சுதந்திரம் அடைந்தபிறகு பொருளாதாரத்தில் கொண்டு வரப்பட்டுள்ள மிகப் பெரிய சீர்திருத்தம் ஜி.எஸ்.டி

சென்னை தியாகராய நகரில் உள்ள தமிழக பாஜக. அலுவலகமான கமலாலயத்தில் மத்திய நிதித் துறை ராஜாங்க மந்திரி அர்ஜூன் ராம் மெக்வால் நிருபர்களுக்கு பேட்டிஅளித்தார்  அப்போது அவர் கூறியதாவது:–

மத்தியில் ஆளும் பாஜக. அரசு 3 ஆண்டுகள் சிறப்பான ஆட்சியை நிறைவுசெய்துள்ளது. இந்திய பொருளாதாரத்தில் பல்வேறு மாற்றங்களை கொண்டுவந்துள்ளது. முதன் முதலாக ரெயில்வே பட்ஜெட்டை பொதுபட்ஜெட்டுடன் இணைத்து தாக்கல்செய்தது பா.ஜ.க. அரசுதான்.

இந்தியா சுதந்திரம் அடைந்தபிறகு பொருளாதாரத்தில் கொண்டு வரப்பட்டுள்ள மிகப் பெரிய சீர்திருத்தம் என்பது ஜூலை 1–ந் தேதி முதல் அமல்படுத்தப்பட உள்ள சரக்கு மற்றும் சேவைவரி (ஜி.எஸ்.டி.) ஆகும்.

ஜி.எஸ்.டி. வரி குறித்து தொழில்துறை நிறுவனங்கள் மற்றும் வணிகத் துறை நிறுவனங்களின் பிரதிநிதிகளுடன் கருத்தரங்குகள் நடத்தப்பட்டு விளக்கங்கள் தெரிவிக்கப் பட்டுள்ளன. அதன் மூலம் ஜிஎஸ்டி. வரி குறித்த சந்தேகங்கள் முழுமையாக தீர்க்கப்பட்டு இருக்கும் என நம்புகிறேன்.

இதற்கு மேலும் ஜிஎஸ்டி. வரி குறித்து எழும் சந்தேகங்கள் குறித்து மாநில தலைவர்கள் கருத்தரங்குகள் மற்றும் கூட்டங்கள்மூலம் விளக்கம் அளிப்பார்கள். மத்திய மந்திரிகளும் மாநிலங்களில் நடைபெறும் நிகழ்ச்சிகளில் கலந்துகொண்டு ஜி.எஸ்.டி. வரி குறித்த சந்தேகங்களை தீர்த்துவைப்பார்கள்.

மேலும் ஜி.எஸ்.டி. கவுன்சில் கூட்டம் வருகிற 18–ந் தேதி நடைபெற உள்ளது. அதிலும் ஜி.எஸ்.டி. வரிக்கான விதிமுறைகள் குறித்து ஆலோசிக்கப்பட உள்ளது. ஜனாதிபதி தேர்தலுக்கான பொதுவேட்பாளரை தேர்வுசெய்வது தொடர்பாக மூன்று மூத்தமந்திரிகள் கொண்டகுழு அமைக்கப்பட்டுள்ளது. அந்தகுழு தேர்வு செய்யும் வேட்பாளரை கட்சியின் தலைவர் அறிவிப்பார்.

இவ்வாறு அவர் கூறினார்.

Leave a Reply

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

நாட்டின் ஆயிரக்கணக்கான வரலாற் ...

நாட்டின் ஆயிரக்கணக்கான வரலாற்றை உண்மையுடன் எழுதுங்கள் – அமித்ஷா “நம் நாட்டின் வரலாற்றை முகலாயர் காலத்தில் இருந்து ஆங்கிலேயர் ...

10 ஆண்டாக பேரழிவில் சிக்கியுள்ள ...

10 ஆண்டாக பேரழிவில் சிக்கியுள்ள டெல்லியை மீட்ப்போம் – பிரதமர் மோடி கடந்த 10 ஆண்டுகளாகவே தலைநகர் டில்லி மிகப் பெரிய ...

இந்தியாவிற்கு எதிரான விரோதப்ப ...

இந்தியாவிற்கு எதிரான விரோதப்போக்கு: அமெரிக்க நாளிதழுக்கு மத்திய அரசு கண்டனம் '' அமெரிக்காவைச் சேர்ந்த வாஷிங்டன் போஸ்ட் பத்திரிகை மற்றும் ...

ஹிந்து மற்றும் சனாதனம் குறித்த ...

ஹிந்து மற்றும் சனாதனம் குறித்த புரிதல் வேதனை: ஜக்தீப் தன்கர் ஹிந்து மற்றும் சனாதனம் குறித்த புரிதல் வேதனை அளிப்பதாக ...

எனக்காக வீடு கட்டவில்லை : பிரதம ...

எனக்காக வீடு கட்டவில்லை : பிரதமர் மோடி உருக்கம் 'எனக்காக வீடு கட்டியிருக்கலாம்; ஆனால் கட்டவில்லை' என டில்லியில் ...

வீரமங்கை வேலுநாச்சியார் பிறந் ...

வீரமங்கை வேலுநாச்சியார் பிறந்த நாளை முன்னிட்டு பிரதமர் மோடி புகழாரம் வீரமங்கை வேலுநாச்சியார் பிறந்த நாளை முன்னிட்டு, பிரதமர் மோடி ...

மருத்துவ செய்திகள்

வேம்புவின் மருத்துவக் குணம்

நுண்புழுக் கொல்லியாகவும், முறைநோய் வேப்பிலையை நன்றாக அரைத்து, அதன் சாற்றை எடுத்து தினமும் ...

வெங்காயத்தின் மருத்துவக் குணம்

ஆண்மைக் குறைவுள்ளவர்கள், வெள்ளை வெங்காயச் சாருடன் தேன் கலந்து இரண்டு, மூன்று வாரங்களுக்குக் ...

சிறுநீரகக் கோளாறுகள்

உடலின் நலத்தைக் காப்பதில் சிறுநீரகங்கள் மிகவும் சிறப்பு வாய்ந்தவை. சிறுநீரகம் சரியாக செயல்படவில்லை ...