வெள்ளத்தால் பாதித்த பகுதிகளை ஆய்வு செய்தார்

பிரதமர் நரேந்திரமோடி குஜராத் சென்று வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளை ஹெலிகாப்டர் மூலம் வான்வழி ஆய்வுசெய்ய உள்ளார்.

வடக்கு குஜராத்தில் வெள்ள பாதிப்புபகுதிகளை அவர் பார்வையிட உள்ளதாக பிரதமர் அலுவலகம் வெளியிட்டுள்ள செய்தியில் தெரிவிக்கப் பட்டுள்ளது. 

கடந்த சில நாட்களாக வடமாநிலங்களில் கனமழை பெய்துவருகிறது.  குஜராத் மாநிலத்தில் கனமழை காரணமாக பெரும்பாலான இடங்களில் வெள்ளம் சூழ்ந்துகாணப்படுகிறது. குறிப்பாக வடக்கு குஜராத்தில் பதான், பனாஸ் கந்தா மாவட்டங்களில் ஏராளமான கிராமங்கள் வெள்ளத்தில்மூழ்கி உள்ளன. அங்குள்ள மக்கள் வெளியேற்றப்பட்டு வருகிறார்கள்.

இந்தசூழ்நிலையில் குஜராத் முதல்வர் விஜய் ரூபானி, இன்று காலை தில்லியில் பிரதமர் நரேந்திரமோடியை சந்தித்தார். அப்போது, குஜராத்தில் பெய்துவரும் தொடர்மழை மற்றும் வெள்ளம் தொடர்பான நிலவரத்தை எடுத்துரைத்தார். மேலும் குஜராத் வந்து நிலைமையை பார்வையிடவும் அழைப்பு விடுத்தார்.

இதையடுத்து பிரதமர் நரேந்திர மோடி குஜராத்சென்று வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளை ஹெலிகாப்டர் மூலம் பார்வையிட முடிவு செய்துள்ளதாக உள்ளதாக பிரதமர் அலுவலகம் தெரிவித்துள்ளது.

Leave a Reply

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந் ...

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந்துள்ளேன் கோவையில் கஸ்தூரி நாயக்கன்பாளையம் பகுதியில் பிரச்சாரம் மேற்கொண்ட அண்ணாமலை ...

இது சாதாரண தேர்தல் அல்ல

இது சாதாரண தேர்தல் அல்ல பாஜக மற்றும் கூட்டணி வேட்பாளர்கள் ஒவ்வொருவரும் வெற்றிபெற்று, நாடாளுமன்றத்தில் ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாதத ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாததை 10 ஆண்டுகளில் செய்து முடித்தேன் காங்கிரஸ்கட்சி பிரிவினைவாதத்தை தூண்டியது. ஆனால், நான் பிராந்தியத்தில் அமைதி ...

பால் மற்றும் மின் கட்டண உயர்வே ...

பால் மற்றும்  மின் கட்டண உயர்வே திமுக -வின் சாதனை இந்தியாவின் பாதுகாப்பை பிரதமர் மோடி உறுதி செய்துள்ளார்'' என ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் வ ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் விரும்பும் மோடி பிரதமர் நரேந்திரமோடி மற்றும் மைக்ரோசாப்ட் நிறுவனர் பில்கேட்ஸ் இடையே ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் த ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் தொல்லை கொடுப்பதும் காங்கிரஸின்  கலாச்சாரம் நீதித்துறையின்மீது அழுத்தம் தரப்படுவதாகவும் நீதிமன்றங்கள் அவமதிப்படுவதாகவும் நூற்றுக்கணக்கான வழக்குரைஞர்கள் ...

மருத்துவ செய்திகள்

நல்லெண்ணெய் நல்ல மருந்தாகும்

எள்ளிலிருந்து எடுக்கப்படும் நல்லெண்ணெயால் நம்முடைய புத்திக்குத் தெளிவு உண்டாகும். கண்களுக்கு நல்ல குளிர்சியுண்டாகும். ...

ஆளிவிரையின் மருத்துவக் குணம்

இதன் இலை, பூ, விதை, வேர் அனைத்தும் மருந்துப் பொருளாகப் பயன்படுத்தப்படுகிறது. இது ...

பட்டினிச் சிகிச்சை

இயற்கையின் மிகச் சிறந்த ஆயுதம் பட்டினி. நோயை எதிர்க்கவும், குணமாக்கவும் இயற்கையாகவே உடல் ...