேண்டும் என்று கூறி உள்ளோம். பாஜக போட்டியா ? திமுகவை வீழ்த்த, அதிமுக ஒன்றுபடவேண்டும் என்பதே எங்கள் நிலை; பாஜக தலைவர் ஜெ.பி.நட்டா அனுப்பிய செய்தியை எடப்பாடி பழனிசாமி, ஓ.பன்னீர்செல்வம் ஆகியோரிடம் எடுத்துரைத்தோம். அது என்ன என்பதை வெளிப் படையாகக் கூற முடியாது, என்று சிவி ரவி கூறினார்.
1.வாய் , நாக்கு. தொண்டை ரணம் தீர:-பப்பாளிப் பாலைத் தடவி வரத் தீரும். 2.நாக்குப் ... |
இது துவர்ப்பாக இருப்பதால் உடலை உரமாக்கிப் பலப்படுத்தும். சிறுநீர் பெருக்கும். முறைவெப்பமகற்றி நன்மை ... |
குப்பைமேனி இலையைக் கசக்கிப்பிழிந்த சாற்றை வயதுக்கு ஏற்றவாறு கொடுக்க வேண்டும். |